இந்தியாவில் பறக்கும் கார் உற்பத்தி... பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு அடித்த ஜாக்பாட்...

விரைவில் இந்தியாவின் வாடகை கார் சேவையில் இணையவிருக்கும் பறக்கும் ஹைபிரிட் காரின் தயாரிப்பு இந்தியாவில் தொடங்கவிருக்கின்றது. இதற்கான உற்பத்தியாலை பிரதமர் நரேந்தி மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அமையவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியாவில் தயாராகும் பறக்கும் கார்... பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு அடித்த ஜாக்பாட்...

நெதர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பால்-வி. சர்வதேச அளவில் வாகனங்களை விற்பனைச் செய்து இந்நிறுவனம், உலகின் முதல் பறக்கும் கார் தயாரிப்பு நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கின்றது.

இந்நிறுவனம் விரைவில் அதன் பிரம்மிப்பை ஏற்படுத்தும் பறக்கும் கார்களை உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவிலும் களமிறக்க இருக்கின்றது. குறிப்பாக, வாடகை கார் சந்தையில் அதன் பறக்கும் கார்களை களமிறக்க பால்-வி திட்டமிட்டிருக்கின்றது.

இந்தியாவில் உற்பத்தியாகும் பறக்கும் கார்... பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு அடித்த ஜாக்பாட்...

இதற்காக, மத்திய அரசிடம் இந்நிறுவனம் சார்பில் அண்மையில் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் கிடைத்த ஒப்புதலின் அடிப்படையில், பால் வி நிறுவனம் விரைவில் அதன் பறக்கும் கார்களை சோதனையோட்டம் செய்ய இருக்கின்றது.

தொடர்ந்து, இந்த கார்களை இந்தியாவிலேயே வைத்து கட்டமைக்கவும் திட்டமிட்டிருக்கின்றது.

இந்தியாவில் உற்பத்தியாகும் பறக்கும் கார்... பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு அடித்த ஜாக்பாட்...

இதற்காக, பால்-வி நிறுவனம் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தைத் தேர்வு செய்திருக்கின்றது. ஆகையால், இந்நிறுவனம் பிரமாண்ட பறக்கும் கார் தயாரிப்பு மையம் குஜராத்தில் விரைவில் அமைய இருக்கின்றது.

இந்தியாவில் பறக்கும் கார் உற்பத்தி... பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு அடித்த ஜாக்பாட்...

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்த நிகழ்வின்போது அம்மாநிலத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி, மாநில தொழில்துறை முதன்மை செயலாளர் எம்.கே.தாஸ் மற்றும் பிஏஎல்-வி இன் சர்வதேச வர்த்தக மேம்பாட்டுத் துறையின் துணைத் தலைவர் கார்லோ மாஸ்பொம்மல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்த பறக்கும் கார்களை பால்-வி நிறுவனம் வாடகை கார் சந்தை மட்டுமின்றி தனியார் பயன்பாட்டிற்கும் விற்பனைச் செய்ய இருக்கின்றது.

இந்தியாவில் பறக்கும் கார் உற்பத்தி... பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு அடித்த ஜாக்பாட்...

இதனை தனியார் இயக்க வேண்டுமானால் சாலையில் வாகனங்களை இயக்க அனுமதி பெறுவதைப் போன்றே பறக்கும் கார்களை இயக்க அனுமதி பெறவேண்டியிருக்கின்றது. குறிப்பாக, இந்த பறக்கும் காரை இயக்க வேண்டுமானால், சர்வதேச விமானங்களுக்கு என்ன நடைமுறைகள் பயன்படுத்தப்படுகின்றதோ அதே விதிகள் இந்த கார்களை இயக்க கடைபிடிக்க வேண்டியிருக்கின்றது.

இந்தியாவில் பறக்கும் கார் உற்பத்தி... பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு அடித்த ஜாக்பாட்...

ஆகையால், இதற்கான செயல்முறையை பயிற்சியை 35 மணி முதல் 45 மணி நேரங்கள் வரை பால்-வி நிறுவனம் வழங்க இருக்கின்றது.

இந்த ஹைபிரிட் பறக்கும் காரை பால்-வி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஜெனிவா வாகன கண்காட்சியில் முதல் முறையாக காட்சிப்படுத்தியிருந்தது. இதையடுத்து, உலகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும்விதமாக உற்பத்தி நடவடிக்கையில் களமிறங்கியிருக்கின்றது.

இந்தியாவில் பறக்கும் கார் உற்பத்தி... பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு அடித்த ஜாக்பாட்...

இந்த பறக்கும் கார் அறிமுகம் செய்த பல கட்டுக்கதைகள் இணையத்தில் உலா வந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக, இந்த கார் மக்கள் பயன்பாட்டிற்கு வராது. மாறாக திரைப்படங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையற்ற கருத்துகல் பரவிய வண்ணம் இருந்தது.

