நிஸான் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது?

நிஸான் பேட்ரோல் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து நிஸான் கார் நிறுவனம் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

நிஸான் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது?

நிஸான் நிறுவனத்தின் மிகவும் உயரிய வகை சொகுசு எஸ்யூவி மாடலாக பேட்ரோல் பல வெளிநாடுகளில் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. செல்வ செழிப்பு மிக்க வளைகுடா நாடுகளில் நிஸான் பேட்ரோல் எஸ்யூவிக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

நிஸான் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது?

இந்த நிலையில், இந்த பிரம்மாண்ட சொகுசு எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து நிஸான் கார் நிறுவனம் பரிசீலீத்து வருவதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

நிஸான் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது?

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு முதல் 2,500 யூனிட்டுகளுக்கு எந்த விதமான மாற்றமும் செய்யாமல் விற்பனை செய்வதற்கு மத்திய அரசு விலக்கு அளித்தது. இந்த விதியை பயன்படுத்தி முழுமையாக கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்த எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்கும் திட்டத்தை நிஸான் கையில் எடுத்துள்ளது.

நிஸான் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது?

அசுரத்தனமான தோற்றம் கொண்ட இந்த பிரம்மாண்ட எஸ்யூவியானது இதுவரை ஆறு தலைமுறை மாற்றங்களுடன் வெளிநாடுகளில் விற்பனையில் இருந்து வருகிறது. தற்போதைய தலைமுறை மாடலானது 2010ம் ஆண்டு முதல் விற்பனையில் இருந்து வருவதுடன், கடந்த ஆண்டு சில மாற்றங்களுடன் புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

நிஸான் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது?

இந்த எஸ்யூவி 5.1 மீட்டர் நீளமும் 2 மீட்டர் அகலமும் உடையது. இதனால், தோற்றத்தில் ராட்சதத்தனமாகவும், உட்புறத்தில் அதிக இடவசதியையும் பெற்றிருக்கிறது. மூன்று வரிசை இருக்கை அமைப்பை பெற்றிருக்கிறது.

நிஸான் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது?

ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவில் விற்பனையில் உள்ள வலது பக்க ஸ்டீயரிங் வீல் கொண்ட மாடல்தான் அதே சிறப்பம்சங்களுடன் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ: கொரோனா பிரச்னையால், வரும் ஜூன் மாதம் அமெரிக்காவில் நடக்க இருந்த டெட்ராய்டு ஆட்டோ எக்ஸ்போ ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

நிஸான் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது?

நிஸான் பேட்ரோல் எஸ்யூவியில் 5.6 லிட்டர் வி8 பெட்ரோ்ல எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 405 எச்பி பவரையும், 560 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

MOST READ: கொரோனா பரவும் நிலையில் அதிர வைக்கும் காரியத்தை செய்த எம்எல்ஏ... வீடியோவை பார்த்து ஷாக் ஆன மக்கள்...

நிஸான் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது?

இந்த எஸ்யூவியில் ரியர் லாக்கிங் டிஃபரன்ஷியல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த எஸ்யூவியில் 4.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படுகிறது.

MOST READ: தேசிய ஊரடங்கு... நிம்மதி பெருமூச்சு விடும் நகரங்கள்... மனிதனை தவிர அனைத்து ஜீவராசிகளும் 'ஹேப்பி'!

நிஸான் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது?

நிஸான் பேட்ரோல் எஸ்யூவி இறக்குமதி செய்யப்படுவதுடன், மிக உயரிய வகை மாடலாக இருப்பதால் விலையும் மிக கணிசமாக இருக்கும். தற்போதைய தகவல்களின்படி, ரூ.1.5 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிஸான் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகிறது?

டொயோட்டா லேண்ட் க்ரூஸர், லெக்சஸ் எல்எக்ஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு இந்த புதிய நிஸான் பேட்ரோல் எஸ்யூவி போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
According to report, Nissan is planning to launch Patrol full size SUV in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X