இறுதிக் கட்ட சோதனையில் நிஸான் மேக்னைட்: எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

நிஸான் மேக்னைட் எஸ்யூவி மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட சாலை சோதனைகளில் வைத்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் எக்ஸ்க்ளூசிவ் வீடியோ எமது கேமரா கண்களில் சிக்கி இருக்கிறது. வீடியோவையும், கூடுதல் தகவல்களையும் தொடர்ந்து பார்க்கலாம்.

இறுதிக் கட்ட சோதனையில் நிஸான் மேக்னைட்: எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நிஸான் நிறுவனம் தனது மேக்னைட் என்ற புதிய எஸ்யூவி மாடலை விரைவில் களமிறக்க உள்ளது. சந்தைப் போட்டி நிறைந்த இந்த சந்தையில் மிக சவாலான விலையில் புதிய மேக்னைட் எஸ்யூவி களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிக் கட்ட சோதனையில் நிஸான் மேக்னைட்: எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பான ஸ்பை படங்கள், வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

இறுதிக் கட்ட சோதனையில் நிஸான் மேக்னைட்: எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

அண்மையில் கான்செப்ட் எனப்படும் மாதிரி மாடலும் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில், டிசைனிலும், வசதிகளிலும் மிகச் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிகிறது. இந்த நிலையில், பெங்களூர் புறநகர் பகுதியில் வைத்து நிஸான் மேக்னைட் எஸ்யூவி சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

அவ்வாறு சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நிஸான் மேக்னைட் எஸ்யூவி எமது கேமரா கண்களில் சிக்கி இருக்கிறது. பெங்களூரில் வைத்து சோதனை செய்யப்பட்டு வரும் நிஸான் மேக்னைட் எஸ்யூவி ஸ்டீல் சக்கரங்கள் கொண்டதாக இருக்கிறது. எனவே, இது பேஸ் வேரியண்ட்டாக இருக்கும்.

இறுதிக் கட்ட சோதனையில் நிஸான் மேக்னைட்: எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், கருப்பு வண்ண பாடி கிளாடிங் சட்டங்கள், இரட்டை வண்ண அலாய் சக்கரங்கள், எல்இடி ஸ்பிளிட் டெயில் லைட்டுகள், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுகள் ஆகியவை இடம்பெறுகிறது. ரூஃப் ரெயில்கள், சில்வர் பாகங்கள், கருப்பு வண்ண ரியர் வியூ மிரர்கள் ஆகியவையும் சிறப்பு சேர்க்கின்றன.

இறுதிக் கட்ட சோதனையில் நிஸான் மேக்னைட்: எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

இறுதிக் கட்ட சோதனையில் நிஸான் மேக்னைட்: எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

ரெனோ ட்ரைபர் எம்பிவி காரில் பயன்படுத்தப்படும் அதே 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியிலும் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் வர இருக்கிறது.

இறுதிக் கட்ட சோதனையில் நிஸான் மேக்னைட்: எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

எதிர்காலத்தில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும்.

இறுதிக் கட்ட சோதனையில் நிஸான் மேக்னைட்: எக்ஸ்க்ளூசிவ் வீடியோ!

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். ஆனால், அதனைவிட குறைவான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
We spotted the Nissan Magnite being tested on the outskirts of Bangalore. As seen in the pictures the test vehicle is fully wrapped, but there is one thing visible and which makes us think that it is a lower variant and those are the steel wheels.
Story first published: Wednesday, September 16, 2020, 10:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X