கிலோமீட்டருக்கு 29 பைசா மட்டுமே... நிஸான் மேக்னைட்டிற்கு அசத்தல் பராமரிப்புத் திட்டம்.. புக்கிங்கும் குவிகிறது

அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிஸான் மேக்னைட் எஸ்யூவிக்கு புக்கிங் தொடர்ந்து குவிந்து வருகிறது. இது நிஸான் நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. மேலும், இந்த காருக்கு குறைவான கட்டணத்தில், சிறப்பு பராமரிப்புத் திட்டங்களையும் நிஸான் அறிவித்துள்ளது.

கிலோமீட்டருக்கு 29 பைசா மட்டுமே... நிஸான் மேக்னைட்டிற்கு அசத்தல் பராமரிப்புத் திட்டம்... புக்கிங்கும் பட்டையை கிளப்புகிறது!

இந்தியாவின் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் நிஸான் மேக்னைட் எஸ்யூவி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அட்டகாசமான டிசைன், அருமையான வசதிகள், சிறப்பான எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் ரூ.4.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்தது. இதனால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கிலோமீட்டருக்கு 29 பைசா மட்டுமே... நிஸான் மேக்னைட்டிற்கு அசத்தல் பராமரிப்புத் திட்டம்... புக்கிங்கும் பட்டையை கிளப்புகிறது!

மேலும், வரும் 31ந் தேதி வரை இந்த சிறப்பு ஆரம்ப விலை என்பதால், வாடிக்கையாளர்கள் அடித்துப் பிடித்து முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், நிஸான் மேக்னைட் காருக்கான முன்பதிவு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

கிலோமீட்டருக்கு 29 பைசா மட்டுமே... நிஸான் மேக்னைட்டிற்கு அசத்தல் பராமரிப்புத் திட்டம்... புக்கிங்கும் பட்டையை கிளப்புகிறது!

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 15 நாட்களில் 15,000 பேர் புதிய மேக்னைட் எஸ்யூவியை முன்பதிவு செய்துள்ளதாக நிஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 1.50 லட்சம் பேர் இந்த காரை வாங்குவது குறித்து விசாரணை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிலோமீட்டருக்கு 29 பைசா மட்டுமே... நிஸான் மேக்னைட்டிற்கு அசத்தல் பராமரிப்புத் திட்டம்... புக்கிங்கும் பட்டையை கிளப்புகிறது!

இந்த கார் கொடுக்கும் பணத்திற்கு மிகவும் மதிப்புவாய்ந்த மாடலாக இருப்பதால், அதிக புக்கிங் கிடைத்து வருகிறது. இது நிச்சயம் நிஸான் நிறுவனத்தின் வர்த்தகத்திற்கு பெரும் உறுதுணையாக மாறி இருக்கிறது.

கிலோமீட்டருக்கு 29 பைசா மட்டுமே... நிஸான் மேக்னைட்டிற்கு அசத்தல் பராமரிப்புத் திட்டம்... புக்கிங்கும் பட்டையை கிளப்புகிறது!

இந்த சூட்டோடு சூடாக, புதிய பராமரிப்புத் திட்டங்களையும் மேக்னைட் எஸ்யூவிக்கு நிஸான் அறிவித்துள்ளது. அதாவது, முதல் 50,000 கிமீ வரை ஒரு கிலோமீட்டருக்கு வெறும் 29 பைசா என்ற அளவிலான பராமரிப்பு கட்டணத் திட்டங்களை நிஸான் வழங்குகிறது.

கிலோமீட்டருக்கு 29 பைசா மட்டுமே... நிஸான் மேக்னைட்டிற்கு அசத்தல் பராமரிப்புத் திட்டம்... புக்கிங்கும் பட்டையை கிளப்புகிறது!

கோல்டு மற்றும் சில்வர் என்ற பெயர்களில் இந்த திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இதில், கோல்டு திட்டத்தில் முழுமையான பராமரிப்புப் பணிகளும், சில்வர் திட்டத்தில் அடிப்படை பராமரிப்புப் பணிகளும் செய்து தரப்படும். கோல்டு திட்டத்தின் மூலமாக பராமரிப்பு செலவில் 22 சதவீதம் வரை வாடிக்கையாளர்கள் மிச்சப்படுத்த முடியும் என்று நிஸான் தெரிவிக்கிறது.

கிலோமீட்டருக்கு 29 பைசா மட்டுமே... நிஸான் மேக்னைட்டிற்கு அசத்தல் பராமரிப்புத் திட்டம்... புக்கிங்கும் பட்டையை கிளப்புகிறது!

தவிரவும், நிஸான் மேக்னைட் எஸ்யூவிக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கூடுதல் வாரண்டியையும் மிக குறைவான கட்டணத்தில் வழங்குவதாகவும் அந்நிறுவனம் கூறி இருக்கிறது.

கிலோமீட்டருக்கு 29 பைசா மட்டுமே... நிஸான் மேக்னைட்டிற்கு அசத்தல் பராமரிப்புத் திட்டம்... புக்கிங்கும் பட்டையை கிளப்புகிறது!

நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 360 டிகிரி கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை டாப் வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

கிலோமீட்டருக்கு 29 பைசா மட்டுமே... நிஸான் மேக்னைட்டிற்கு அசத்தல் பராமரிப்புத் திட்டம்... புக்கிங்கும் பட்டையை கிளப்புகிறது!

நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் வயர்லெஸ் சார்ஜர், ஏர் பியூரிஃபயர், ஜேபில் மியூசிக் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கிலோமீட்டருக்கு 29 பைசா மட்டுமே... நிஸான் மேக்னைட்டிற்கு அசத்தல் பராமரிப்புத் திட்டம்... புக்கிங்கும் பட்டையை கிளப்புகிறது!

இந்த எஸ்யூவியில் 71 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 99 பிஎச்பி பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். டர்போ பெட்ரோல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக கிடைக்கும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan India announces its best ever, lowest-in-class maintenance cost for the all-new Nissan Magnite at just 29 paise/km (for 50,000 kms).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X