அமெரிக்கர்களுக்காக புதிய அவதாரம் எடுத்த நிஸான் கிக்ஸ்... வீடியோவை பார்க்கும்போதே மிரட்டலா இருக்கு!

அமெரிக்கர்களுக்காக நிஸான் கிக்ஸ் கார் பல்வேறு புதுப்பித்தல்களைப் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

அமெரிக்கர்களுக்காக புதிய அவதாரம் எடுத்த நிஸான் கிக்ஸ்... வீடியோவை பார்க்கும்போதே மிரட்டலா இருக்கு!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிஸான் நிறுவனம், அதன் பிரபலமான கிக்ஸ் காரை 2021ம் ஆண்டிற்கு ஏற்ப அப்கிரேட் செய்து வருகின்றது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப பிரத்யேகமாக அந்நிறுவனம் இதனை புதுப்பித்து வருவது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், புதுப்பித்தலைப் பெற்றிருக்கும் அமெரிக்காவிற்கான கிக்ஸ் மாடல் பற்றிய சுவாரஷ்ய தகவலே தற்போது வெளியாகியிருக்கின்றது.

அமெரிக்கர்களுக்காக புதிய அவதாரம் எடுத்த நிஸான் கிக்ஸ்... வீடியோவை பார்க்கும்போதே மிரட்டலா இருக்கு!

புதிய டீசர் வீடியோவின் வாயிலாகவே இதுகுறித்த தகவலை நிஸான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் அடிப்படையில், புதுப்பித்தலைப் பெற்றிருக்கும் கிக்ஸ், மெல்லிய இழை போன்ற ஹெட்லைட்டைப் பெறவிருப்பது தெரியவந்துள்ளது. இத்துடன், பெரிய வி-மோஷன் கிரில்லும் இதன் முகப்பு பகுதியில் இடம்பெற இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

அமெரிக்கர்களுக்காக புதிய அவதாரம் எடுத்த நிஸான் கிக்ஸ்... வீடியோவை பார்க்கும்போதே மிரட்டலா இருக்கு!

இதுபோன்ற பல்வேறு புதுப்பித்தல்களைப் பெற்ற நிஸான் கிக்ஸ் காரே அண்மையில் தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அறிமுகமானது. இந்த நிலையில் அமெரிக்காவிலும் விரைவில் பல்வேறு புதுப்பித்தல்களுடன் இக்கார் அறிமுகமாக இருக்கின்றது.

அமெரிக்கர்களுக்காக புதிய அவதாரம் எடுத்த நிஸான் கிக்ஸ்... வீடியோவை பார்க்கும்போதே மிரட்டலா இருக்கு!

புதிய அப்கிரேஷன்கள் அமெரிக்கர்களை வெகுவாக கவரும் என நிஸான் நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. நிஸான் நிறுவனம் இக்காரை கடந்த 2018ம் ஆண்டுதான் முதல் முறையாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது.அப்போதில் இருந்தே இக்காருக்கு அந்த நாட்டில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

இதைத்தொடர்ந்தே புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலில் அமெரிக்கர்களை மேலும் கவரும் வகையில் கிக்ஸ் காரை நிஸான் தயார்படுத்தி வருகின்றது. இதன் முன்பக்கத்தில் மட்டுமின்றி பக்கவாட்டு மற்றும் பின்பக்க பகுதியிலும் புதிய மாறுதல்களை நிஸான் நிகழ்த்தியிருக்கின்றது. ஆனால், அதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியிடப்படவில்லை.

அமெரிக்கர்களுக்காக புதிய அவதாரம் எடுத்த நிஸான் கிக்ஸ்... வீடியோவை பார்க்கும்போதே மிரட்டலா இருக்கு!

அண்மையில் தாய்லாந்தில் அறிமுகமான கிக்ஸ் கார், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புதிய தொழில்நுட்ப வசதிகள் சிலவற்றுடன் விற்பனைக்கு அறிமுகமாகியிருந்தது. இதேபோன்று பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இக்கார் விரைவில் அமெரிக்காவில் அறிமுகமாக இருப்பது புதிய டீசர் வீடியோவின் வாயிலாக தெரியவந்துள்ளது.

அமெரிக்கர்களுக்காக புதிய அவதாரம் எடுத்த நிஸான் கிக்ஸ்... வீடியோவை பார்க்கும்போதே மிரட்டலா இருக்கு!

அமெரிக்காவில் அறிமுகமாக இருக்கும் நிஸான் கிக்ஸ் காரை பற்றி நாம் ஏன் இங்கு பார்க்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழும்பியிருக்கலாம். அமெரிக்கர்களுக்கான கிக்ஸ் காரைப் போலவே இந்தியாவிலும் இந்தியர்களுக்காக பல்வேறு சிறப்பு மாற்றங்களுடன் கிக்ஸ் கார் விரைவில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படியானால், என்னென்ன வசதிகளை இக்காரில் எதிர்பார்க்கலாம் என்பதன் அடிப்படையிலேயே புதிய டீசர் வீடியோ பற்றிய தகவலை இங்கு வெளியிட்டுள்ளோம்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Reveals New Teaser for Facelift Kicks. Here Full Details. Read In Tamil.
Story first published: Thursday, December 3, 2020, 14:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X