தற்போதைய நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி செடான் காரின் விற்பனையும் நிறுத்தப்படுகிறதா...?

ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் தற்சமயம் விற்பனையில் உள்ள நான்காம் தலைமுறை சிட்டி செடான் மாடலின் விற்பனையை நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

தற்போதைய நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி செடான் காரின் விற்பனையும் நிறுத்தப்படுகிறதா...?

ஹோண்டா நிறுவனம் சிட்டி செடான் காரின் புதிய ஐந்தாம் தலைமுறை காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. இந்த புதிய தலைமுறை கார் விற்பனைக்கு வந்தாலும் இதனுடன் தற்போதைய நான்காம் தலைமுறை காரும் விற்பனை செய்யப்படும் என முன்னதாக தகவல்கள் வெளிவந்தன.

தற்போதைய நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி செடான் காரின் விற்பனையும் நிறுத்தப்படுகிறதா...?

ஆனால் தற்போது டீம் பிஎச்பி என்ற செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவலில் தற்போதைய தலைமுறை சிட்டி செடான் காரின் விற்பனை இந்தியாவில் வரும் மாதங்களில் நிறுத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்களின் மூலம் பார்க்கும்போது ஹோண்டா தற்போதைக்கு ஸ்டாக்கில் உள்ள நான்காம் தலைமுறை செடான் கார்களை மட்டும் தான் விற்பனை செய்யவுள்ளது.

தற்போதைய நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி செடான் காரின் விற்பனையும் நிறுத்தப்படுகிறதா...?

ஸ்டாக்கில் உள்ளவை மொத்தமும் தீர்ந்து போனால் ஐந்தாம் தலைமுறை கார் விற்பனைக்கு வரும் வரைக்கும் சிட்டி செடான் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்காது. தற்போதைய ஹோண்டா சிட்டி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பிஎஸ்6 தரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போதைய நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி செடான் காரின் விற்பனையும் நிறுத்தப்படுகிறதா...?

சிவிடி கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 118 பிஎச்பி மற்றும் 145 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் ஐந்தாம் தலைமுறை சிட்டி காரில் சற்று கூடுதலாக 120 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி செடான் காரின் விற்பனையும் நிறுத்தப்படுகிறதா...?

அதேபோல் கூடுதலாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வையும் பெறவுள்ள இந்த பெட்ரோல் என்ஜின் மட்டுமில்லாமல் டீசல் என்ஜின் தேர்விலும் புதிய தலைமுறை சிட்டி செடான் கார் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த வகையில் புதிய சிட்டி டீசல் காரில் 1.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

தற்போதைய நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி செடான் காரின் விற்பனையும் நிறுத்தப்படுகிறதா...?

இந்த டீசல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 100 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. கூடுதல் என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் மட்டுமில்லாமல் ஐந்தாம் தலைமுறை சிட்டி செடான் காரை கூடுதலான ப்ரீமியம் தரத்திலான டிசைனில் ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

தற்போதைய நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி செடான் காரின் விற்பனையும் நிறுத்தப்படுகிறதா...?

இதனால் தற்போதைய சிட்டி மாடலை காட்டிலும் நீளம், அகலம் மற்றும் உயரம் என பரிணாம அளவுகளையும் சற்று அதிகமாக பெறவுள்ள புதிய தலைமுறை சிட்டி காரில் 32 இணைப்பு வசதிகள் மற்றும் செயல்பாடுகளை கொண்ட அலெக்ஸா வசதி கொண்டுவரப்படவுள்ளது.

தற்போதைய நான்காம் தலைமுறை ஹோண்டா சிட்டி செடான் காரின் விற்பனையும் நிறுத்தப்படுகிறதா...?

நான்காம் தலைமுறை சிட்டி செடான் மாடலின் விற்பனை நிறுத்தப்படவுள்ளது என்று செய்திகள் மட்டுமே வெளியாகி வருகிறதே தவிர்த்து, ஹோண்டா நிறுவனத்தில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை. அறிமுகத்திற்கு பிறகு புதிய சிட்டி கார் தனது வழக்கமான மாருதி சுசுகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வேகன் வெண்டோ மற்றும் ஸ்கோடா ராபிட் போன்ற கார்களுடனேயே விற்பனை போட்டியினை தொடரவுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Current (4th-Generation) Honda City Sedan To Be Discontinued: Here Are The Details!
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X