திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

2020ம் ஆண்டின் இறுதி கட்டத்தை நாம் எட்டியுள்ளோம். புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய கார்களை ஒரு முறை திரும்பி பார்ப்பது சிறப்பாக இருக்கும். நமது வாசகர்களுக்காக இதனை 2 பகுதிகளாக வழங்கவுள்ளோம். முதல் பகுதி இது. இதில், நடப்பாண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முக்கியமான புத்தம் புதிய கார்கள் மற்றும் புதிய தலைமுறை மாடல்களைதான் தொகுத்துள்ளோம். ஃபேஸ்லிஃப்ட்கள், ஸ்பெஷல் எடிசன்கள், புதிய வேரியண்ட்கள் உள்ளிட்டவை சேர்க்கப்படவில்லை.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

ஹூண்டாய் அவ்ரா - ஜனவரி 21

அவ்ரா சப்-4 மீட்டர் செடான் காரை, ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஜனவரி 21ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்று இன்ஜின் தேர்வுகளுடன் ஹூண்டாய் அவ்ரா விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎஸ் பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

அதே சமயம் 1.2 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 75 பிஎஸ் பவரையும், 190 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்ய கூடியது. இந்த இன்ஜின் உடனும் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த இரண்டு இன்ஜின் தேர்வுகளும், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரிலும் வழங்கப்படுகின்றன.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

அதே நேரத்தில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், ஹூண்டாய் வெனியூ காரில் இருந்து பெற்றப்பட்டதாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் மட்டுமே இந்த இன்ஜின் தேர்வு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

தற்போதைய நிலையில், 5.85 லட்ச ரூபாய் முதல் 9.28 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் ஹூண்டாய் அவ்ரா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். மாருதி சுஸுகி டிசையர், ஹோண்டா அமேஸ் உள்ளிட்ட கார்களுடன், ஹூண்டாய் அவ்ரா போட்டியிட்டு வருகிறது. மாதந்தோறும் ஹூண்டாய் நிறுவனத்திற்கு ஓரளவிற்கு சிறப்பான விற்பனை எண்ணிக்கையை அவ்ரா ஈட்டி தருகிறது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

டாடா அல்ட்ராஸ் - ஜனவரி 22

இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார் அல்ட்ராஸ். மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20 உள்ளிட்ட கார்களுடன் டாடா அல்ட்ராஸ் போட்டியிட்டு வருகிறது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா அல்ட்ராஸ் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா நிறுவனத்தின் கார் அல்ட்ராஸ்தான். இந்த கார் விற்பனைக்கு வரும்போது, விற்பனையில் இவ்வளவு சிறப்பாக செயல்படும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனை வழங்க கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 90 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடிய 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் என இரண்டு இன்ஜின் தேர்வுகளுடன் டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

அத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷனுடன் மட்டுமே இந்த இரண்டு இன்ஜின் தேர்வுகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. தற்போதைய நிலையில் 5.44 லட்ச ரூபாய் முதல் 8.95 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் டாடா அல்ட்ராஸ் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ ஷோரூம் விலையாகும்.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி - ஜனவரி 23

ஹூண்டாய் கோனாவிற்கு பின் இந்திய சந்தைக்கு வந்த நடைமுறை பயன்பாட்டிற்கு மிகவும் உகந்த எலெக்ட்ரிக் காராக எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியை குறிப்பிடலாம். இந்த காரில், 44.5 kWh வாட்டர் கூல்டு, லித்தியம் அயான் பேட்டரியை எம்ஜி மோட்டார் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக நிரப்பினால், 340 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும்.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

இந்த காரின் பேட்டரியை ஏசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 80 சதவீதம் வரை நிரப்புவதற்கு 6 முதல் 8 மணி நேரம் வரை ஆகும். ஆனால் டிசி சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர் இதனை செய்வதற்கு வெறும் 50 நிமிடங்களை மட்டுமே எடுத்து கொள்ளும். தற்போதைய நிலையில், 20.88 லட்ச ரூபாய் முதல் 23.58 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி - ஜனவரி 28

அல்ட்ராஸ் காரை விற்பனைக்கு கொண்டு வந்த ஒரு வார காலத்திற்கு உள்ளாகவே நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 30.2 kWh லித்தியம் அயான் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 312 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும்.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

சாதாரண சார்ஜரை பயன்படுத்தினால், இந்த காரின் பேட்டரியை முழுமையாக நிரப்புவதற்கு சுமார் 8 மணி நேரம் ஆகும். ஆனால் ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால் வெறும் 1 மணி நேரத்தில், 80 சதவீதம் வரை பேட்டரியை நிரப்பி விட முடியும். இந்த காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

விற்பனைக்கு வந்து தற்போது சுமார் 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், 2,200க்கும் மேற்பட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி உருவெடுத்துள்ளது. தற்போதைய நிலையில் 13.99 லட்ச ரூபாய் முதல் 16.25 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

கியா கார்னிவல் - பிப்ரவரி 5

கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து, கார்னிவல் எம்பிவி காரை கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. கியா கார்னிவல் காரில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 200 பிஎஸ் பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஸ்போர்ட்ஸ்மேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில், 24.95 லட்ச ரூபாய் முதல் 33.95 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் கியா கார்னிவல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கியா நிறுவனத்திற்கு மாதந்தோறும் ஓரளவிற்கு விற்பனை எண்ணிக்கையை கார்னிவல் ஈட்டி தந்து கொண்டுள்ளது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா - மார்ச் 16

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதிய தலைமுறை கிரெட்டா எஸ்யூவியை ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஹூண்டாய் கிரெட்டா காரில் மொத்தம் 3 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 115 ஹெச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வும் ஒன்று. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

இதுதவிர 115 ஹெச்பி பவரை வெளிப்படுத்த கூடிய 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் தேர்வையும் புதிய ஹூண்டாய் கிரெட்டா பெற்றுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தேர்வும் புதிய ஹூண்டாய் கிரெட்டா காரில் கிடைக்கிறது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில், 9.81 லட்ச ரூபாய் முதல் 17.31 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் ஹூண்டாய் கிரெட்டா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்திற்கு பெரும் விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் கார்களில் கிரெட்டாவும் ஒன்றாக உள்ளது.

திரும்பி பார்ப்போம்... 2020ம் ஆண்டில் விற்பனைக்கு வந்து இந்திய சந்தையை கலக்கி கொண்டிருக்கும் புத்தம் புதிய கார்கள்...

மார்ச் மாதத்திற்கு பின்பு கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பல புதிய கார்களின் அறிமுகம் தள்ளிப்போனது. இருந்தாலும் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்ட பிறகும், பண்டிகை காலத்தை முன்னிட்டும் ஏராளமான புதிய கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அவை என்னென்ன? என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Part 1: New Cars Launched In 2020 - Aura, Altroz, ZS EV, Nexon EV, Carnival, New-gen Creta. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X