பழைய தலைமுறை ஹோண்டா சிட்டி காரும் தொடர்ந்து விற்பனை

அண்மையில் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், முந்தைய தலைமுறை மாடலும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

பழைய தலைமுறை ஹோண்டா சிட்டி காரும் தொடர்ந்து விற்பனை

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் நம்பர்-1 மாடல் என்ற பெருமையை ஹோண்டா சிட்டி கார் பெற்றிருக்கிறது. மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா கார்களால் கடும் போட்டியை சந்தித்தாலும், ஹோண்டா சிட்டி காருக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் இருந்து வருகிறது.

பழைய தலைமுறை ஹோண்டா சிட்டி காரும் தொடர்ந்து விற்பனை

இந்த நிலையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் வேறுபட்ட புதிய தலைமுறை மாடல் அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஐந்தாம் தலைமுறை மாடலாக வந்த ஹோண்டா சிட்டி கார் தற்போது மிட்சைஸ் செடான் கார் வாங்குவோரின் தேர்வு பட்டியலில் முதன்மையாகவும் உள்ளது.

 பழைய தலைமுறை ஹோண்டா சிட்டி காரும் தொடர்ந்து விற்பனை

இந்த தருணத்தில் இதற்கு முந்தைய நான்காம் தலைமுறை மாடலும் தொடர்ந்து விற்பனையில் வைக்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. இதற்காக வேரியண்ட்டுகளில் சில மாற்றங்களுடன் தொடர்ந்து இந்திய சந்தையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

 பழைய தலைமுறை ஹோண்டா சிட்டி காரும் தொடர்ந்து விற்பனை

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் ரூ.10.90 லட்சம் முதல் ரூ14.65 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நான்காம் தலைமுறை மாடலின் பிஎஸ்-6 மாடலானது ரூ.9.91 லட்சம் முதல் ரூ.14.31 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 பழைய தலைமுறை ஹோண்டா சிட்டி காரும் தொடர்ந்து விற்பனை

இந்த நிலையில், இரண்டு தலைமுறை மாடல்களுக்கும் இடையே விலையில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. உதாரணத்திற்கு விஎக்ஸ் சிவிடி பெட்ரோல் வேரியண்ட்டை எடுத்துக் கொண்டால், இரு மாடல்களுக்கும் இடையில் ரூ.44,000 மட்டுமே வித்தியாசமிருக்கிறது. இதனை மனதில் வைத்து ரூ.1.60 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபரை ஹோண்டா வழங்க உள்ளதாக கார்தேக்கோ தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

 பழைய தலைமுறை ஹோண்டா சிட்டி காரும் தொடர்ந்து விற்பனை

எஸ் மற்றும் வி மேனுவல் கியர்பாக்ஸ் வேரிண்யண்ட்டுகளுக்கு ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வி சிவிடி வேரியண்ட்டிற்கு ரூ.51,000 வரை சேமிப்புச் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இதில், நேரடியாக ரூ.31,000 வரையிலும், ரூ.20,000 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் கொடுக்கப்படுகிறது.

 பழைய தலைமுறை ஹோண்டா சிட்டி காரும் தொடர்ந்து விற்பனை

விஎக்ஸ் சிவிடி வேரியண்ட்டிற்கு ரூ.70,000 வரை சேமிப்புச் சலுகையும், ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் வழங்கப்படுகிறது. டாப் வேரியண்ட்டிற்கு ரூ.1.60 லட்சம் வரை சேமிப்புச் சலுகை வழங்கப்பட உள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

 பழைய தலைமுறை ஹோண்டா சிட்டி காரும் தொடர்ந்து விற்பனை

மேலும், நான்காம் தலைமுறை மாடலில் டாப் வேரியண்ட்டுகளை விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ளவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால், இரண்டு மாடல்களுக்கும் இடையிலான விலை வித்தியாசத்தை ஓரளவு குறைத்து காட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று ஹோண்டா நம்புகிறது.

Most Read Articles

English summary
Honda Cars India recently launched the much-awaited fifth-generation Honda City in the Indian market. The company also announced that the old-gen model will also be sold alongside making it accessible for sedan buyers in the country.
Story first published: Tuesday, July 21, 2020, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X