சவாலான விலையில் எதிர்பார்க்கப்படும் நிஸான் மேக்னைட்... புதிய ஸ்பை படங்கள்!

விலை குறைவான சப்- காம்பேக்ட் எஸ்யூவியாக எதிர்பார்க்கப்படும் நிஸான் மேக்னைட் எஸ்யூவி தொடர்ந்து இறுதிக் கட்ட சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது எமக்கு கிடைத்திருக்கும் புதிய ஸ்பை படங்கள் மற்றும் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சவாலான விலையில் எதிர்பார்க்கப்படும் நிஸான் மேக்னைட்... புதிய ஸ்பை படங்கள்!

4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் உருவாக்கப்படும் சப்- காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. ஏற்கனவே பல ஜாம்பவான்கள் உள்ள இந்த சந்தையில் பல புதிய மாடல்களும் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. இன்று கியா சொனெட் வந்துளள நிலையில், அடுத்த சில நாட்களில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சவாலான விலையில் எதிர்பார்க்கப்படும் நிஸான் மேக்னைட்... புதிய ஸ்பை படங்கள்!

இந்த வரிசையில், அடுத்ததாக நிஸான் மேக்னைட் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. சப்- காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக குறைவான விலை தேர்வாக நிஸான் மேக்னைட் வர இருப்பதால், அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

சவாலான விலையில் எதிர்பார்க்கப்படும் நிஸான் மேக்னைட்... புதிய ஸ்பை படங்கள்!

இந்த சூழலில், தற்போது பெங்களூரில் வைத்து புதிய நிஸான் மேக்னைட் இறுதிக் கட்ட சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. சில நாடுகளுக்கு முன்பு எமது கேமரா கண்களில் சிக்கிய நிஸான் மேக்னைட் மீண்டும் எமது வாசகர் கேமரா கண்களில் சிக்கி இருக்கிறது.

சவாலான விலையில் எதிர்பார்க்கப்படும் நிஸான் மேக்னைட்... புதிய ஸ்பை படங்கள்!

இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதற்கு குறிப்பிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கு முன்னர் குறிப்பிட்ட கிலோமீட்டர்கள் தூரம் ஓட்டி சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி ஆய்வுகள் செய்ய வேண்டியது கட்டாயம். அதன்பின்னர்தான், அராய் சான்று பெற முடியும்.

சவாலான விலையில் எதிர்பார்க்கப்படும் நிஸான் மேக்னைட்... புதிய ஸ்பை படங்கள்!

இதற்காகவே இப்போது நிஸான் மேக்னைட் எஸ்யூவி தொடர்ந்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவி இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

சவாலான விலையில் எதிர்பார்க்கப்படும் நிஸான் மேக்னைட்... புதிய ஸ்பை படங்கள்!

அண்மையில் கான்செப்ட் மாடலாக பார்வைக்கு வந்த இந்த புதி மேக்னைட் எஸ்யூவி டிசைனில் மிகச் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிஸான் - ரெனோ கூட்டணியின் CMF-A+ பிளாட்ஃபார்மில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் ரெனோ கிகர் எஸ்யூவியும் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சவாலான விலையில் எதிர்பார்க்கப்படும் நிஸான் மேக்னைட்... புதிய ஸ்பை படங்கள்!

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி ஸ்லைடான தோற்றத்தில் வர இருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், டட்சன் கார்களை போன்ற பெரிய க்ரில் அமைப்பு, பாடி கிளாடிங் சட்டங்கள், டியூவல் டோன் அலாய் வீல்கள், எல்இடி ஸ்பிளிட் டெயில் லைட்டுகள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுகளுடன் அசத்தலான தோற்றத்தில் வர இருக்கிறது.

சவாலான விலையில் எதிர்பார்க்கப்படும் நிஸான் மேக்னைட்... புதிய ஸ்பை படங்கள்!

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். உட்புறம் மிகவும் நவீன டிசைன் அம்சங்களுடன் வெகுவாக கவர்கிறது.

சவாலான விலையில் எதிர்பார்க்கப்படும் நிஸான் மேக்னைட்... புதிய ஸ்பை படங்கள்!

ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும். 360 டிகிரி கேமரா வசதியும் எதிர்பார்க்கப்படுகிறது.

சவாலான விலையில் எதிர்பார்க்கப்படும் நிஸான் மேக்னைட்... புதிய ஸ்பை படங்கள்!

ரெனோ ட்ரைபர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுடன் இந்த எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து, 95 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் பின்னர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan is gearing up to launch a new compact-SUV called the Magnite in the Indian market. Ahead of its launch, the Magnite has been spotted testing a couple of times.Latest spy images reveals a completely camouflaged mule spotted testing and the company could be carrying out the homologation testing that is required by ARAI.
Story first published: Friday, September 18, 2020, 16:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X