நிஸான் மேக்னைட் வேரியண்ட் வாரியாக வசதிகள், எஞ்சின் தேர்வு மற்றும் விலை விபரம்!

ரூ.4.99 லட்சம் என்ற விலையில் சந்தைக்கு வந்து அதிர வைத்துள்ளது புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவி. சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு மட்டுமின்றி, ஹேட்ச்பேக் கார்களுக்கும் கடும் சவாலாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரின் வேரியண்ட்டுகளில் வழங்கப்படும் வசதிகள் மற்றும் எஞ்சின் தேர்வு விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நிஸான் மேக்னைட் வேரியண்ட்டுகளின் வசதிகள், எஞ்சின் தேர்வு விபரம்!

வேரியண்ட் விபரம்

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் எக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி, எக்ஸ்வி பிரிமீயம் மற்றும் ஆப்ஷனல் பேக் என ஐந்துவிதமான தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இரண்டு பெட்ரோல் எஞ்சின், மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கிறது. ஒவ்வொரு வேரியண்ட்டிலும் வழங்கப்படும் வசதிகள், எஞ்சின் தேர்வுகள் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பார்க்கலாம்.

நிஸான் மேக்னைட் வேரியண்ட்டுகளின் வசதிகள், எஞ்சின் தேர்வு விபரம்!

நிஸான் மேக்னைட் எக்ஸ்இ

புதிய நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் விலை குறைவான எக்ஸ்இ வேரியண்ட்டில் சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டிற்கு ரூ.4.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டில் வீல் கவருடன் கூடிய ஹாலஜன் பல்புகளுடன் ஹெட்லைட்டுகள், 16 அங்குல ஸ்டீல் சக்கரங்கள், வீல் ஆர்ச்சுகளுக்கு பிளாஸ்டிக் கிளாடிங், 50 கிலோ எடை தாங்கும் வலிமை கொண்ட ரூஃப் ரெயில்கள், க்ரில் அமைப்பில் க்ரோம் அலங்காரம், ரிய் வைப்பர், ரியர் டீஃபாகர் ஆகியவை உள்ளன.

நிஸான் மேக்னைட் வேரியண்ட்டுகளின் வசதிகள், எஞ்சின் தேர்வு விபரம்!

இந்த வேரியண்ட்டில் பவர் விண்டோ வசதி, மேனுவல் ஏசி, பவர் ஸ்டீயரிங் சிஸ்டம், அனலாக் ஸ்பீடோமீட்டர், 3.5 அங்குல திரையுடன் எம்ஐடி சாதனம், வெளிர் சாம்பல் வண்ண இன்டீரியர், டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆன்ட்டி ரோல் பார், ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

நிஸான் மேக்னைட் வேரியண்ட்டுகளின் வசதிகள், எஞ்சின் தேர்வு விபரம்!

நிஸான் மேக்னைட் எக்ஸ்எல்

நிஸான் மேக்னைட் எக்ஸ்இ வேரியண்ட்டில் இருக்கும் வசதிகளுடன் கூடுதல் வசதிகள் இந்த வேரியண்ட்டில் வழங்கப்படுகின்றன. மேலும், சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. சாதாரண பெட்ரோல் மேனுவல் வேரியண்ட் ரூ.5.99 லட்சத்திலும், 1.0 லிட்டர் டர்போ மேனுவல் வேரியண்ட் ரூ.6.99 லட்சத்திலும், 1.0 லிட்டர் சிவிடி வேரியண்ட் ரூ.7.89 லட்சத்திலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

நிஸான் மேக்னைட் வேரியண்ட்டுகளின் வசதிகள், எஞ்சின் தேர்வு விபரம்!

