புதிய அலாய் சக்கரங்களுடன் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி மீண்டும் சோதனை...

நிஸான் நிறுவனத்தின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலான மேக்னைட் மீண்டும் ஒரு முறை சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய அலாய் சக்கரங்களுடன் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி மீண்டும் சோதனை...

இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் எஸ்யூவி பிரிவு புதிய தயாரிப்புகளால் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதன் காரணமாக முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த பிரிவில் தங்களது ஒரு தயாரிப்பையாவது சந்தைப்படுத்தி வருகின்றன.

புதிய அலாய் சக்கரங்களுடன் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி மீண்டும் சோதனை...

இந்த வகையில் நிஸான் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார் தான் மேக்னைட். முன்னதாக நிஸான் நிறுவனம் மேக்னைட் காரை கான்செப்ட் மாடலாக டிஜிட்டலில் வெளியிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இதன் சோதனை ஓட்ட ஸ்பை படங்களை ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

புதிய அலாய் சக்கரங்களுடன் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி மீண்டும் சோதனை...

இதற்கு முன் வெளியாகி இருந்த ஸ்பை படங்களை போல் இந்த ஸ்பை படங்ககளிலும் கார் முழுவதும் மறைக்கப்பட்டிருந்தாலும், சில கூடுதலான தகவல்கள் கிடைத்துள்ளன. உதாரணத்திற்கு, முந்தைய சோதனை மேக்னைட் கார் அதன் எண்ட்ரீ/மிட் வேரியண்ட்.

புதிய அலாய் சக்கரங்களுடன் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி மீண்டும் சோதனை...

ஆனால் தற்போதைய சோதனை கார் டாப் லைன் ட்ரிம் ஆகும். இதன் காரணமாக காரில் ஸ்போர்டியான அலாய் சக்கரங்கள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட மேற்கூரையை காண முடிகிறது. ரெனால்ட் நிஸான் கூட்டணியின் சிஎம்எஃப்-ஏ+ ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த கார் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது.

புதிய அலாய் சக்கரங்களுடன் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி மீண்டும் சோதனை...

இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் பெரும்பாலான பாகங்களை ரெனால்ட்டின் எதிர்கால கிகர் மாடலில் இருந்து பெற்றுள்ளது. இந்த பாகங்களில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினும் அடங்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎச்பி மற்றும் 150 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

புதிய அலாய் சக்கரங்களுடன் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி மீண்டும் சோதனை...

இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளன. டீசல் என்ஜின் தேர்வை தற்போதைக்கு மேக்னைட் மற்றும் கிகர் மாடல்களில் ரெனால்ட் மற்றும் நிஸான் நிறுவனங்கள் வழங்கும் எண்ணத்தில் இல்லை.

புதிய அலாய் சக்கரங்களுடன் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி மீண்டும் சோதனை...

ஹூண்டாய் வென்யூ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 போன்ற சவுகரியத்திற்கு பிரபலமான கார்களை எதிர்த்து விற்பனையை துவங்கவுள்ளதால் மேக்னைட் மாடலில் அதிகப்படியான வசதிகளை நிஸான் நிறுவனம் வழங்கியிருக்கும்.

புதிய அலாய் சக்கரங்களுடன் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி மீண்டும் சோதனை...

இதன் தற்போதைய சோதனை காரான டாப் ட்ரிம்-ல் பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், சில இணைப்பு தொழிற்நுட்பங்கள், ஆட்டோமேட்டிக்

க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் பவர்டு இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கலாம்.

புதிய அலாய் சக்கரங்களுடன் நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி மீண்டும் சோதனை...

பாதுகாப்பிற்கு குறைந்தது ஏபிஎஸ் மற்றும் இரட்டை காற்றுப்பைகளையாவது காரில் எதிர்பார்க்கலாம். கொரோனா தாக்கத்தினால் முன்பே வெளியாகவிருந்த புதிய மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி மாடலை வரும் பண்டிக்கை காலத்தில் நிஸான் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தும் என கூறப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite spied again – Reveals new Alloy Wheels, Rear Spoiler
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X