நோ இ-பாஸ்! அப்போ வெளிய போக முடியாதா? எமர்ஜென்சினா என்னங்க செய்யுறது? அதுக்கான வழிய நாங்க சொல்றோம்...

கொரோனா வைரசின் கடுமையான பரவலை அடுத்து மீண்டும் முழு ஊரடங்கு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே எமர்ஜென்சி காலத்தில் வெளியே செல்வது எப்படி என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கலாம். அதற்கான வழியைதான் இந்த பதிவில் நாங்கள் வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

நோ இ-பாஸ்! வெளியேவும் போக முடியாது! அப்போ எமர்ஜென்சினா என்னங்க செய்யுறது? அதுக்கான வழிய நாங்க சொல்றோம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெகு நாட்களாக அடைப்பட்டுக்கிடந்த தமிழகம் சில நாட்களுக்கு முன்னரே லேசாக தலை காட்ட ஆரம்பித்தது. இதைக் கண்டு பொறுத்துக்கொள்ளாத கொரோனா வைரஸ் மீண்டும் அதன் திருவிளையாடலை ஆடத் தொடங்கியுள்ளது. அதிலும், முன்பைக் காட்டிலும் பல மடங்கு தீவரமான உக்கிரத் தன்மையுடன் அது தாக்கத் தொடங்கியுள்ளது.

நோ இ-பாஸ்! வெளியேவும் போக முடியாது! அப்போ எமர்ஜென்சினா என்னங்க செய்யுறது? அதுக்கான வழிய நாங்க சொல்றோம்!

இதன் விளைவாக ஆரம்பத்தில் 10, 100 என காணப்பட்ட தொற்றின் எண்ணிக்கை தற்போது ஆயிரம், இரண்டாயிரம் என மின்னலின் வேகத்தையே மிஞ்சும் அளவிற்கு மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது.

அதிலும், சென்னை மற்றும் அதை சுற்றியிருக்கும் மூன்று முக்கிய மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் பரவலின் தீவிரம் மிக கடுமையாக காணப்படுகின்றது.

நோ இ-பாஸ்! வெளியேவும் போக முடியாது! அப்போ எமர்ஜென்சினா என்னங்க செய்யுறது? அதுக்கான வழிய நாங்க சொல்றோம்!

எனவே, அரசு மீண்டும் லாக்டவுண் (ஊரடங்கு) எனும் எந்திரத்தை கையிலெடுத்துள்ளது. மிக முக்கியமாக மேலே பார்த்த நான்கு மாவட்டங்களை மட்டும் முழுமையாக முடக்கியுள்ளது தமிழக அரசு. இந்த முழு ஊரடங்கு வருகின்ற 30ம் தேதி வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் பின்னர் ஊரடங்கு தளர்த்தப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் மீண்டும் துளியளவும் செயல்படாத நிலைக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தள்ளப்பட்டுள்ளன.

நோ இ-பாஸ்! வெளியேவும் போக முடியாது! அப்போ எமர்ஜென்சினா என்னங்க செய்யுறது? அதுக்கான வழிய நாங்க சொல்றோம்!

இதுகுறித்த அறிவிப்பு வெளி வந்த முதலே சென்னையில் தஞ்சமடைந்திருந்த வெளி மாவட்ட மக்கள் மூட்டை, முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சொந்த ஊர் செல்ல புறப்பட்டனர். ஆனால், இ-பாஸ் இல்லாத காரணத்தால் பெரும்பாலான மக்களை வழியிலேயே தடுத்து திருப்பி அனுப்பி வைத்தது தமிழக காவல்துறை.

நோ இ-பாஸ்! வெளியேவும் போக முடியாது! அப்போ எமர்ஜென்சினா என்னங்க செய்யுறது? அதுக்கான வழிய நாங்க சொல்றோம்!

இதனால், நேற்றும், நேற்று முன் தினமும் தேசிய நெடுஞ்சாலைகள் பல வாகன நெரிசலுடன் காணப்பட்டன.

குறிப்பாக, தாம்பரம்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் மக்கள் கூட்டம் வெள்ளம்போல் நிரம்பி வழிந்தது என்றே கூறலாம். இம்மாதிரியான சூழல்களுக்கு இடையிலும் நேற்று நள்ளிரவு முதல் முழுமையான முடக்கம் நான்கு மாவட்டங்களிலும் கொண்டுவரப்பட்டது.

நோ இ-பாஸ்! வெளியேவும் போக முடியாது! அப்போ எமர்ஜென்சினா என்னங்க செய்யுறது? அதுக்கான வழிய நாங்க சொல்றோம்!

இதைத்தொடர்ந்து, தமிழக காவல்துறை பல கடுமையான கட்டுப்பாடுகளை வெளியிட்டது.

அதுகுறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வாநதன் வெளியிட்ட அறிக்கையில், "சென்னையில் மிகக் கடுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்படும். முன்பு அறிவுரை கூறி அனுப்பி வைத்ததன் காரணத்தால், மக்கள் அதனை பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளவில்லை. இம்முறை தீவிர கண்கானிப்பு செய்யப்படும்"...

நோ இ-பாஸ்! வெளியேவும் போக முடியாது! அப்போ எமர்ஜென்சினா என்னங்க செய்யுறது? அதுக்கான வழிய நாங்க சொல்றோம்!

..."சென்னை நகருக்குள் மட்டுமே 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட இருக்கின்றன. தினசரி வேலைக்காக சென்னைக்கு வெளியே சென்று வர அனுமதி இல்லை. போலீ பாஸ் மூலம் செல்வது கண்டறியப்பட்டால் மிக கடுமையான நடவடிக்கைகள் பாயும். காய்கறி மளிகை பொருட்களை வாங்க செல்லும்போது வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது"...

