சிவிடி கியர்பாக்ஸ் உடன் விற்பனைக்கு வரும் புதிய நிஸான் மேக்னைட்... உறுதிப்படுத்திய ஸ்பை படங்கள்...

மிக விரைவில் உலகளாவிய அறிமுகத்தை காணவுள்ள நிஸான் மேக்னைட் எஸ்யூவி காரின் புதிய ஸ்பை படங்கள் தொலைக்காட்சி கமர்ஷியல் (டிவிசி) வீடியோவிற்கான படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகியுள்ளன. அதன் மூலம் தெரியவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சிவிடி கியர்பாக்ஸ் உடன் விற்பனைக்கு வரும் புதிய நிஸான் மேக்னைட்... உறுதிப்படுத்திய ஸ்பை படங்கள்...

தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் டிவிசி வீடியோவிற்கான படப்பிடிப்பு என்பதால் ஆட்டோகார் இந்தியா ஃபோரும் செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள இந்த படங்களில் கார் எந்தவொரு மறைப்பும் இல்லாமல் உள்ளது.

சிவிடி கியர்பாக்ஸ் உடன் விற்பனைக்கு வரும் புதிய நிஸான் மேக்னைட்... உறுதிப்படுத்திய ஸ்பை படங்கள்...

இதனால் காரில் வழங்கப்பட்டுள்ள சிவிடி முத்திரையை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த முத்திரைக்கான அர்த்தம் என்னவென்றால், புதிய நிஸான் மேக்னைட் கார் இரு-பெடல் மற்றும் மூன்று-பெடல் என்ற இரு விதமான தேர்வுகளில் வழங்கப்படலாம் என்பதாகும்.

சிவிடி கியர்பாக்ஸ் உடன் விற்பனைக்கு வரும் புதிய நிஸான் மேக்னைட்... உறுதிப்படுத்திய ஸ்பை படங்கள்...

ரெனால்ட்- நிஸான் கூட்டணிக்கு பிறகு வெளிவரும் முதல் வாகனமான மேக்னைட்டில் 1.0 லிட்டர் டிசெ 100 டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி (இந்த ஸ்பை படங்களின் மூலம் உறுதியானது) என்ற கியர்பாக்ஸ் தேர்வுடன் வழங்கப்படவுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி மற்றும் 160 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

சிவிடி கியர்பாக்ஸ் உடன் விற்பனைக்கு வரும் புதிய நிஸான் மேக்னைட்... உறுதிப்படுத்திய ஸ்பை படங்கள்...

இந்த வருட துவக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் ரெனால்ட் நிறுவனம் சார்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் ரெனால்ட்டின் எதிர்கால அறிமுகங்களான கிகர் சப்-4 மீட்டர் எஸ்யூவி மற்றும் ட்ரைபர் எம்பிவி கார்களிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவிடி கியர்பாக்ஸ் உடன் விற்பனைக்கு வரும் புதிய நிஸான் மேக்னைட்... உறுதிப்படுத்திய ஸ்பை படங்கள்...

இந்த ஸ்பை படங்களில் மேக்னைட் காரை சிவப்பு நிறத்தில் பார்க்க முடிகிறது. இந்த நிறத்தில் தான் இந்த எஸ்யூவி கார் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மேலும் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள், சுற்றிலும் சில்வர் & கருப்பு நிறத்தில் க்ளாடிங், சில்வர் நிற கதவு கைப்பிடிகள், பின்பக்க வைபர் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பின்பக்கம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகளுடன் கார் காட்சியளிக்கிறது.

சிவிடி கியர்பாக்ஸ் உடன் விற்பனைக்கு வரும் புதிய நிஸான் மேக்னைட்... உறுதிப்படுத்திய ஸ்பை படங்கள்...

ஏனெனில் இந்த படங்களில் காட்டப்பட்டிருப்பது மேக்னைட்டின் டாப் வேரியண்ட் ஆகும். சப்-4 மீட்டர் பி-எஸ்யூவி பிரிவு இந்திய சந்தையில் வேகமாக வளர்ச்சியினை கண்டு வருகிறது. இந்த பிரிவில் தற்சமயம் டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட், மாருதி பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், ஹோண்டா டபிள்யூஆர்-வி மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 என்ற 7 கார் மாடல்கள் உள்ளன.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite CVT spied during TVC shoot
Story first published: Wednesday, October 14, 2020, 1:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X