சென்னையில் பரவாயில்லை!! டெல்லியில் நிஸான் மேக்னைட்டை டெலிவிரி எடுக்க 8 மாதம் காத்திருக்க வேண்டும்

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவருவதால் நிஸான் மேக்னைட்டின் காத்திருப்பு காலம் 8 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

சென்னையில் பரவாயில்லை!! டெல்லியில் நிஸான் மேக்னைட்டை டெலிவிரி எடுக்க 8 மாதம் காத்திருக்க வேண்டும்

கடந்த டிசம்பர் 2ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட நிஸான் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி எதிர்பார்த்ததை விடவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னையில் பரவாயில்லை!! டெல்லியில் நிஸான் மேக்னைட்டை டெலிவிரி எடுக்க 8 மாதம் காத்திருக்க வேண்டும்

டிசம்பர் 2ஆம் தேதியில் இருந்து இதுவரை மட்டுமே 5000க்கும் மேற்பட்டோர் இந்த நிஸான் காரை முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, முன்பதிவு செய்து கார் டெலிவிரிக்காக காத்திருப்பவர்களுக்கான காத்திருப்பு காலத்தை நிஸான் தற்போது 8 மாதம் வரையில் உயர்த்தியுள்ளது.

சென்னையில் பரவாயில்லை!! டெல்லியில் நிஸான் மேக்னைட்டை டெலிவிரி எடுக்க 8 மாதம் காத்திருக்க வேண்டும்

அதிகப்பட்சமாக டெல்லி ஷோரூம்கள் மூலமாக முன்பதிவு செய்வோர் தங்களது கார் டெலிவிரிக்காக 8 மாதம் வரையில் காத்திருக்க வேண்டும். குறைந்தப்பட்சமாக கொல்கத்தா ஷோரூம்களில் மேக்னைட்டை முன்பதிவு செய்பவர்கள் அதிகப்பட்சமாகவே 3 மாதத்தில் தங்களது காரை டெலிவிரி பெற்று கொள்ளலாம்.

சென்னையில் பரவாயில்லை!! டெல்லியில் நிஸான் மேக்னைட்டை டெலிவிரி எடுக்க 8 மாதம் காத்திருக்க வேண்டும்
City Waiting Period
Chennai Up to 3.5 months
Bengaluru Up to 4 months
Mumbai Up to 3.5 months
Delhi Up to 8 months
Pune NA
Kolkata Up to 3 months
Hyderabad Up to 4 months

நமது சென்னை வாடிக்கையாளர்களுக்கு 3.5 மாதங்கள் வரையில் காத்திருப்பு காலங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நிஸான் மேக்னைட்டின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பரவாயில்லை!! டெல்லியில் நிஸான் மேக்னைட்டை டெலிவிரி எடுக்க 8 மாதம் காத்திருக்க வேண்டும்

இந்த விலையில் மேக்னைட்டின் ஆரம்ப நிலை வேரியண்ட் எக்ஸ்இ கிடைக்கிறது. அட்டகாசமான தோற்றத்தில் போதுமான மாடர்ன் வசதிகளுடன் இவ்வளவு குறைவான விலையில் வழங்கப்படுவதால், மேக்னைட் எக்ஸ்இ வேரியண்ட்டை தான் பலரும் முன்பதிவு செய்கின்றனர்.

சென்னையில் பரவாயில்லை!! டெல்லியில் நிஸான் மேக்னைட்டை டெலிவிரி எடுக்க 8 மாதம் காத்திருக்க வேண்டும்

அதுமட்டுமில்லாமல் 2021 ஜனவரி மாதத்தில் மேக்னைட்டின் ஆரம்ப விலை அதிகரிக்கப்பட்டுவிடும் என காரின் அறிமுகத்தின்போதே நிஸான் நிறுவனம் தெரிவித்திருந்ததால் பேஸ் எக்ஸ்இ வேரியண்ட்டை இப்போதே குறைவான விலையில் வாங்க வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.

சென்னையில் பரவாயில்லை!! டெல்லியில் நிஸான் மேக்னைட்டை டெலிவிரி எடுக்க 8 மாதம் காத்திருக்க வேண்டும்

இதனால் இந்த வேரியண்ட்டிற்குதான் சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் காத்திருப்பு காலம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேக்னைட்டின் மத்திய மற்றும் டாப் வேரியண்ட்கள் சிறிது குறைவான காத்திருப்பு காலத்தையே பெற்றுள்ளன.

சென்னையில் பரவாயில்லை!! டெல்லியில் நிஸான் மேக்னைட்டை டெலிவிரி எடுக்க 8 மாதம் காத்திருக்க வேண்டும்

குறிப்பாக, விலைமிக்க வேரியண்ட்களை டெல்லியிலேயே வெறும் 45 நாட்களில் டெலிவிரி எடுத்து விடலாம். நிஸான் மேக்னைட்டின் எக்ஸ்ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.4.99 லட்சத்தில் இருந்து ரூ.9.59 லட்சம் வரையில் உள்ளன.

சென்னையில் பரவாயில்லை!! டெல்லியில் நிஸான் மேக்னைட்டை டெலிவிரி எடுக்க 8 மாதம் காத்திருக்க வேண்டும்

இத்தகைய குறைவான விலைகளினால் டாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களின் பிரியர்கள் மட்டுமில்லாமல் ஹூண்டாய் ஐ20 போன்ற ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் பிரியர்களும் மேக்னைட்டின் பக்கம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite Sub-4 Metre SUV’s Waiting Period Now Up To 8 Months Table Code
Story first published: Friday, December 18, 2020, 21:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X