ஜப்பானின் ஆற்றல்மிக்க டர்போ என்ஜின், மேக்னைட் மூலமாக இந்தியா வருது!! உறுதிசெய்தது நிஸான் நிறுவனம்

நிஸான் மேக்னைட் எஸ்யூவி கார் புதிய எச்ஆர்ஏ0 டர்போ என்ஜினை பெற்று வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜப்பானின் ஆற்றல்மிக்க டர்போ என்ஜின், மேக்னைட் மூலமாக இந்தியா வருது!! உறுதிசெய்தது நிஸான் நிறுவனம்

மிக விரைவில் சப்-காம்பெக்ட் எஸ்யூவி காராக நிஸான் மேக்னைட் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. விற்பனையில் காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு மத்தியில் பெரிய போட்டி நிலவிவருவது அனைவருக்கும் தெரிந்ததே.

ஜப்பானின் ஆற்றல்மிக்க டர்போ என்ஜின், மேக்னைட் மூலமாக இந்தியா வருது!! உறுதிசெய்தது நிஸான் நிறுவனம்

இதனால் தான் அட்டகாசமான தோற்றத்தில் மட்டுமில்லாமல் ஆற்றல்மிக்க டர்போ என்ஜினையும் இந்த கார் பெற்றுவருகிறது. இந்த என்ஜினில் பயன்படுத்தப்படும் தொழிற்நுட்பம் தான் ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம் இந்திய சந்தைக்கு கொண்டுவரும் செயல்திறன்மிக்க தொழிற்நுட்பமாகும்.

ஜப்பானின் ஆற்றல்மிக்க டர்போ என்ஜின், மேக்னைட் மூலமாக இந்தியா வருது!! உறுதிசெய்தது நிஸான் நிறுவனம்

இந்த வகையில் மேக்னைட்டில் வழங்கப்படவுள்ள எச்ஆர்ஏ0 1.0 லிட்டர் டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி (கிட்டத்தட்ட 97 பிஎச்பி) மற்றும் 160 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும். இந்த டர்போ என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் எக்ஸ்-ட்ரோனிக் சிவிடி கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படவுள்ளது.

ஜப்பானின் ஆற்றல்மிக்க டர்போ என்ஜின், மேக்னைட் மூலமாக இந்தியா வருது!! உறுதிசெய்தது நிஸான் நிறுவனம்

இதுகுறித்து ரெனால்ட் நிஸான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிஜு பாலேந்திரன் கூறுகையில், "ரெனால்ட்-நிஸான், இதுபோன்ற வலுவான செயல்திறனை வழங்கக்கூடிய நாட்டின் முதல்-வகையான டர்போ என்ஜின் எச்.ஆர்.ஏ0 உற்பத்தியைத் தொடங்கியதில் பெருமிதம் கொள்கிறது. உண்மையிலேயே, முற்றிலும் புதிய நிஸான் மேக்னைட், தொடர்ச்சியாக புதுமைகள் கொண்டுவரப்படும் நிஸானின் உலகளாவிய எஸ்யூவி டி.என்.ஏவுக்கும், மேம்பட்ட தொழில்நுட்பம் & ஜப்பானிய பொறியியலுக்கும் மிக சிறந்த சான்றாகும்" என்றார்.

ஜப்பானின் ஆற்றல்மிக்க டர்போ என்ஜின், மேக்னைட் மூலமாக இந்தியா வருது!! உறுதிசெய்தது நிஸான் நிறுவனம்

நிஸான் நிறுவனம் புதிய எச்ஆர்ஏ0 என்ஜினிற்கு ‘கண்ணாடி துளை சிலிண்டர் கோட்டிங்' தொழிற்நுட்பத்தை அதன் உலகளவில் பிரபல ஸ்போர்ட்ஸ் காரான ஜிடி-ஆரில் இருந்து பெற்றுள்ளது. இது எடையைக் குறைப்பதற்கும், வெப்ப மேலாண்மை மற்றும் எரிபொருள் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது, இதனால் இயந்திரத்தின் ஒட்டுமொத்த செயல்திறனும் மேம்படும்.

ஜப்பானின் ஆற்றல்மிக்க டர்போ என்ஜின், மேக்னைட் மூலமாக இந்தியா வருது!! உறுதிசெய்தது நிஸான் நிறுவனம்

சிறந்த எரிபொருள் சிக்கனத்தையும், கிமீ-க்கு 118.5 கிராம் என்ற குறைந்த கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வையும் வழங்குவதற்காக என்ஜின் ஆறு தொழில்நுட்ப மேம்பாடுகளை பெற்றுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. அதுமட்டுமில்லாமல், புதிய டர்போ என்ஜின் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின்களுக்கு எதிராக 50% வரை சிறந்த ஆக்ஸலரேஷனை வழங்கும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
The all-new Nissan Magnite’s powerful HRA0 Turbo engine
Story first published: Friday, November 6, 2020, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X