ஆனால், அவையனைத்தையும் பால்-வி தகர்ந்தெறிந்து பறக்கும் காரை உற்பத்திக்கு பணிக்கு மேம்படுத்தியிருக்கின்றது.

இந்தியாவில் பறக்கும் கார் உற்பத்தி... பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு அடித்த ஜாக்பாட்...

ஏற்கனவே, இந்த காருக்கான புக்கிங் குவியத் தொடங்கியிருக்கின்றது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் மட்டுமே 100-க்கும் அதிகமான யூனிட்டுகளுக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளது. இந்த அதீத வரவேற்பினால் பால்-வி தற்போது உற்சாகமடையத் தொடங்கியிருக்கின்றது.

இதே உற்சாகத்துடன் தற்போது இந்தியாவிலும் கால் தடம் பதித்திருக்கின்றது. மேலும், இந்த வேகத்திலேயே 2021ம் ஆண்டிற்குள் பால்-வி பறக்கும் ஹைபிரிட் கார்களை தயாரிக்கவும் இருக்கின்றது.

இந்தியாவில் பறக்கும் கார் உற்பத்தி... பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு அடித்த ஜாக்பாட்...

இதற்கான பணிகளில், அதாவது உற்பத்தியாலை அமைத்தல், பணியாளர்கள் மற்றும் தேவையான கருவிகளை இறக்குமதிச் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றது.

இதற்கு தேவையான ஆவணங்கள் சிலவற்றை மத்திய அரசிடம் இருந்து பெற குஜராத் மாநில அரசு இணைந்து உதவி புரிந்து வருகின்றது. இது தனித்துவமான வாகன உற்பத்தி என்பதால் நாட்டில் தயாரிப்பை மையத்தை நிறுவுவது சற்றே சிரமமானதாக இருக்கின்றது.

இந்தியாவில் பறக்கும் கார் உற்பத்தி... பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு அடித்த ஜாக்பாட்...

பால் நிறுவனத்தின் இந்த ஹைபிரிட் பறக்கும் கார் ஹெலிகாப்டரைப் போன்ற அமைப்பைக் கொண்டதாக இருக்கின்றது.

இதில், மூன்று சக்கரங்களும் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை கார் பறக்காத நிலையில் சாலையில் டயர்கள் மூலம் ஊர்ந்துசெல்ல உதவும்.

இந்தியாவில் பறக்கும் கார் உற்பத்தி... பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு அடித்த ஜாக்பாட்...

இவ்வாறு, தரை மற்றும் சாலை பயன்பாட்டிற்கு ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இதன் உடல்பாக கூடுகள் அனைத்தும் கார்பன்-ஃபைபர் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், சர்வதேச சந்தையில் சில பறக்கும் கார்களை அலுமினியம் மற்றும் டைட்டானியம் ஆகிய உலோகத்தாலும் கட்டமைத்து பால்-வி வழங்கி வருகின்றது.

இந்தியாவில் பறக்கும் கார் உற்பத்தி... பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு அடித்த ஜாக்பாட்...

இவ்வாறு, கட்டமைக்கப்பட்ட பறக்கும் கார்கள் எடை அதிகரிப்பையும், விலையையுர்வையும் கொண்டிருக்கின்றன. ஆகையால், இந்தியாவில் களமிறங்கும் பறக்கும் கார்களை கார்பன்-ஃபைர் மூலம் கட்டமைக்க பால்-வி திட்டமிட்டுள்ளது.

இதனால் 680 கிலோ வரை இந்திய ஸ்பெக் ஹைபிரிட் பறக்கும் கார்கள் பெற்றிருக்கின்றன. இந்த பறக்கும் கார் வான்வெளியில் சீறிப் பாய்வதற்காக, ஓடு தளம் வெறும் 165 மீட்டர்கள் இருந்தாலே போதுமானது. அதேசமயம், மீண்டும் தரையிறங்குவதற்கு 30 மீட்டர்கள் மட்டுமே தேவைப்படுகின்றது.

இந்தியாவில் பறக்கும் கார் உற்பத்தி... பிரதமர் மோடியின் சொந்த ஊருக்கு அடித்த ஜாக்பாட்...

பால்-வி பறக்கும் ஹைபிரிட் காரில் இரு 100 பிஎச்பி எஞ்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது, காற்று அல்லது தரையில் மணிக்கு 180 கிமீ என்ற வேகத்தில் செல்ல உதவும். இந்த பறக்கும் காரில் பல்வேறு சொகுசு வசதிகளும் வழங்கப்பட இருக்கின்றது. குறிப்பாக, பெரும் செல்வந்தர்களைக் கவர்கின்ற வகையில் பல்வேறு பிரிமியம் லக்சூரிகளை உள்ளடக்கியதாக களமிறங்கும் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Most Read Articles
English summary
PAL-V Flying Car To Be Built In Gujarat. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X