அமெரிக்க மக்களுக்கு காத்திருக்கும் நிஸானின் கிஃப்ட், 2021 ஆர்மடா!! டீசர் வெளியீடு..

அமெரிக்க அறிமுகத்திற்கு முன்னதாக 2021 நிஸான் ஆர்மடா காரின் டீசர் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

அமெரிக்க மக்களுக்கு காத்திருக்கும் நிஸானின் கிஃப்ட், 2021 ஆர்மடா!! டீசர் வெளியீடு..

அமெரிக்க சந்தைகளில் விற்பனையில் உள்ள நிஸான் ஆர்மடா தற்சமயம் இரண்டாம் தலைமுறை தோற்றத்தில் அங்கு விற்பனையில் உள்ளது. இதுதான் விரைவில் புத்துணர்ச்சியான தோற்றத்தை பெறவுள்ளது.

இந்த நிலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த 2021 மாடலின் டீசர் வீடியோவில் புதிய ஆர்மடா மண் தூசு மிகுந்த சாலையில் இயக்கப்படுவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஆர்மடாவின் சர்வதேச வெர்சனான நிஸான் பேட்ரோலின் அப்டேட் வெர்சனை பற்றி நமது செய்திதளத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

அமெரிக்க மக்களுக்கு காத்திருக்கும் நிஸானின் கிஃப்ட், 2021 ஆர்மடா!! டீசர் வெளியீடு..

இதனால் நாளை (டிசம்பர் 8) அமெரிக்காவில் அறிமுகமாகும் 2021 ஆர்மடாவின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த ஒரு ஐடியா நமக்கு கிடைக்கிறது. ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட-ஐ பெறுவதால் காரின் முன்பக்கம் திருத்தியமைக்கப்பட்டுள்ளதை இந்த டீசரில் பார்க்க முடிகிறது.

அமெரிக்க மக்களுக்கு காத்திருக்கும் நிஸானின் கிஃப்ட், 2021 ஆர்மடா!! டீசர் வெளியீடு..

C-வடிவிலான எல்இடி டிஆர்எல்களை கொண்ட அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லைட்களை நிஸானின் அடையாளமான பெரிய V-வடிவ க்ரில் உடன் இந்த 2021 மாடல் பெற்றுள்ளது. இந்த காரின் முன்பக்கம் புதிய நிஸான் பேட்ரோலை நமக்கு நினைவுப்படுத்துகிறது.

அமெரிக்க மக்களுக்கு காத்திருக்கும் நிஸானின் கிஃப்ட், 2021 ஆர்மடா!! டீசர் வெளியீடு..

ஏனெனில் இரு மாடல்களும் ஒன்றுதான். ஆர்மடா அமெரிக்காவில் மட்டும்தான் விற்பனையில் உள்ளது. பேட்ரோல் மற்ற வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் உள்ளது. ஆர்மடாவில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு விகே56 5.6 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க மக்களுக்கு காத்திருக்கும் நிஸானின் கிஃப்ட், 2021 ஆர்மடா!! டீசர் வெளியீடு..

அதிகப்பட்சமாக 390 பிஎச்பி மற்றும் 560 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படலாம். அதேநேரம் 2-சக்கர ட்ரைவ் மற்றும் 4-சக்கர ட்ரைவ் அமைப்புகளும் தேர்வுகளாக இந்த எஸ்யூவி காரில் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

அமெரிக்க மக்களுக்கு காத்திருக்கும் நிஸானின் கிஃப்ட், 2021 ஆர்மடா!! டீசர் வெளியீடு..

உட்புறத்தை 9.6 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் திரை, 2021 இன்ஃபினிட்டி க்யூஎக்ஸ்80 காரில் உள்ளதை போன்று பின்புறத்தை பார்ப்பதற்கு மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கேமிரா சிஸ்டம் உள்ளிட்டவற்றுடன் நிஸான் அப்கிரேட் செய்திருக்கலாம்.

அமெரிக்க மக்களுக்கு காத்திருக்கும் நிஸானின் கிஃப்ட், 2021 ஆர்மடா!! டீசர் வெளியீடு..

அமெரிக்க சந்தையில் தற்சமயம் நிஸான் ஆர்மடாவின் விலை 47,500 அமெரிக்க டாலர்களாக உள்ளது. இந்த எஸ்யூவி காரின் ஆரம்ப நிலை எஸ்வி 2-சக்கர ட்ரைவ் ட்ரிம்மிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த விலையின் இந்திய ரூபாய் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.35 லட்சமாகும்.

அமெரிக்க மக்களுக்கு காத்திருக்கும் நிஸானின் கிஃப்ட், 2021 ஆர்மடா!! டீசர் வெளியீடு..

அதுவே டாப் பிளாட்டினம் 4-சக்கர ட்ரைவ் ட்ரிம்மின் விலை 68,430 அமெரிக்க டாலர்களாக (ரூ.50.50 லட்சம்) உள்ளது. 2021 அப்கிரேட்களினால் இந்த விலைகளில் நிச்சயம் அதிகரிப்பை தயாரிப்பு நிறுவனம் கொண்டுவந்திருக்கும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
2021 Nissan Armada Teased Ahead Of Dec 8 US Debut
Story first published: Monday, December 7, 2020, 21:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X