வட அமெரிக்காவையே மிரள வைத்த கார் டெலிவரி நிகழ்வு... இப்படி ஒரு டெலிவரியை அந்த நாடே பார்த்ததில்லையாம்!!

வட அமெரிக்காவையே மிரள செய்கின்ற வகையில் லம்போர்கினி டெலிவரி கொடுக்கும் நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வட அமெரிக்காவையே மிரள வைத்த கார் டெலிவரி நிகழ்வு... இப்படி ஒரு டெலிவரியை அந்த நாடே பார்த்ததில்லையாம்!!

லம்போர்கினி நிறுவனத்தின் புதுமுக வெளியீடாக சியான் சூப்பர் கார் இருக்கின்றது. இந்த மாடலின் டெலிவரி வழங்கும் நிகழ்வே வட அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்றது. நார்த் அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வரும் முதல் லம்போர்கினி சியான் இது என்பதால் டெலிவரி கொடுக்கும் நிகழ்வு சற்று கோளகளமாக விழாவைப் போல் நடைபெற்றது.

வட அமெரிக்காவையே மிரள வைத்த கார் டெலிவரி நிகழ்வு... இப்படி ஒரு டெலிவரியை அந்த நாடே பார்த்ததில்லையாம்!!

முன்னதாக இதுபோன்ற எந்தவொரு நிறுவனமும் தனது காரை டெலிவரி கொடுக்கவில்லை என கூறப்படுகின்றது. எனவேதான் இந்த நிகழ்வு தற்போது உலகளவில் பேசும் பொருளாக மாறியிருக்கின்றது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு வட அமெரிக்காவில் தற்போதும் விழாக் காலமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

வட அமெரிக்காவையே மிரள வைத்த கார் டெலிவரி நிகழ்வு... இப்படி ஒரு டெலிவரியை அந்த நாடே பார்த்ததில்லையாம்!!

இந்த நிலையிலேய மிகப்பெரிய பரிசு பெட்டியைப் போன்று மரத்தால் ஓர் பெட்டி உருவாக்கப்பட்டு அதில் லம்போர்கினி சியான் சூப்பர் கார் உரிமையாளருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. முன்னதாக, கிஃப்ட் பாக்ஸை எப்படி வண்ண பேப்பர்களால் அலங்கரிக்கப்பார்களோ, அதேபோன்று, இப்பெட்டியும் அலங்கரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவையே மிரள வைத்த கார் டெலிவரி நிகழ்வு... இப்படி ஒரு டெலிவரியை அந்த நாடே பார்த்ததில்லையாம்!!

லம்போர்கினி நிறுவனம் இக்காரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 63 யூனிட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்றே தற்போது வட அமெரிக்காவில் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவையே மிரள வைத்த கார் டெலிவரி நிகழ்வு... இப்படி ஒரு டெலிவரியை அந்த நாடே பார்த்ததில்லையாம்!!

6.5 லிட்டர் வி12 எஞ்ஜினையே லம்போர்கினி சியான் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், மைல்ட் ஹைபிரிட் சிஸ்டத்தையும் அது வழங்கியுள்ளது. இக்கார் அதிகபட்சமாக 808 எச்பி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதன் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் 48 வோல்டை வெளிப்படுத்தக்கூடியது. இதற்காக 34 எச்பி திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது.

லம்போர்கினி சியான் சூப்பர் காரின் டாப் மணிக்கு 350 கிமீ வேகம் ஆகும். அதேசமயம், இக்கார் 2.8 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தை எட்டக்கூடிய திறனைப் பெற்றிருக்கின்றது. இதற்கு அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 3.6 மில்லியன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 26.34 கோடி ஆகும். இது தோராயமான மதிப்பு மட்டுமே ஆகும்.

Most Read Articles

English summary
North America Gets Very First Lamborghini Sian Delivery. Read In Tamil.
Story first published: Thursday, December 31, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X