உலகிலேயே மிக காஸ்ட்லியான கிறிஸ்துமஸ் அலங்காரம்.. இதற்கான செலவு மட்டும் எவ்ளோ தெரியுமா?

உலகின் மிகவும் காஸ்ட்லியான கிறிஸ்துமஸ் அலங்காரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

உலகிலேயே மிக காஸ்ட்லியான கிறிஸ்துமஸ் அலங்காரம்.. இதற்கான செலவு மட்டும் எவ்ளோ தெரியுமா?

பொதுவாக கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே நம் அனைவரின் ஞாபகத்திற்கும் வருவது 'குடில்'. மரம், செடி, பெல் கால்நடைகள் மற்றும் தூதர்களால் அனுப்பி வைக்கப்பட்ட அரசர்கள் இன்னும் பிற மனிதர்கள் அந்த குடிலில் இருப்பார்கள். இப்படியான குடிலையே நாம் இதுவரை பார்த்திருக்கின்றோம். இதுக்கு என்னங்க மிஞ்சி மிஞ்சி போன ஆயிரம் அல்லது லட்சங்களே போதுமாச்சே என உங்களுக்கு தோன்றலாம்.

உலகிலேயே மிக காஸ்ட்லியான கிறிஸ்துமஸ் அலங்காரம்.. இதற்கான செலவு மட்டும் எவ்ளோ தெரியுமா?

ஆனால், நாம் இங்கு பார்க்க இருப்பது 13.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் பற்றியதாகும். இந்த குடிலில் உலகின் மிக விலையுயர்ந்த புகாட்டி லா வாயூர் நோயர் (Bugatti La Voiture Noire) கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கார் உலக நாடுகளில் 13.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

உலகிலேயே மிக காஸ்ட்லியான கிறிஸ்துமஸ் அலங்காரம்.. இதற்கான செலவு மட்டும் எவ்ளோ தெரியுமா?

இந்த காரை நிறுத்தி வைத்திருக்கின்ற காரணத்தினாலயே 13.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான குடிலாக இது மாறியிருக்கின்றது. புகாட்டி நிறுவனத்தின் சொந்த நாடான ஃபிரான்ஸிலேயே இந்த கிறிஸ்துமஸ் அலங்கார குடில் தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக கிறிஸ்துமஸ் குடில் என்றால் குழந்தை ஏசுவின் பொம்மை மற்றும் பிற சிலைகளே காட்சியளிக்கும். ஆனால், இதில் புகாட்டி லா வோய்ர் நோய்ரே காரே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

உலகிலேயே மிக காஸ்ட்லியான கிறிஸ்துமஸ் அலங்காரம்.. இதற்கான செலவு மட்டும் எவ்ளோ தெரியுமா?

இந்த கார் மிகவும் பாதுகாப்பான கண்ணாடி பெட்டகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், சுற்றிலும் சீரியல் மின் விளக்குகள் சுற்றி விடப்பட்டிருக்கின்றன. ஆகையால், மிகவும் ரம்மியமான குடிலாகவும் இது காட்சியளிக்கின்றது. இந்த குடிலானது வருகின்ற மார்ச் மாதம் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகிலேயே மிக காஸ்ட்லியான கிறிஸ்துமஸ் அலங்காரம்.. இதற்கான செலவு மட்டும் எவ்ளோ தெரியுமா?

ஆகையால், ஃபிரான்ஸ் நாட்டின் மோல்ஷியம் எனும் பகுதிக்கு நீங்கள் செல்லவிருந்தால் கட்டாயம் இந்த குடிலை ஒரு விசிட் செய்துவிடுங்கள். புகாட்டி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரால் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இக்கார் உலகின் மிகுந்த சொகுசு வசதிகள் கொண்ட கார்களில் ஒன்றாக இருக்கின்றது.

உலகிலேயே மிக காஸ்ட்லியான கிறிஸ்துமஸ் அலங்காரம்.. இதற்கான செலவு மட்டும் எவ்ளோ தெரியுமா?

இதுமட்டுமின்றி சூப்பர் திறன் கொண்ட காராகவும் இது இருக்கின்றது. புகாட்டி நிறுவனத்தின் 110ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு லா வோய்ர் நோய்ர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இக்காரில் குவாட்-டர்போ 8.0 லிட்டர் டபிள்யூ16 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 1,500 பிஎஸ் பவரையும், 1,600 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 380 கிமீ வேகம் ஆகும்.

Most Read Articles
மேலும்... #புகாட்டி #bugatti
English summary
One Of The Most Costliest Christmas Decoration In The World. Read In Tamil.
Story first published: Monday, December 21, 2020, 19:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X