Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெறும் ரூ.4.99 லட்சத்தில் நிஸான் மேக்னைட்டின் எக்ஸ்இ வேரியண்ட்- காசுகேற்ற வாகனம்தானா? முழு விபரம்...
நிஸான் மேக்னைட்டின் விலை குறைவான எக்ஸ்இ வேரியண்ட் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

நிஸான் சமீபத்தில் மேக்னைட் சப்-4மீ எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட் போன்ற கடுமையான போட்டி மாடல்கள் கொண்ட பிரிவில் இந்த நிஸான் கார் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் வலுவாக தனது காலடி தடத்தை பதிக்க நினைக்கும் நிஸான் நிறுவனத்திற்கு இந்த புதிய அறிமுகம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை அனைவரையும் கவரும் விதமாக ரூ.4.99 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலையில் கிடைக்கும் இதன் ஆரம்ப நிலை எக்ஸ்இ வேரியண்ட்டை பற்றிய வீடியோதான் தற்போது ஆட்டோட்ரெண்ட் டிவி என்ற யுடியுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேக்னைட்டின் டாப் வேரியண்ட்கள் பார்த்தவுடனே கண்ணை கவரும் தோற்றத்தில் இருக்கும்.

இந்த பேஸ் வேரியண்ட் அதன் விலைக்கு ஏற்றாற்போல் கவர்ச்சிகர பாகங்களை கொண்டிருக்கவில்லை என்பதை இந்த வீடியோ பார்க்கும்போது தெரிய வருகிறது. ஏனெனில் இந்த வேரியண்ட் வெள்ளை மற்றும் சில்வர் என்ற இரு நிறங்களில் மட்டுமே பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

மேக்னைட்டின் இந்த விலை குறைவான வேரியண்ட்டின் முன்பகுதியில் ஹலோஜன் ஹெட்லேம்ப்கள், டாப் ட்ரிம்களில் வழங்கப்படும் எல்இடி டிஆர்எல்களுக்கு பதிலாக L-வடிவிலான க்ரோம் ஸ்ட்ரிப்கள் உள்ளிட்டவை உள்ளன.

முன்பக்க க்ரில் அமைப்பை சுற்றிலும் க்ரோம் இல்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நிஸான் மேக்னைட்டிற்கு இந்த க்ரோம் பார்டர் தான் ப்ரீமியம் தரத்திலான தோற்றத்தை வழங்கக்கூடியதாக மற்ற வேரியண்ட்களில் உள்ளது.

அதேபோல் அலாய் சக்கரங்கள் இந்த வேரியண்ட்டில் இல்லை. அதற்கு பதிலாக இரும்பு சக்கரங்களே உள்ளன. கதவு கைப்பிடிகள் காரின் நிறத்திலேயே வழங்கப்பட பின்புறம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள் கருப்பு நிற பிளாஸ்டிக் உடன் உள்ளன.

டர்ன் இண்டிகேட்டர்கள் முன்பக்க ஃபெண்டர்களில் பொருத்தப்பட்டுள்ளன. விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும் மேற்கூரை தண்டவாளங்களை நிஸான் நிறுவனம் வழங்கியுள்ளது. பின்பக்கத்தில் வைபர், வாஷர் மற்றும் டெமிஸ்டர்களை பார்க்க முடிகிறது.

ஆனால் பின்பக்க பம்பர் டாப் வேரியண்ட்களில் வழங்கப்படுவதை போன்று ஃபாக்ஸ் சறுக்கு தட்டை கொண்டிருக்கவில்லை. உட்புறம் கேபின் ஆனது கருப்பு மற்றும் க்ரே என்ற இரு நிறங்களில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

இதில் கருப்பு நிறம் உட்புற கதவு கைப்பிடிகள், ஏசி துளைகளை சுற்றிலும் உள்ள க்ரோம்கள், ஒருங்கிணைக்கப்பட்ட அட்ஜெஸ்ட் செயக்கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் பக்கவாட்டு கண்ணாடி மற்றும் பின்பக்க பவர் ஜன்னல்கள் உள்ளிட்டவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.

3.5 இன்ச்சில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரை உடன் எல்இடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் இருந்தாலும், ஆடியோ சிஸ்டம் காரில் வழங்கப்படவில்லை. மேக்னைட் எக்ஸ்இ காரை 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கலாம்.

அதிகப்பட்சமாக 72 பிஎஸ் மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள இதன் எக்ஸ்ஷோரூம் விலை இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மட்டுமே. அதன்பின்பு மேக்னைட்டின் ஆரம்ப விலை ரூ.5.54 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று அறிமுகத்தின்போது நிஸான் தெரிவித்திருந்தது.