இந்த வேரியண்ட்டில் இரட்டை வண்ண வீல் கவருடன் கூடிய 16 அங்குல சக்கரங்கள், பாடி கலர் ரியர் வியூ மிரர்கள், 4 ஸ்பீக்கர்கள், 2 ட்வீட்டர்கள் கொண்ட 2 டின் மியூசிக் சிஸ்டம், புளூடூத் இணைப்பு வசதி, யுஎஸ்பி சார்ஜர், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், ரிமோட் கீலெஸ் என்ட்ரி வசதி, சிவிடி மாடலில் க்ரோம் கைப்பிடிகள், டர்போ பெட்ரோல் மாடலின் பின்புற கதவுகளில் ஸ்மார்ட்ஃபோனை வைத்துக் கொள்வதற்கான ஹோல்டர் வசதி, திருட்டு எச்சரிக்கை அலராம், வெஹிக்கிள் டைனமிக் கன்ட்ரோல் தொழில்நுட்பம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட் ஆகிய வசதிகள் உள்ளன.

நிஸான் மேக்னைட் வேரியண்ட்டுகளின் வசதிகள், எஞ்சின் தேர்வு விபரம்!

நிஸான் மேக்னைட் எக்ஸ்வி

நிஸான் மேக்னைட் எக்ஸ்எல் வேரியண்ட்டில் வசதிகளுடன் கூடுதலாக பல வசதிகள் இந்த வேரியண்ட்டில் வழங்கப்படுகிறது. எக்ஸ்எல் வேரியண்ட்டில் உள்ள அனைத்து எஞ்சின், கியர்பாக்ஸ் தேர்வுகளும் இதிலும் உண்டு. சாதாரண பெட்ரோல் மேனுவல் மாடல் ரூ.6.68 லட்சத்திலும், 1.0 லிட்டர் டர்போ மேனுவல் மாடல் ரூ.7.68 லட்சத்திலும், 1.0 லிட்டர் டர்போ சிவிடி மாடல் ரூ.8.58 லட்சத்திலும் கிடைக்கிறது.

நிஸான் மேக்னைட் வேரியண்ட்டுகளின் வசதிகள், எஞ்சின் தேர்வு விபரம்!

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், க்ரோம் கைப்பிடிகள், ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புஷ் பட்டன் எஞ்சின் ஸ்டார்ட்- ஸ்டாப் வசதி, பின் இருக்கைக்கு ஆர்ம் ரெஸ்ட் வசதி, ரியர் வியூ கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

நிஸான் மேக்னைட் வேரியண்ட்டுகளின் வசதிகள், எஞ்சின் தேர்வு விபரம்!

நிஸான் மேக்னைட் எக்ஸ்வி பிரிமீயம்

நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் விலை உயர்ந்த வேரியண்ட்ட தேர்வு இதுதான். இந்த வேரியண்ட்டில் சாதாரண பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் உள்ளன. சாதாரண பெட்ரோல் மேனுவல் மாடல் ரூ.7.55 லட்சத்திலும், டர்போ மேனுவல் பெட்ரோல் மாடல் ரூ.8.45 லட்சத்திலும், டர்போ பெட்ரோல் சிவிடி மாடல் ரூ.9.35 லட்சத்திலும் கிடைக்கிறது.

நிஸான் மேக்னைட் வேரியண்ட்டுகளின் வசதிகள், எஞ்சின் தேர்வு விபரம்!

எக்ஸ்வி வேரியண்ட்டில் வழங்கப்படும் வசதிகளுடன் கூடுதலாக 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள், க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, ரியர் பவர் அவுட்லெட் பாயிண்ட் ஆகியவை முக்கிய வசதிகளாக இருக்கின்றன.

நிஸான் மேக்னைட் வேரியண்ட்டுகளின் வசதிகள், எஞ்சின் தேர்வு விபரம்!

டெக் பேக் (ஆப்ஷனல்)

நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி பிரிமீயம் வேரியண்ட்டுகளுக்கு கூடுதலாக டெக் பேக் என்ற விருப்பத் தேர்வு வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த டெக் பேக்கிற்கு ரூ.39,000 கூடுதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டெக் பேக்கில் வயர்லெஸ் சார்ஜர், ஏர் பியூரிஃபயர், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், எல்இடி ஸ்கஃப் பிளேட்டுகள், ஆம்பியண்ட் லைட் சிஸ்டம், படூல் விளக்குகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Here are the variant wise features, engine options and prices details of all new Nissan Magnite SUV.
Story first published: Saturday, December 5, 2020, 18:09 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X