Just In
- 3 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 3 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 4 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 5 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிக சவாலான விலை... ஹேட்ச்பேக் கார்களுக்கும் நெருக்கடி... அதிர வைத்த நிஸான் மேக்னைட்!
மிக சவாலான விலையில் நிஸான் மேக்னைட் எஸ்யூவி வந்திருப்பது, பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்களுக்கும் நெருக்கடியாக அமைந்துள்ளது. எந்தெந்த அம்சங்களில் ஹேட்ச்பேக் கார்களை நிஸான் மேக்னைட் ஓவர்டேக் செய்கிறது என்பதை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் பல புதிய மாடல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது சப்-காம்பேக்ட் எஸ்யூவியை ஒவ்வொரு விதத்தில் தனி மதிப்பு கொண்டதாக உருவாக்கி களமிறக்கி வருகின்றன.

இந்த நிலையில், சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் லேட்டஸ்ட் வரவாக கடந்த வாரம் நிஸான் மேக்னைட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அசத்தலான டிசைன், எக்கச்சக்க தொழில்நுட்ப வசதிகள், மிக சவாலான விலையில் வந்திருக்கும் இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கியா சொனெட் எஸ்யூவிதான் விலை குறைவான தேர்வாக இருந்து வந்தது. அதாவது, ரூ.6.71 லட்சம் விலையில் கியா சொனெட் கிடைக்கிறது. அதுவும் கூட அண்மையில் வந்த மாடல்தான். ஆனால், நிஸான் மேக்னைட் எஸ்யூவி யாரும் எதிர்பாராத வகையில் ரூ.4.99 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் வந்தது. டாப் வேரியண்ட் கூட ரூ.9.35 லட்சம்தான்.

இதனால், சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மட்டுமின்றி, விலை அடிப்படையில் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது நிஸான் மேக்னைட் எஸ்யூவி.

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிக குறைவான விலை தேர்வாக இருந்து வரும் டாடா அல்ட்ராஸ் ரூ.5.45 லட்சத்திலும், மாருதி பலேனோ ரூ.5.68 லட்சத்திலும், ஃபோக்ஸ்வேகன் போலோ கார் ரூ.5.85 லட்சத்திலும் கிடைக்கின்றன. ஹூண்டாய் ஐ20 காரும், ஹோண்டா ஜாஸ் காரின் ஆரம்ப விலையும் இந்த கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியாத உயரத்தில் கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய் வித்தியாசத்தில் இருக்கின்றன.

எனவே, சப்-காம்பேக்ட் எஸ்யூவி மட்டுன்றி, பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்களின் கவனத்தை நிஸான் மேக்னைட் ஈர்த்துள்ளது. அதுவும் இதன் விலை கச்சிதமாக பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்களுக்கு சவாலாக பொருந்தி போகிறது.

அத்துடன், கலக்கலான டிசைன், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 8.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் வசதிகளும் உள்ளன. பாதுகாப்பு வசதிகளிலும் நிறைவை தரும் வகையில் உள்ளது.

கியா சொனெட் உள்ளிட்ட சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார்களிலும், ஹூண்டாய் எலைட் ஐ20 உள்ளிட்ட மாடல்களில் வழங்கப்படும் வயர்லெஸ் சார்ஜர், ஏர் பியூரிஃபயர் உள்ளிட்ட வசதிகளும் டாப் வேரியண்ட்டுகளில் கூடுதல் பேக்கேஜாக இந்த காரில் வழங்கப்படுவதால், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

அத்துடன், நிஸான் மேக்னைட் கார் 205 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸ் பெற்றுள்ளது. இதனால், சாலைகளில் அச்சமில்லாமல் ஓட்டுவதற்கான வாய்ப்பை வழங்குவதால் ஹேட்ச்பேக் கார்களைவிட இது சற்று சாதகமான விஷயமாக இருக்கும். அதேபோன்று, இடவசதியிலும் நிஸான் மேக்னைட் கார் வாடிக்கையாளர்களுக்கு நிறைவை தரும் என்று எதிர்பார்க்கலாம்.

ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையாகவும், அதிக செயல்திறன் கொண்ட இரண்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள், மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, சிவிடி கியர்பாக்ஸ் தேர்வும் நிஸான் மேக்னைட் எஸ்யூவியின் கிராஃபை உயர்த்தும் விஷயங்களாக கூறலாம். மொத்தத்தில் ஹேட்ச்பேக் கார் வாங்க திட்டமிட்டிருப்போரின் கவனத்தையும் நிஸான் மேக்னைட் வெகுவாக கவரும் என்று நம்பலாம்.

நிஸான் மேக்னைட் கார் அனைத்து விதத்திலும் மதிப்பை தருகிறது. அதேநேரத்தில், நிஸான் நிறுவனம் விற்பனைக்கு பிந்தைய சேவை தரத்தையும், சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையும் உயர்த்தினால், இந்த காருக்கு வலு சேர்ப்பதாக அமையும்.