600 கிமீ தூர ரேஞ்ச்.. டெஸ்லாவை மறக்கடிக்கும் நிஸான் எலெக்ட்ரிக் கார்!

அதிக திறன் வாய்ந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை நிஸான் நிறுவனம் உலகளாவிய முறையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம்.

 600 கிமீ தூர ரேஞ்ச்.. டெஸ்லாவை மறக்கடிக்கும் நிஸான் எலெக்ட்ரிக் கார்!

மின்சார கார் உருவாக்கப் பணிகளில் நிஸான் நிறுவனம் மிக தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதிக தூரம் பயணிக்கும் பேட்டரி திறன் கொண்ட கார்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அந்நிறுவனம் உருவாக்கி இருக்கும் ஆரியா எஸ்யூவி உலக அளவில் ஆட்டோமொபைல் துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 600 கிமீ தூர ரேஞ்ச்.. டெஸ்லாவை மறக்கடிக்கும் நிஸான் எலெக்ட்ரிக் கார்!

கடந்த ஆண்டு டோக்கியோ மோட்டார் ஷோவில் கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்ட ஆரியா எலெக்ட்ரிக் கார் தற்போது தயாரிப்பு நிலை மாடலாக வெளியிடப்பட்டுள்ளது.

 600 கிமீ தூர ரேஞ்ச்.. டெஸ்லாவை மறக்கடிக்கும் நிஸான் எலெக்ட்ரிக் கார்!

கான்செப்ட் மாடலில் சிறிய வேறுபாடுகளுடன் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் டிசைன் க்ராஸ்ஓவர் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வந்துள்ளது. எலெக்ட்ரிக் கார்களுக்கான உருவாக்கப்பட்ட ரெனோ - நிஸான் - மிட்சுபிஷி கூட்டணியின் CMF-EV கட்டமைப்புக் கொள்கையின் கீழ்தான் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 600 கிமீ தூர ரேஞ்ச்.. டெஸ்லாவை மறக்கடிக்கும் நிஸான் எலெக்ட்ரிக் கார்!

நிஸான் ஆரியா எலெக்ட்ரிக் எஸ்யூவியில் இரண்டு விதமான திறன் கொண்ட பேட்டரி மாடல்கள் தேர்வுக்கு வழங்கப்பட உள்ளன. 63kWh பேட்டரி மற்றும் 87kWh பேட்டரிகள் கொடுக்கப்படும். மேலும், ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் கொண்ட மாடல்களிலும் வர இருக்கிறது.

 600 கிமீ தூர ரேஞ்ச்.. டெஸ்லாவை மறக்கடிக்கும் நிஸான் எலெக்ட்ரிக் கார்!

இதன் 63kWh பேட்டரியுடன் ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் மாடலானது 215 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலானது 335 பிஎச்பி பவரையும், 560 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், ரியர் வீல் டிரைவ் மாடலானது 450 கிமீ தூரம் வரையிலும், ஆல் வீல் டிரைவ் மாடலானது 430 கிமீ தூரம் வரையிலும் ரேஞ்ச் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 600 கிமீ தூர ரேஞ்ச்.. டெஸ்லாவை மறக்கடிக்கும் நிஸான் எலெக்ட்ரிக் கார்!

இந்த எலெக்ட்ரிக் காரின் 63kWh பேட்டரியின் ரியர் வீல் டிரைவ் மாடலானது 0 - 100 கிமீ வேகத்தை 7.5 வினாடிகளிலும், ஆல் வீல் டிரைவ் மாடல் 5.4 வினாடிகளிலும் எட்டிவிடும். அதேபோன்று, ரியர் வீல் டிரைவ் மாடல் மணிக்கு 160 கிமீ வேகம் வரையிலும், ஆல் வீல் டிரைவ் மாடல் 200 கிமீ டாப் ஸ்பீடு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 600 கிமீ தூர ரேஞ்ச்.. டெஸ்லாவை மறக்கடிக்கும் நிஸான் எலெக்ட்ரிக் கார்!

இதன் 87kWh பேட்டரி மாடலிலும் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் தேர்வுகள் உள்ளன. இதன் ரியர் வீல் டிரைவ் மாடலானது 238 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆல் வீல் டிரைவ் மாடலானது 389 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் ரியர் வீல் டிரைவ் மாடல் 610 கிமீ தூரம் வரையிலும், ஆல் வீல் டிரைவ் மாடல் 580 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கும்.

 600 கிமீ தூர ரேஞ்ச்.. டெஸ்லாவை மறக்கடிக்கும் நிஸான் எலெக்ட்ரிக் கார்!

புதிய நிஸான் ஆரியா எலெக்ட்ரிக் எஸ்யூவி 4,595 மிமீ நீளமும், 1,850 மிமீ அகலமும், 1,660 உயரமும் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் நீளம் 2,775 மிமீ ஆக இருக்கிறது. பேட்டரி, வேரியண்ட்டிற்கு தக்கவாறு 1,900 கிலோ முதல் 2,200 கிலோ வரை எடை கொண்டுள்ளது.

 600 கிமீ தூர ரேஞ்ச்.. டெஸ்லாவை மறக்கடிக்கும் நிஸான் எலெக்ட்ரிக் கார்!

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், ஸ்பிளிட் வகை டெயில் லைட்டுகள், 19 அங்குல மற்றும் 20 அங்குல அலாய் வீல்கள் கொண்டதாக கிடைக்கும். இந்த காரில் 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், முழுமையான ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

 600 கிமீ தூர ரேஞ்ச்.. டெஸ்லாவை மறக்கடிக்கும் நிஸான் எலெக்ட்ரிக் கார்!

க்ரூஸ் கன்ட்ரோல், வாய்ஸ் கமாண்ட் அசிஸ்ட், 4ஜி கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் உள்ளிட்டவையும் இந்த காரில் மிக முக்கிய அம்சங்களாக இருக்கும். இந்த கார் இந்திய மதிப்பில் ரூ.30 லட்சம் மதிப்பில் விற்பனைக்கு வரும் வாய்ப்புள்ளது. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு நிஸான் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan unveiled the all-new Nissan Ariya electric SUV globally. The all-electric vehicles will be offered with two powertrain and drivetrain options when launched in the market. The company claims a maximum driving range of 610 kilometers on a single charge.
Story first published: Saturday, July 18, 2020, 19:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X