நோ இ-பாஸ்! வெளியேவும் போக முடியாது! அப்போ எமர்ஜென்சினா என்னங்க செய்யுறது? அதுக்கான வழிய நாங்க சொல்றோம்!

..."இரண்டு கிமீ சுற்றளவில் மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்ல வேண்டும். இதை மீறி வெளியேச் செல்ல அனுமதி இல்லை. முக கவசம் அணியாமல் வருவோர் மீது மிக கடுமையான நடிவடிக்கை எடுக்கப்படும்" என மிக நீண்ட எச்சரிக்கைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நோ இ-பாஸ்! வெளியேவும் போக முடியாது! அப்போ எமர்ஜென்சினா என்னங்க செய்யுறது? அதுக்கான வழிய நாங்க சொல்றோம்!

இந்நிலையில், பலருக்கு "அப்படியானால், அவசர கால பயணத்திற்கு எப்படி செல்வது என்ற கேள்வி எழும்பியிருக்கும். அம்மாதிரி உதவியை நாடுவோருக்கு கரம் நீட்டும் விதமாக குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டும் தமிழக காவல்துறை அனுமதியளித்துள்ளது.

இதன்படி, பிரபல ஓலா கால் டாக்ஸி நிறுவனம் 'எமர்ஜென்ஸி சர்வீஸ்' எனும் புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த சேவையின் மூலம் கொரோனா அல்லாத பிற நோயாளிகள் மருத்துவமனைச் செல்ல மற்றும் வீடு திரும்ப முடியும்.

நோ இ-பாஸ்! வெளியேவும் போக முடியாது! அப்போ எமர்ஜென்சினா என்னங்க செய்யுறது? அதுக்கான வழிய நாங்க சொல்றோம்!

அதாவது, தற்போதைய சூழ்நிலையில் சொந்த வாகனத்தில் மருத்துவமனைச் செல்ல முடியாத நிலை இருப்பதாலும், ஆம்புலன்ஸ்களின் சேவைக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும் வழக்கமான பரிசோதனை மற்றும் நோய்குறித்த ஆலோசனைக்கு இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

நோ இ-பாஸ்! வெளியேவும் போக முடியாது! அப்போ எமர்ஜென்சினா என்னங்க செய்யுறது? அதுக்கான வழிய நாங்க சொல்றோம்!

இதன்படி சென்னையில் உள்ள 350ம் மேற்பட்ட முக்கிய மருத்துவமனைகளை ஓலா அதன் மேப் லிஸ்டில் சேர்த்திருப்பதாக கூறியுள்ளது. எனவே, அவசரமாக மருத்துவமனைச் செல்ல நினைப்பவர்களின் ஓலாவின் புக்கிங் ஆப்பினைப் பயன்படுத்தி மருத்துவமனைச் செல்ல முடியும். இதைப் பயன்படுத்தி ஊர் சுற்றச் செல்லலாம் என எனும் தவறாக நினைத்துவிட வேண்டும்.

நோ இ-பாஸ்! வெளியேவும் போக முடியாது! அப்போ எமர்ஜென்சினா என்னங்க செய்யுறது? அதுக்கான வழிய நாங்க சொல்றோம்!

அதேசமயம், இந்த எமர்ஜென்ஸி சர்வீஸ் மூலம் ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்வோருக்கும்

உதவி செய்ய இருப்பதாக ஓலா தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு சேவையை ஓலா தமிழக அரசின் வழி காட்டுதலின்படி மேற்கொண்டிருப்பதாக கூறியுள்ளது. எனவே, அதன் பார்ட்னர்களுக்கு அதிக பாதுகாப்பு வழிமுறைகளை வழங்கப்பட்டுள்ளன.

நோ இ-பாஸ்! வெளியேவும் போக முடியாது! அப்போ எமர்ஜென்சினா என்னங்க செய்யுறது? அதுக்கான வழிய நாங்க சொல்றோம்!

குறிப்பாக, பயணிகளை கையாளும்போது முகக் கவசம் மற்றும் கிருமி நாசினிகளைப் பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. இத்துடன், பயனர்களின் இருக்கும் அதிகப்படியான தொடர்பை தவிர்த்து, சமூக இடைவெளியைக் கடைபிடிக்குமாறும் கூறியிருக்கின்றது.

நோ இ-பாஸ்! வெளியேவும் போக முடியாது! அப்போ எமர்ஜென்சினா என்னங்க செய்யுறது? அதுக்கான வழிய நாங்க சொல்றோம்!

அத்துடன், வாடிக்கையாளர்களையும் அதிகபட்சம் பண பரிவார்த்தனை ரொக்கமாக அல்லாமல் ஆன்-லைன் பரிமாற்றத்தைக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை வெகு நாட்களுக்கு பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னரே இயக்க நிலைக்கு திரும்பியது. எப்படி, மக்கள் இயக்க நிலைக்கு திரும்பினரோ அதேபோன்று வைரசும் அதன் தீவிர நிலைக்கு திரும்பியுள்ளது.

நோ இ-பாஸ்! வெளியேவும் போக முடியாது! அப்போ எமர்ஜென்சினா என்னங்க செய்யுறது? அதுக்கான வழிய நாங்க சொல்றோம்!

எனவேதான், வரைஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தற்போது மீண்டும் முழு ஊரடங்கு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் சற்றே நிம்மதி பெருமூச்சுவிட்ட சென்னைவாசிகள் தற்போது மீண்டும் சிக்கலைச் சந்திக்க ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், அவசர சேவைக்காக 'ஓலா எமர்ஜென்சி' சேவையைத் தொடங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ola Launched 'Ola Emergency' Service In Tamilnadu. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X