ஒலெக்ட்ரா- பிஒய்டி கூட்டணியில் இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஆம்னி பஸ்... வால்வோ கதை என்னாகுமோ?

முக்கிய நகரங்களுக்கு இடையில் இயக்கும் வாய்ப்பை வழங்கும் இந்தியாவில் முதல் எலெக்ட்ரிக் ஆம்னி பஸ் மாடலை ஒலெக்ட்ரா-பிஒய்டி கூட்டணி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்துள்ளது. அட்டகாசமான அம்சங்கள் கொண்ட இந்த புதிய ஆம்னி பஸ் குறித்த தகவல்கள், படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஆம்னி சொகுசு பஸ்

மாசு உமிழ்வு பிரச்னையை குறைக்கும் நோக்கத்தில் மின்சார வாகனங்களுக்கு வாகன நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். தற்போது பெரு நகரங்களில் வாகனங்களால் ஏற்படும் மாசு உமிழ்வு பிரச்னையை குறைக்கும் முயற்சியாக மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஆம்னி சொகுசு பஸ்

இந்த நிலையில், ஹைதராபாத் நகரை சேர்ந்த ஒலெக்ட்ரா க்ரீன்டெக் மற்றும் சீனாவை சேர்ந்த பிஒய்டி நிறுவனமும் கூட்டணி அமைத்து இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ் விற்பனையில் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஆம்னி சொகுசு பஸ்

இந்த ஒலெக்ட்ரா-பிஒய்டி கூட்டணி நிறுவனம் வாகனங்களால் ஏற்படும் மாசு உமிழ்வு பிரச்னைக்கு முக்கிய தீர்வு காணும் விதமாக புதிய எலெக்ட்ரிக் பஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை நகர்ப்புறத்தில் இயங்குவதற்கான எலெக்ட்ரிக் பஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வந்தன.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஆம்னி சொகுசு பஸ்

இந்த நிலையில், இரு பெருநகரங்களுக்கு இடையே இயக்குவதற்கான இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஆம்னி பஸ் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்துள்ளது ஒலெக்ட்ரா-பிஒய்டி கூட்டணி. இந்த புதிய ஆம்னி பஸ் மாடலானது அதிக தூரம் பயணிக்கும் பேட்டரி தொகுப்புடன் மிக சொகுசான மாடலாக வந்துள்ளது.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஆம்னி சொகுசு பஸ்

ஒலெக்ட்ரா-பிஒய்டி C9 என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ் மாடலானது ஒருமுறை சார்ஜ் செய்தால் 350 கிமீ தூரம் வரை பயணிக்கும்.தலா 180 kW திறன் கொண்ட இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த மின் மோட்டார்கள் அதிகபட்சமாக 3,000 என்எம் டார்க் திறனை வழங்கும். மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்லும் திறனை பெற்றிருக்கிறது.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஆம்னி சொகுசு பஸ்

இந்த புதிய ஒலெக்ட்ரா- பிஒய்டி சி9 எலெக்ட்ரிக் பஸ் 45 சீட்டர் முதல் 49 சீட்டர் வரையிலான மாடல்களில் கிடைக்கும். மேலும், டீசலில் இயங்கும் ஆம்னி பஸ்களை ஒப்பிடும்போடு, இந்த எலெக்ட்ரிக் ஆம்னி பஸ்சின் இயக்குதல் செலவு மிக மிக குறைவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஆம்னி சொகுசு பஸ்

டீசலில் இயங்கும் ஆம்னி பஸ்களை இயக்குவதற்கு கிலோமீட்டருக்கு ரூ.24 முதல் ரூ.28 வரை செலவாகும். ஆனால், இந்த எலெக்ட்ரிக் ஆம்னி பஸ்சை இயக்குவதற்கு கிலோமீட்டருக்கு ரூ.8 மட்டுமே செலவாகும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஆம்னி சொகுசு பஸ்

இந்த எலெக்ட்ரிக் ஆம்னி பஸ்சில் ஏசி வசதி, வைஃபை இன்டர்நெட் வசதி, டிவி திரைகள், இருக்கைகளுக்கு தனித்தனி யுஎஸ்பி சார்ஜர், பஷ் பேக் இருக்கைகள் உள்ளிட்டவை முக்கிய வசதிகளாக குறிப்பிடலாம். அவசர காலத்தில் ஓட்டுனர் மற்றும் பயணிகளை எச்சரிக்கும் தொழில்நுட்ப வசதியும் உள்ளது.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஆம்னி சொகுசு பஸ்

இந்த ஆண்டு 300 யூனிட்டுகள் சி9 எலெக்ட்ரிக் ஆம்னி பஸ்களை விற்பனை செய்வதற்கு ஒலெக்ட்ரா- பிஒய்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அரசு போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஆம்னி சொகுசு பஸ்

இந்த நிறுவனம் ஏற்கனவே நகர்ப்புறத்தில் இயக்கும் வசதி கொண்ட பஸ் மாடல்களை பல்வேறு மாநில அரசு போக்குவரத்து கழக நிறுவனங்களுக்கு வழங்கி இருக்கிறது. இதுவரை 200 எலெக்ட்ரிக் பஸ்களை விற்பனை செய்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Olectra-BYD has launched first electric inter-city bus model in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X