Just In
- 1 hr ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 1 hr ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 3 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திரும்பி பார்ப்போம்... கியா சொனெட் முதல் புதிய ஹூண்டாய் ஐ20 வரை... 2020ம் ஆண்டை தெறிக்க விட்ட கார்கள்...
ஒரு வழியாக 2020ம் ஆண்டின் இறுதி கட்டத்தை நாம் எட்டியுள்ளோம். புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கார்கள் குறித்த தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தமிழ், வாசகர்களுக்கு வழங்கி வருகிறது. இதன் முதல் பகுதியை கடந்த சில நாட்களுக்கு முன் பிரசுரித்தோம். இது இரண்டாவது மற்றும் கடைசி பகுதி. நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து கார்களையும் வழங்க முடியாது என்பதால், மிகவும் முக்கியமான கார்களை மட்டும் தொகுத்துள்ளோம்.

கியா சொனெட்
செல்டோஸ் மற்றும் கார்னிவல் ஆகிய கார்களுக்கு பிறகு, இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த மூன்றாவது தயாரிப்பு சொனெட். சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நிலை நிறுத்தப்பட்டுள்ள கியா சொனெட் 6.71 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. செல்டோஸ் எஸ்யூவியை போல் கியா சொனெட்டிற்கும் இந்தியாவில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் இன்ஜின் உள்பட 2 பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மொத்தம் மூன்று இன்ஜின் தேர்வுகளில் கியா சொனெட் கிடைக்கிறது. அத்துடன் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. சவாலான விலை நிர்ணயம், பல்வேறு இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள், அதிநவீன வசதிகள் ஆகியவை கியா சொனெட்டின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கியமான காரணங்களாக அமைந்துள்ளன.

டொயோட்டா அர்பன் க்ரூஸர்
டொயோட்டா நிறுவனமும், சுஸுகி நிறுவனமும் கூட்டணி அமைத்துள்ளன என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம்தான். இதன் அடிப்படையில் இந்தியாவில் மாருதி சுஸுகி கார்களை, டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது. இதன்படி மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் டொயோட்டா பிராண்டில், க்ளான்சா என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த வரிசையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் புகழ்பெற்ற சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரான விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா பிராண்டில் அர்பன் க்ரூஸர் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு இந்திய சந்தையில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், சுஸுகி உடனான கூட்டணியை பயன்படுத்தி கொண்டு அர்பன் க்ரூஸரை டொயோட்டா அறிமுகம் செய்துள்ளது.

நிஸான் மேக்னைட்
இந்திய சந்தைக்கு வந்த மற்றொரு காம்பேக்ட் எஸ்யூவி நிஸான் மேக்னைட். நடப்பு டிசம்பர் மாதத்தின் தொடக்கத்தில்தான் நிஸான் மேக்னைட் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. வெறும் 4.99 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் நிஸான் மேக்னைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சவாலான விலை நிர்ணயம், போட்டியாளர்களை வலுவாக எதிர்கொள்ள உதவியுள்ளது.

விலை குறைவு என்றாலும் ஏராளமான வசதிகளை நிஸான் நிறுவனம் வழங்கியிருப்பதுடன், மேக்னைட் காரின் டிசைனும் கவர்ச்சிகரமாக உள்ளது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் உள்பட நிஸான் மேக்னைட் காரில் மொத்தம் இரண்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த காருக்கு தற்போது முன்பதிவுகள் குவிந்து வருகின்றன.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி
5வது தலைமுறை சிட்டி செடான் காரை ஹோண்டா நிறுவனம் நடப்பாண்டு இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டிசைன் மாற்றங்கள் மற்றும் ஏராளமான வசதிகள் நிரம்பிய கேபினுடன் புதிய ஹோண்டா சிட்டி விற்பனைக்கு வந்துள்ளது. எனவே பழைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய ஹோண்டா சிட்டியின் விலை உயர்ந்துள்ளது.

புதிய ஹோண்டா சிட்டி கார் 10.90 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளுமே புதிய ஹோண்டா சிட்டி காரில் வழங்கப்படுகின்றன. ஹோண்டா நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் அதிக விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தரும் மாடல்களில் ஒன்றாக சிட்டி உள்ளது.

புதிய தலைமுறை மஹிந்திரா தார்
புதிய தலைமுறை தார் எஸ்யூவியை கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. பழைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடுகையில், முற்றிலும் புத்தம் புதிய மாடலாக தார் எஸ்யூவி வந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளும் புதிய தார் எஸ்யூவியில் கிடைக்கின்றன.

புதிய தலைமுறை தார் எஸ்யூவிக்கு மஹிந்திரா நிறுவனம் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக காத்திருப்பு காலம் அதிகமாக உள்ளது. இந்த நீண்ட காத்திருப்பு காலம் மட்டுமே முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களை அதிருப்திடைய செய்துள்ளது. எஞ்சிய அனைத்து அம்சங்களிலும் புதிய தார் எஸ்யூவி வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.

புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20
கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில், புதிய தலைமுறை ஹூண்டாய் ஐ20 இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் தற்போது மூன்றாவது தலைமுறை மாடலாக வந்துள்ளது. இதன் டிசைன் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டு, பார்ப்பதற்கே கவர்ச்சிகரமாக உள்ளது. இதுதவிர சக்தி வாய்ந்த இன்ஜின் தேர்வுகளையும் புதிய ஹூண்டாய் ஐ20 பெற்றுள்ளது.

எனவே இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை புதிய ஹூண்டாய் ஐ20 பெற்றுள்ளது. இந்த பிரீமியம் ஹேட்ச்பேக்கின் விலை 6.80 லட்ச ரூபாயில் (எக்ஸ் ஷோரூம்) இருந்து தொடங்குகிறது. 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் உள்பட புதிய ஹூண்டாய் ஐ20 காரில் மொத்தம் மூன்று இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

எம்ஜி க்ளோஸ்ட்டர்
இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பு க்ளோஸ்ட்டர். எம்ஜி நிறுவனத்தின் முதன்மையான மாடலாக உள்ள க்ளோஸ்ட்டர், ஃபுல்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. டொயோட்டா பார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டேவர் ஆகிய கார்களுக்கு தற்போது கடுமையான போட்டியை எம்ஜி க்ளோஸ்ட்டர் வழங்கி வருகிறது.

இந்தியாவின் முதல் அட்டானமஸ் (லெவல்-1) பிரீமியம் எஸ்யூவி என்ற பெருமையுடன் எம்ஜி க்ளோஸ்ட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. எம்ஜி க்ளோஸ்ட்டர் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 29 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்தியாவில் தற்போது க்ளோஸ்ட்டர் எஸ்யூவியின் விற்பனை சிறப்பாக உள்ளது.