சுண்டி இழுக்கும் டிசைன்... விரைவில் பொது பார்வைக்கு வரும் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி!

மிக குறைவான பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி உலக அளவில்பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கும் தேதி விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

 சுண்டி இழுக்கும் டிசைன்... பொது பார்வைக்கு வரும் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி!

இந்தியாவில் 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்படும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் சந்தையில் அதிக வர்த்தக வளம் உள்ளது. இதனால், இந்த மார்க்கெட்டில் பெரும்பாலான கார் நிறுவனங்கள் இறங்கி உள்ளன. அந்த வரிசையில், நிஸான் நிறுவனமும் மேக்னைட் என்ற எஸ்யூவியை களமிறக்க உள்ளது.

 சுண்டி இழுக்கும் டிசைன்... பொது பார்வைக்கு வரும் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி!

அண்மையில் கான்செப்ட் மாடலாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட இந்த எஸ்யூவி தற்போது தயாரிப்பு நிலைக்கு உகந்தமாக மேம்படுத்தப்பட்டுவிட்டது. வரும் 21ந் தேதி இந்த புதிய மாடல் இந்தியாவில் வைத்து உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

 சுண்டி இழுக்கும் டிசைன்... பொது பார்வைக்கு வரும் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி!

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மால் மிக மிக வசீகரமான தோற்றத்தில் டிசைன் செய்யப்பட்டு இருக்கும் என்பது தெரிகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள படங்களில் பிரம்மாண்ட முக க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட், பூமராங் வடிவிலான பகல்நேர விளக்குகள், ஸ்கிட் பிளேட்டுகள், பெரிய புகைப்போக்கி அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 சுண்டி இழுக்கும் டிசைன்... பொது பார்வைக்கு வரும் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி!

இந்த புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் கருப்பு வண்ண இன்டீரியருடன் சிவப்பு வண்ண அலங்கார பாகங்களுடன் பிரிமீயமாக இருக்கும் என்பது தெரிகிறது. இரட்டை வண்ண டேஷ்போர்டு, பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

 சுண்டி இழுக்கும் டிசைன்... பொது பார்வைக்கு வரும் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி!

இந்த புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. இந்த எஞ்சினுடன் மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

 சுண்டி இழுக்கும் டிசைன்... பொது பார்வைக்கு வரும் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி!

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி ஜப்பானில் உள்ள நிஸான் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் கார் சந்தையை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. டோஷிகி புரோவிங் என்ற சோதனை களத்தில் வைத்து ஆய்வுகள் செய்யப்பட்டு தயாரிப்பு நிலைக்கு வந்துள்ளது.

 சுண்டி இழுக்கும் டிசைன்... பொது பார்வைக்கு வரும் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி!

ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. கியா சொனெட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan is all set to unveil the all new Magnite sub compact SUV in India on 21 October, 2020.
Story first published: Saturday, October 10, 2020, 10:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X