புதிய நிஸான் மேக்னைட் காரை 8 நிறங்களில் வாங்கலாம்! எட்டுமே நல்லா இருக்கே

நிஸான் மேக்னைட்டிற்கு வழங்கப்படவுள்ள நிறத்தேர்வுகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய நிஸான் மேக்னைட் காரை 8 நிறங்களில் வாங்கலாம்! எட்டுமே நல்லா இருக்கே

நிஸான் ஒரு வழியாக அதன் காம்பெக்ட் எஸ்யூவி காரான மேக்னைட்டை பற்றிய விபரங்களை கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வெளியிட்டது. இந்தியாவில் காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் மேக்னைட் நம் நாட்டிலும் அறிமுகமாகியுள்ளது.

புதிய நிஸான் மேக்னைட் காரை 8 நிறங்களில் வாங்கலாம்! எட்டுமே நல்லா இருக்கே

கான்செப்ட் மாடல் கொண்டிருந்த நிமிர்ந்த தோற்றம், ஸ்போர்டியான வளைவுகள் மற்றும் கூர்மையான முன்பக்கத்துடன் மேக்னைட் காம்பெக்ட் எஸ்யூவி காரை நிஸான் நிறுவனம் பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

புதிய நிஸான் மேக்னைட் காரை 8 நிறங்களில் வாங்கலாம்! எட்டுமே நல்லா இருக்கே

காரின் உள்ளே வழங்கப்பட்டுள்ள டிசைன் மற்றும் என்ஜின் தேர்வுகள் குறித்த விபரங்களை நிஸான் தற்காலிகமாக வெளியிடாமல் உள்ளது. இந்த நிலையில் தற்போது நமக்கு இந்த காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு வழங்கப்படவுள்ள நிறத்தேர்வுகள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன.

புதிய நிஸான் மேக்னைட் காரை 8 நிறங்களில் வாங்கலாம்! எட்டுமே நல்லா இருக்கே

புதிய மேக்னைட் 8 விதமான நிறத்தேர்வுகளில் விற்பனையை துவங்கவுள்ளது. இதில் புயலின் வெள்ளை, ஓனிக்ஸ் கருப்பு, ப்ளேடின் சில்வர், மணற்கல்லின் பழுப்பு, கார்னெட் சிவப்பு என்ற 5 ஒற்றை-நிறங்களும், விவிட் நீலம் & வெள்ளை, கார்னெட் சிவப்பு & ஓனிக்ஸ் கருப்பு, முத்தின் வெள்ளை & ஓனிக்ஸ் கருப்பு என்ற 3 இரட்டை-நிறங்களும் அடங்குகின்றன.

புதிய நிஸான் மேக்னைட் காரை 8 நிறங்களில் வாங்கலாம்! எட்டுமே நல்லா இருக்கே

இந்த நிறங்கள் எதுவும் நிஸான் கிக்ஸ் காம்பெக்ட் எஸ்யூவி காரின் நிறத்தேர்வுகளுடன் ஒத்திருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இரட்டை-நிற தேர்வு மேக்னைட்டின் டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட வாய்ப்புள்ளது.

புதிய நிஸான் மேக்னைட் காரை 8 நிறங்களில் வாங்கலாம்! எட்டுமே நல்லா இருக்கே

இந்தியாவில் விற்பனைக்கு வரும் மேக்னைட்டில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் சிவிடி கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படவுள்ளது. இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தும் ஆற்றல் அளவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

புதிய நிஸான் மேக்னைட் காரை 8 நிறங்களில் வாங்கலாம்! எட்டுமே நல்லா இருக்கே

அதேபோல் இந்த என்ஜின் கூடுதல் தேர்வாக 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. புதிய மேக்னைட்டின் விலையை ரூ.5.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சத்திற்கு உள்ளாக நிஸான் நிறுவனம் நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

புதிய நிஸான் மேக்னைட் காரை 8 நிறங்களில் வாங்கலாம்! எட்டுமே நல்லா இருக்கே

கியா சொனெட், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டொயோட்டா அர்பன் க்ரூஸர் உள்ளிட்ட தற்போதைய காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக மேக்னைட்டின் அறிமுகம் அடுத்த ஆண்டில் இருக்கும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite To Be Offered In 5 Monotone and 3 Dual-tone Colour Options
Story first published: Friday, October 23, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X