நிஸான் காரா இப்படி இருக்கு...! அட்டகாசமான தோற்றத்தில் புதிய மேக்னைட்டின் ஸ்பை படம் வெளியானது...

நிஸானின் அடுத்த அறிமுகமான மேக்னைட் கார் ஒன்று டாடா நெக்ஸானின் நீல நிறம் மற்றும் வெள்ளை நிற மேற்கூரையுடன் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

நிஸான் காரா இப்படி இருக்கு...! அட்டகாசமான தோற்றத்தில் புதிய மேக்னைட்டின் ஸ்பை படம் வெளியானது...

மறைப்பு எதுவுமில்லாமல் புதிய நிஸான் மேக்னைட் க்ராஸ்ஓவர் காரின் படம் இணையத்தில் முதன்முறையாக இப்போதுதான் வெளியாகியுள்ளது என்று நினைக்கிறேன். ட்யூல்-டோன் பெயிண்ட் அமைப்பில் இந்த படத்தில் மேக்னைட் கார் சும்மா அட்டகாசமாக உள்ளது.

நிஸான் காரா இப்படி இருக்கு...! அட்டகாசமான தோற்றத்தில் புதிய மேக்னைட்டின் ஸ்பை படம் வெளியானது...

இந்த படத்தை நாம் பார்க்க காரணமாக இருக்கும் டீம்பிஎச்பி செய்திதளத்திற்கு நன்றிகள் பல. இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பெக்ட் க்ராஸ்ஓவர் பிரிவில் கிக்ஸ் மாடலுக்கு கீழே நிலைநிறுத்தப்படவுள்ள இது நிஸானின் லைன்அப்பில் மிக மலிவான காராக விளங்கவுள்ளது.

நிஸான் காரா இப்படி இருக்கு...! அட்டகாசமான தோற்றத்தில் புதிய மேக்னைட்டின் ஸ்பை படம் வெளியானது...

ஜப்பானில் வடிவமைக்கப்பட்டாலும் இந்திய வாடிக்கையாளர்களின் தேவையையும் இந்த கார் பூர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது. ரெனால்ட்-நிஸான் கூட்டணியின் சிஎம்எஃப்-ஏ+ ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நிஸான் மாடல் ரெனால்ட்டின் அடுத்த அறிமுக மாடலான கிகரில் இருந்து பெரும்பான்மையான பாகங்களை பெற்றுள்ளது.

நிஸான் காரா இப்படி இருக்கு...! அட்டகாசமான தோற்றத்தில் புதிய மேக்னைட்டின் ஸ்பை படம் வெளியானது...

தற்போது வெளியாகியுள்ள படத்தில் மேக்னைட் கொண்டிருக்கும் நீல நிறத்தில் டாடா நெக்ஸானை பார்த்திருப்போம். இதற்கும் கூடுதலாக வெள்ளை நிற மேற்கூரை மற்றும் ட்யூல்-டோன் அலாய் சக்கரங்கள் நிஸானின் இந்த புதிய அறிமுக காரில் வழங்கப்பட்டுள்ளன.

நிஸான் காரா இப்படி இருக்கு...! அட்டகாசமான தோற்றத்தில் புதிய மேக்னைட்டின் ஸ்பை படம் வெளியானது...

இவற்றுடன் கருப்பு நிற க்ளாடிங் உடன் நீண்ட சக்கர ஆர்ச்கள், சில்வர் தொடுதலுடன் காரின் பக்கவாட்டு பகுதி & பின்பக்க பம்பர் உள்ளிட்டவற்றையும் இந்த படத்தில் பார்க்க முடிகிறது. பின்பக்கத்தை போன்றுதான் முன்பக்கமும் இருக்கும் என நம்புவோம். அகலமான பார்டர் லைன்கள் இந்த சிறிய க்ராஸ்ஓவர் காருக்கு எஸ்யூவி தோற்றத்தை வழங்குகின்றன.

நிஸான் காரா இப்படி இருக்கு...! அட்டகாசமான தோற்றத்தில் புதிய மேக்னைட்டின் ஸ்பை படம் வெளியானது...

சில்வர் ரூஃப் ரெயில்கள், எல்இடி ஸ்டாப் விளக்குடன் மிதப்பது போன்ற மேற்கூரை உள்ளிட்டவற்றை கொண்ட இந்த நிஸான் காரில் மேக்னைட் பெயர் ஆங்கிலத்தில் பின்பக்க கதவில் வழங்கப்பட்டுள்ளது. பின் இருக்கை பயணிகளுக்கும் ஹெட்ரெஸ்ட் வழங்கப்பட்டுள்ளதால் இது மேக்னைட்டின் டாப் லைன் ட்ரிம்-ஆக இருக்கலாம்.

நிஸான் காரா இப்படி இருக்கு...! அட்டகாசமான தோற்றத்தில் புதிய மேக்னைட்டின் ஸ்பை படம் வெளியானது...

மற்றப்படி காரின் உட்புறத்தை வெளிக்காட்டும் விதத்திலான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. புதிய நிஸான் மேக்னைட்டில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இரு விதமான ஆற்றல்களை அதிகப்பட்சமாக வழங்கும் விதத்தில் வழங்கப்படவுள்ளது. இந்த என்ஜின் உடன் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

நிஸான் காரா இப்படி இருக்கு...! அட்டகாசமான தோற்றத்தில் புதிய மேக்னைட்டின் ஸ்பை படம் வெளியானது...

2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிஸான் மேக்னைட்டிற்கு மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300, கியா சொனெட் உள்ளிட்டவை முக்கிய போட்டி கார்களாக விளங்கும். மேக்னைட்டின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.5 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite Spied In Tata Nexon Blue With White Roof – First Undisguised Photo
Story first published: Friday, October 9, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X