நிஸான் மேக்னைட் எஸ்யூவி அறிமுகத்திற்கு குறுக்கே நிற்கும் கொரோனா!

கொரோனா ஆட்டம் போட்டு வருவதால், நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் வருகையில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தற்போது கிடைத்துள்ள தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

நிஸான் மேக்னைட் எஸ்யூவி அறிமுகத்திற்கு குறுக்கே நிற்கும் கொரோனா!

காம்பேக்ட் எஸ்யூவி கார் மார்க்கெட்டில் ஏற்கனவே பல மாடல்கள் வரிசை கட்டி விட்டன. அனைத்து மாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருப்பது இந்த ரக கார்களின் முக்கிய வர்த்தக விஷயமாக கார் நிறுவனங்கள் கவனிக்கின்றன.

இந்த நிலையில், கியா சொனெட், ரெனோ கிகர், நிஸான் மேக்னைட் உள்ளிட்ட மாடல்களும் மிக விரைவில் இந்த ரகத்தில் களம் புக காத்திருக்கின்றன.

நிஸான் மேக்னைட் எஸ்யூவி அறிமுகத்திற்கு குறுக்கே நிற்கும் கொரோனா!

இந்தநிலையில், நிஸான் நிறுவனம் உருவாக்கி இருக்கும் மேக்னைட் எஸ்யூவி வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள பல நிஸான் எஸ்யூவி வகை கார்களின் டிசைன் அம்சங்களுடன் மிக குறைவான பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற காரணத்தால், அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

நிஸான் மேக்னைட் எஸ்யூவி அறிமுகத்திற்கு குறுக்கே நிற்கும் கொரோனா!

மேலும், டிசைனும், வசதிகளும் மிகச் சிறப்பானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொரோனா பிரச்னை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேக்னைட் வருகைக்கு முட்டுக் கட்டை போட்டு வருகிறது.

நிஸான் மேக்னைட் எஸ்யூவி அறிமுகத்திற்கு குறுக்கே நிற்கும் கொரோனா!

வரும் பண்டிகை கால வரவாக இருந்த நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் அறிமுகம் வரும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக ஆட்டோகார் இந்திய தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதனால், இந்த கார் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

நிஸான் மேக்னைட் எஸ்யூவி அறிமுகத்திற்கு குறுக்கே நிற்கும் கொரோனா!

தற்போது கொரோனா வைரஸ் பிரச்னை கட்டுப்படாமல் அதிகரித்து வருவதால், கார் மார்க்கெட் தள்ளாடி வருகிறது. இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு மேலும் பல மாதங்கள் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்தே, மேக்னைட் எஸ்யூவியின் அறிமுகத்தை சில மாதங்கள் தள்ளி வைக்க நிஸான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நிஸான் மேக்னைட் எஸ்யூவி அறிமுகத்திற்கு குறுக்கே நிற்கும் கொரோனா!

நிஸான் நிறுவனத்தின் கார் மாடல்கள் இந்தியாவில் பெரிதாக சாதிக்க முடியாமல் தடுமாறி வருகின்றன. இந்த நிலையில், மேக்னைட் எஸ்யூவியை மிக முக்கிய மாடலாக தனது வர்த்தகத்தில் நிலைநிறுத்த நிஸான் திட்டமிட்டுள்ளது. எனவே, தற்போது மேக்னைட் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க நிஸான் விரும்பவில்லை.

நிஸான் மேக்னைட் எஸ்யூவி அறிமுகத்திற்கு குறுக்கே நிற்கும் கொரோனா!

நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் 72 எச்பி பவரை வழங்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்படும். மேலும், 95 எச்பி பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.

நிஸான் மேக்னைட் எஸ்யூவி அறிமுகத்திற்கு குறுக்கே நிற்கும் கொரோனா!

ரூ.6.50 லட்சம் ஆரம்ப விலையில் நிஸான் மேக்னைட் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan India was all set to introduce its all-new Magnite SUV in the Indian market in August 2020. The new Nissan Magnite was said to be positioned in the compact-SUV segment, rivalling the likes of the Maruti Vitara Brezza, Hyundai Venue and the upcoming Kia Sonet.
Story first published: Saturday, June 20, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X