நிஸான் மேக்னைட்டின் டிவிசி வீடியோ முதன்முறையாக வெளிவந்தது! முழு விபரங்கள் இதோ

சமீபத்திய அறிமுகமான நிஸான் மேக்னைட்டின் முதல் தொலைக்காட்சி கமர்ஷியல் (டிவிசி) வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

நிஸான் மேக்னைட்டின் டிவிசி வீடியோ முதன்முறையாக வெளிவந்தது! முழு விபரங்கள் இதோ

நிஸான் நிறுவனம் புதிய மேக்னைட்டை அடுத்த ஐந்து மாதங்களுக்கு உள்ளாக, அதாவது 2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்குள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிஸான் இந்தியா நிறுவனத்தின் முழு நம்பிக்கையும் மேக்னைட்டின் மீதுதான் உள்ளது.

நிஸான் மேக்னைட்டின் டிவிசி வீடியோ முதன்முறையாக வெளிவந்தது! முழு விபரங்கள் இதோ

நிஸான் இண்டெலிஜண்ட் மொபைலிட்டி தொழிற்நுட்பத்தை பெற்றது மட்டுமில்லாமல் மேக்னைட் அட்டகாசமான கார்னெட் சிவப்பு நிறத்தில் வழங்கப்படவுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள டிவிசி வீடியோவில் இந்த நிறத்தில் தான் கார் காட்சியளிக்கிறது.

இந்த நிறம் மட்டுமின்றி 5 ஒற்றை-நிறம் மற்றும் 3 இரட்டை-நிறங்களிலும் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த வீடியோவில் நேர்த்தியான எல்இடி பை-ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் எல்இடி லைட்ஸ்பார்- ஸ்டைல் டர்ன் இண்டிகேட்டர்கள், L- வடிவிலான டிஆர் விளக்குகள் மற்றும் எல்இடி மூடுபனி விளக்குகள் உள்ளிட்ட ஒளி தரக்கூடிய பாகங்கள் முக்கிய ஹைலைட்களாக காட்டப்பட்டுள்ளன.

நிஸான் மேக்னைட்டின் டிவிசி வீடியோ முதன்முறையாக வெளிவந்தது! முழு விபரங்கள் இதோ

முன்பக்க க்ரில், அதுதான் மொத்த காருக்கும் அழக்கூட்டுகிறது. மேக்னைட்டின் க்ரவுண்ட் கிளியரென்ஸ் 205மிமீ ஆக வழங்கப்பட்டுள்ளது. காரை 5.0 மீட்டர் ஆரத்தில் திருப்பலாம். மேற்கூரையில் அதிகப்பட்சமாக 50 கிலோ வரையில் எடை கொண்ட பொருட்களை தாராளமாக வைக்கலாம்.

நிஸான் மேக்னைட்டின் டிவிசி வீடியோ முதன்முறையாக வெளிவந்தது! முழு விபரங்கள் இதோ

சக்கரங்களுக்கு மேல் உள்ள தடினமான சக்கர வளைவுகள், முன் & பின்பக்க சில்வர் தட்டுகள், சுற்றிலும் க்ளாடிங், 16 இன்ச்சில் டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை காரின் வெளிப்புறத்தில் வழங்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாகும். உட்புறத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் செங்குத்தான வடிவில் வழங்கப்பட்டுள்ளது.

நிஸான் மேக்னைட்டின் டிவிசி வீடியோ முதன்முறையாக வெளிவந்தது! முழு விபரங்கள் இதோ

இந்த டிவிசி வீடியோ உட்புறத்தில் எளிமையான இயக்கம் மற்றும் ஸ்டார்டிங்கிற்காக உயர் நிலையில் ஸ்போர்ட்டியான இருக்கைகள், 2 கப்-ஹோல்டர்கள் மற்றும் மொபைல் ஹோல்டருடன் பின்புற ஆர்ம்ரெஸ்ட், டிரைவரின் எளிமையான செயல்பாட்டிற்காக 5 டிகிரி சாய்வான மைய கன்சோல், கட்டுப்பாட்டு எளிமைக்கு எளிதான பொத்தான் வடிவமைப்பு மற்றும் வெளிச்சத்துடன் 10எல் கையுறை பெட்டி உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளதை காட்டுகிறது.

நிஸான் மேக்னைட்டின் டிவிசி வீடியோ முதன்முறையாக வெளிவந்தது! முழு விபரங்கள் இதோ

வயர்லெஸ் சார்ஜர், காற்று சுத்திகரிப்பான், குட்டை விளக்குகள், சுற்றிலும் விளக்குகள் மற்றும் ப்ரீமியம் தரத்திலான ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவற்றையும் இந்த கார் உள்ளே கொண்டுள்ளது. வரவேற்பு அனிமேஷன் உடன் 7 இன்ச்சில் டிஎஃப்டி மீட்டர், டயரின் அழுத்தத்தை அளவிடும் சிஸ்டம் மற்றும் 8 இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஓட்டுனரின் குரலை அறிந்து செயல்பட 6 ஸ்பீக்கர்கள் போன்றவை மேக்னைட்டின் கேபினின் முக்கிய அம்சங்களாகும்.

நிஸான் மேக்னைட்டின் டிவிசி வீடியோ முதன்முறையாக வெளிவந்தது! முழு விபரங்கள் இதோ

ஸ்டேரிங் சக்கரம் ஆடியோ, க்ளஸ்ட்டர் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற கண்ட்ரோல்களை கொண்டிருக்கலாம். தொலைப்பேசி அழைப்புகளை மேற்கொள்ள மைக்ரோபோன் சரியான இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. ஜியோ ஃபென்ஸ், சாலையோர உதவி, ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு போன்றவற்றை நிஸான் கனெக்ட்டிவிட்டி கொண்டுள்ளது.

நிஸான் மேக்னைட்டின் டிவிசி வீடியோ முதன்முறையாக வெளிவந்தது! முழு விபரங்கள் இதோ

நிஸான் மேக்னைட்டில் ஹரா0 1.3 லிட்டர் டர்போ- பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. இதனை வீடியோவில் காரின் பின்பக்கத்தில் டர்போ முத்திரையின் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி கொள்ளலாம். மற்றப்படி இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

நிஸான் மேக்னைட்டின் டிவிசி வீடியோ முதன்முறையாக வெளிவந்தது! முழு விபரங்கள் இதோ

5-ஸ்பீடு மற்றும் எக்ஸ்-ட்ரோனிக் சிவிடி என்ற கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் இந்த டர்போ என்ஜின் வழங்கப்படவுள்ளது. மேக்னைட்டின் ஆரம்ப விலை ரூ.5.5 லட்சத்தில் நிர்ணயிக்க வாய்ப்புள்ளது. இந்த விலை பிரிவில் உள்ள மற்ற காம்பெக்ட் எஸ்யூவி கார்களை காட்டிலும் ரூ.1 லட்சம் வரையில் குறைவானது ஆகும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite First Official TVC Details Interiors, Exteriors, Features
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X