பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

நீண்ட கால எதிர்பார்ப்புக்கு பிறகு ஒருவழியாக மஹிந்திரா தார் மாடலின் புதிய தலைமுறை கடந்த வாரத்தில் உலகளவில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த நேரத்தில் பழைய தாருக்கும் புதிய தலைமுறை தாருக்கும் இடையே கொண்டுவரப்பட்டுள்ள வேறுபாடுகளை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்பது அவசியமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

புதிய ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள 2020 தார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளை ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் முதன்முறையாக பெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால் முன்பை விட மிகவும் செயல்முறை வாகனமாக அப்கிரேட் ஆகியுள்ளது.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

இதன் வெளிப்புற பேனல்கள் ரிமோவ் செய்யக்கூடியதாகவும், மேற்கூரை மாற்றக்கூடியதாகவும் கொடுக்கப்ப்பட்டுள்ளது. இருப்பினும் காரின் டிஎன்ஏ முந்தைய தலைமுறையில் இருந்து மாற்றப்படவில்லை. ஆனால் பரிணாம அளவுகள் இரண்டிலும் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

அதாவது பழைய தலைமுறை தார் மாடல் வெவ்வேறாக கொண்டிருந்த பின் மற்றும் முன்புற ட்ராக் அளவுகள் புதிய தலைமுறையில் ஒரே அளவாக 1520மிமீ என கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2020 தார் 65மிமீ கூடுதலான நீளத்திலும், சுமார் 129மிமீ கூடுதலான அகலத்திலும், 10மிமீ குறைவான உயரத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

காரின் வீல்பேஸும் முந்தைய தார் மாடலில் இருந்து 20மிமீ அதிகரித்துள்ளது. இவை மட்டுமின்றி புதியதாக 18 இன்ச்சிலும் புதிய தலைமுறை சக்கரங்களை ஏற்றுள்ளது. பழைய தார் மாடலில் நான்கு சக்கரங்களும் 16 இன்ச்சில் தான் வழங்கப்பட்டுவந்தது. க்ரவுண்ட் கிளியரென்ஸ் 18 இன்ச் சக்கரங்களால் 226மிமீ ஆக அதிகரித்துள்ளது.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

இவை மட்டுமின்றி முந்தைய தலைமுறை தார் மாடலில் வழங்கப்பட்டுவந்த 107 பிஎச்பி மற்றும் 247 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 2.5 லிட்டர் டீசல் என்ஜினிற்கு மாற்றாக 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் டீசல் என்ற இரு புதிய என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

இதில் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் 300 என்எம் டார்க் திறனையும், ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. அதுவே டீசல் என்ஜின் ஆனது 130 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும்.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

இதன் உடனும் 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. இந்த ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளையும் டர்போ பெட்ரோல் என்ஜினையும் மஹிந்திரா தார் முதன்முறையாக பெற்றுள்ளது. இவற்றுடன் இந்த இரு புதிய என்ஜின்களும் வழக்கமான 4-சக்கர ட்ரைவ் சிஸ்டத்தையும் பெற்றுள்ளன.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

டிசைனை பொறுத்தவரையில் முன்பக்கத்தில் வட்ட வடிவிலான மல்டி-ப்ரோஜெக்டர் ஹாலோஜன் ஹெட்லேம்ப்கள் மற்றும் செங்குத்தான-ஸ்லாட்களுடன் க்ரில் உள்ளிட்டவற்றில் பழைய தலைமுறையில் இருந்து எந்த மாற்றமும் இல்லை. ஃபாக்ஸ் தட்டுக்கள் கீழ்புறத்தில் இருந்து சங்கி பம்பருடன் உடன் இணைக்கப்பட்டுள்ளன. சக்கர ஆர்ச்சுகளுக்கு நெருக்கமாக டர்ன்-இண்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

ஃபாக் விளக்குகான ஹௌசிங் இந்த புதிய தலைமுறையில் முன் மற்றும் பின் சக்கரங்களின் முனைகளில் புதியதாக கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில் காரின் மொத்த தோற்றத்தையும் மாற்றியதாக புதிய டிசைனில் அலாய் சக்கரங்களை இந்த 2020 மாடலில் மஹிந்திரா நிறுவனம் பொருத்தியுள்ளது.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

இந்த எஸ்யூவி மாடல் இரு கதவுகளை மட்டுமே கொண்ட வாகனமாக தொடர்ந்துள்ளதால் காரின் முன் பாதியின் தோற்றத்தில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. அதற்கு பிறகு உள்ள பகுதியில் தான் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட ஹார்ட்டாப், நீக்கக்கூடிய கூரை பேனல்களுடன் முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளது.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

ஹார்ட்டாப் மட்டுமின்றி சாஃப்ட் டாப் வெர்சனிலும் புதிய தார் கிடைக்கும். இந்த இரு வெர்சன்களிலும் மேற்கூரை ஆனது நிரத்தரமாக பொருத்தப்பட்டதாகவும், ஒட்டுனர் தேவைக்கு ஏற்றாற்போல் பயன்படக்கூடியதாகவும் வழங்கப்படவுள்ளது. இந்த தேர்வும் வேரியண்ட்டை பொறுத்தே வழங்கப்படும்.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

