புதிய தலைமுறை நிஸான் ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்ட் மாடல் வெளியீடு!

நிஸான் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய தலைமுறை ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்ட் மாடல் வெளியிடப்பட்டுள்ளது. படங்களுடன், தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்.

 புதிய தலைமுறை நிஸான் ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்ட் மாடல் வெளியீடு!

ஜப்பானை சேர்ந்த நிஸான் கார் நிறுவனம் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பிலும் சிறந்து விளங்குகிறது. சாதாரண கார்களின் அடிப்படையிலான செயல்திறன் மிக்க மாடல்கள் மாடல்கள் மற்றும் பிரத்யேக ஸ்போர்ட்ஸ் கார்களை மிகச் சரியான விலையில் வாடிக்கையாளர்களை வழங்கி வருகிறது. குறிப்பாக, நிஸான் நிறுவனத்தின் Z வரிசையிலான ஸ்போர்ட்ஸ் கார் மாடல்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

 புதிய தலைமுறை நிஸான் ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்ட் மாடல் வெளியீடு!

அந்த வகையில், நிஸான் 370Z ஸ்போர்ட்ஸ் காருக்கு மாற்றாக புதிய தலைமுறை ஸ்போர்ட்ஸ் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய மாடலானது நிஸான் 400Z என்ற பெயரில் வர இருப்பதாகவும் தெரிகிறது. இந்த நிலையி்ல், நிஸான் 400Z காரை உருவாக்குவதற்கான அடிப்படையாக உள்ள மாதிரி கார் மாடலை நிஸான் வெளியிட்டுள்ளது.

 புதிய தலைமுறை நிஸான் ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்ட் மாடல் வெளியீடு!

நிஸான் Z Proto என்ற பெயரில் இந்த மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. நிஸான் இசட் புரோட்டோ கான்செப்ட் மாடலின் டிசைன் பாரம்பரிய அம்சங்களை தாங்கி வந்துள்ளது. அதேநேரத்தில், தற்காலத்துக்கு தேவையான எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 19 அங்குல அலாய் வீல்கள், இரட்டை குழல் கொண்ட சைலென்சர் அமைப்பு ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

 புதிய தலைமுறை நிஸான் ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்ட் மாடல் வெளியீடு!

இந்த கார் 370Z காரைவிட 5 அங்குலம் கூடுதல் நீளம் கொண்டதாக இருக்கிறது. பழைய மாடல்களை கவுரவிக்கும் விதத்தில், பல்வேறு டிசைன் அம்சங்கள் கையாளப்பட்டுள்ளதாக நிஸான் வடிவமைப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

 புதிய தலைமுறை நிஸான் ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்ட் மாடல் வெளியீடு!

கார்பன் ஃபைபர் பேனல்கள் கொண்ட உறுதியான கட்டமைப்பு, தொடுதிரை வசதியுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அல்காண்ட்ரா லெதர் இருக்கைகள், மஞ்சள் வண்ண நூலில் தையல் வேலைப்பாடுகள் என இன்டீரியர் நவீன காலத்திற்கு உரிய அம்சங்களுடன் அசத்துகிறது.

 புதிய தலைமுறை நிஸான் ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்ட் மாடல் வெளியீடு!

இந்த இரண்டு இருக்கை வசதி கொண்ட ஸ்போர்ட்ஸ் காரில் இரண்டு சிலிண்டர்களுடன் கூடிய 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், தயாரிப்பு நிலைக்கு மாறும்போது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வரும் என்று தெரிகிறது.

 புதிய தலைமுறை நிஸான் ஸ்போர்ட்ஸ் காரின் கான்செப்ட் மாடல் வெளியீடு!

அடுத்த ஆண்டு நிஸான் இசட் புரோட்டோ ஸ்போர்ட்ஸ் காரின் தயாரிப்பு நிலை மாடல் உற்பத்திக்கு கொண்டு செல்லப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. வரும் 2022ம் ஆண்டு சந்தைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன. 40,000 டாலர் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan has revealed Z Proto Concept Sports Car with retro styling elements and V6 engine.
Story first published: Wednesday, September 16, 2020, 15:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X