இத இதத்தான எதிர்பார்த்து காத்து கிடக்கிறோம்... வாங்க ராஜா, சீக்கிரம் வாங்க!

பட்ஜெட் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் உற்பத்திப் பணிகள் சென்னையிலுள்ள ரெனோ - நிஸான் கூட்டணி ஆலையில் முறைப்படி துவங்கப்பட்டுள்ளது.

இத இதத்தான எதிர்பார்த்து காத்து கிடக்கிறோம்... வாங்க ராஜா, சீக்கிரம் வாங்க!

நிஸான் மேக்னைட் எஸ்யூவி சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிக குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஸ்டைலான டிசைன், அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் குறைவான விலையில் வருவதால், பட்ஜெட் விலையில் எஸ்யூவி வாங்க திட்டமிடுவோரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இத இதத்தான எதிர்பார்த்து காத்து கிடக்கிறோம்... வாங்க ராஜா, சீக்கிரம் வாங்க!

அதுவும் கொரோனாவால் தனிநபர் வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ள இந்த வேளையில் இந்த புதிய எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை சரியான பட்ஜெட்டில் பூர்த்தி செய்யும் என தெரிகிறது.

இத இதத்தான எதிர்பார்த்து காத்து கிடக்கிறோம்... வாங்க ராஜா, சீக்கிரம் வாங்க!

இந்த நிலையில், நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் அண்மையில் இந்தியாவில் வைத்து பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த எஸ்யூவி மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இத இதத்தான எதிர்பார்த்து காத்து கிடக்கிறோம்... வாங்க ராஜா, சீக்கிரம் வாங்க!

இந்த சூழலில், தற்போது சென்னை அருகே ஒரகடத்தில் உள்ள ரெனோ - நிஸான் கூட்டணியின் கார் ஆலையில் மேக்னைட் எஸ்யூவியின் உற்பத்தி முறைப்படி துவங்கப்பட்டுள்ளது. இதனால், இந்த புதிய மாடல் இந்த மாதமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, டெலிவிரிப் பணிகளும் துவங்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இத இதத்தான எதிர்பார்த்து காத்து கிடக்கிறோம்... வாங்க ராஜா, சீக்கிரம் வாங்க!

அதிக சந்தைப் போட்டி நிறைந்த சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் விலை குறைவான தேர்வாக வந்தாலும், அதிக மதிப்பை வழங்கும் விதத்தில் ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகளை இந்த கார் பெற்றிருக்கிறது.

இத இதத்தான எதிர்பார்த்து காத்து கிடக்கிறோம்... வாங்க ராஜா, சீக்கிரம் வாங்க!

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கன்ட்ரோல், 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் ஆகிய வசதிகள் கவர்கின்றன. அத்துடன் நிஸான் கனெக்ட் தொழில்நுட்ப வசதியும் மிக முக்கியமானதாக பார்க்கப்படும். எல்இடி பை புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் இடம்பெறுகிறது. அத்துடன், ஜேபில் ஆடியோ சிஸ்டம் வயர்லெஸ் சார்ஜர், ஏர்பியூரிஃபயர், மூட் லைட் சிஸ்டம், ஆகியவை ஆப்ஷனலாக வழங்கப்படும்.

இத இதத்தான எதிர்பார்த்து காத்து கிடக்கிறோம்... வாங்க ராஜா, சீக்கிரம் வாங்க!

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி ஓனிக்ஸ் பிளாக், சான்ட்ஸ்டோன் பிரவுன், பிளேர் கார்னெட் ரெட், பிளேடு சில்வர், ஸ்டோர்ம் ஒயிட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் பெற முடியும். விவிட் புளூ- ஸ்டோர்ம் ஒயிட், பிளேர் கார்னெட் ரெட் - ஓனிக்ஸ் பிளாக் மற்றும் பியர்ல் ஒயிட் - ஓயிட் பிளாக் ஆகிய இரட்டை வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

இத இதத்தான எதிர்பார்த்து காத்து கிடக்கிறோம்... வாங்க ராஜா, சீக்கிரம் வாங்க!

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி ரூ.5.70 லட்சம் முதல் ரூ.6 லட்சம் இடையிலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும். இருப்பினும், விலை, வசதிகள் அடிப்படையில் இது தனித்துவமான தேர்வாக அமையும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite SUV production begins in Chennai plant and expected launch in India by this month.
Story first published: Monday, November 2, 2020, 17:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X