அட்டகாசமான தோற்றத்தில் புதியதாக வழங்கப்பட்டுள்ள சாஃப்ட் டாப் வெர்சனில் மேற்கூரையின் முடிவில் ரோல் கேஹ் மற்றும் டெயில்கேட்டின் முடிவில் கூடுதல் டயர் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கும். முன்பை விட நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இதன் பின்புற பகுதி சற்று உயரமானதாகவும் காட்சியளிக்கிறது.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

அதேபோல் முன்பை விட மிகவும் முரட்டுத்தனமான டிசைனில் காட்சியளிக்கும் பின் பம்பர் ஆனது ஒளி பிரதிப்பலிப்பான் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. டெயில்லேம்ப்கள் அதே செங்குத்தான வடிவில் தொடர்ந்திருந்தாலும், எல்இடி தரத்தில் வழங்கப்பட்டுள்ளன.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

உட்புற கேபின் முந்தைய தலைமுறை தாருடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வாகனமாக விளங்கவுள்ள புதிய தலைமுறை தார் ஜம்ப் இருக்கைகளுக்கு பதிலாக முதன்முறையாக நேருக்கு நேர் பார்க்கப்பட்ட பின் இருக்கைகளை பெற்றுள்ளது.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

இந்த இருக்கைகளை தேவையில்லை என்றால் மடக்கி கொள்ளவும் முடியும். அதேநேரம் புதிய தாரின் அட்வென்ஜெர் ரக ஏஎக்ஸ் வேரியண்ட்களில் அதே அட்வென்ஜெர் அனுபவத்தை தொடரும் விதமாக குதிக்கும் இருக்கைகளே தொடர்ந்துள்ளன. முதன்முறையாக மேற்கூரையில் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

இவை மட்டுமின்றி 7.0 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கண்ட்ரோல்களை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், க்ரூஸ் கண்ட்ரோல், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் டிஎஃப்டி பல தகவல்களை வழங்கக்கூடிய திரை மற்றும் ஸ்போர்டியான தோற்றத்தில் இருக்கைகள் உள்ளிட்டவற்றையும் புதிய தலைமுறை தார் ஏற்றுள்ளது.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

இதனால் முன்பை விட இதன் கேபின் ப்ரீமியம் தரத்தில் இருக்கும் என்பதை நான் கூற வேண்டும் என்ற அவசியமே இல்லை. தூசி மற்றும் நீர் எதிர்ப்புக்கு இதன் கேபின் ஐபி 54 மதிப்பீடை பெற்றுள்ளது. இதன் 7.0 இன்ச் தொடுத்திரை அட்வென்ஜெர் நிலைகள் போன்ற சிறப்பு தொழிற்நுட்பங்களை பெற்றுள்ளதால் வெவ்வேறு விதமான ட்ரைவ் தகவல்களை ரியல் நேரத்தில் காண முடியும்.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

அதேபோல் ட்ரைவிங்கின் போது எவ்வளவு பிஎச்பி மற்றும் என்எம் டார்க் திறனை பயன்படுத்துகிறோம் என்பது குறித்த தகவல்களை கூட இந்த சிஸ்டத்தின் மூலம் அறியலாம். இந்த சிஸ்டத்தை எவ்வாறான கஸ்டம் பணிகளுக்கு உட்படுத்தலாம் என்பது குறித்த விபரங்கள் ஓட்டுனருக்காக டிஎஃப்டி திரையில் கொடுக்கப்பட்டுள்ளன.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

முந்தைய தலைமுறையில் இருந்து பல பாதுகாப்பு அம்சங்களை புதிய தலைமுறை தார் இழந்துள்ளது. இருப்பினும் இந்த 2020 மாடலில் மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ள பாதுக்காப்பு அம்சங்கள் சில, கட்டாயம் கொடுக்கப்பட வேண்டியவை என்றாலும், மீதி வாடிக்கையாளர்களை கவர்வதற்காக வழங்கப்பட்டுள்ளது.

பழைய மஹிந்திரா தார் Vs 2020 தார்... புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் இவைதான்...

முன்புறத்தில் இரு காற்றுப்பைகள், பின்புற பார்க்கிங் சென்சார்கள், ரோல் குறைப்புடன் இஎஸ்பி, இபிடி உடன் ஏபிஎஸ், ஐசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான இருக்கை, ரோல் கேஜ், காரின் வேகத்தை அறிந்து தானாக கதவுகள் லாக் ஆகும் வசதி மற்றும் பின்புற பயணிகளுக்கும் மூன்று முறைகளில் பயன்படுத்தக்கூடிய சீட்பெல்ட்கள் உள்ளிட்டவை 2020 தாரில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களாகும்.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Difference between old Mahindra thar ad 2020 thar.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X