பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா லிமிடேட் எடிசன் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் அறிமுகம்

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா எலெக்ட்ரிக் ஹைப்பர் காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிக தனித்துவமான அம்சங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா லிமிடேட் எடிசன் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் அறிமுகம்

இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனம் கடந்த ஆண்டு பேடிஸ்ட்டா என்ற எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் மாடலை ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தியது. மிகவும் பிரத்யேகமான இந்த ஹைப்பர் கார் உலகின் மிக அதிக சக்திவாய்ந்த மின்சார கார் மாடலாக பெரும் கோடீஸ்வரர்கள் மற்றும் கார் பிரியர்களின் கவனத்தை ஈர்த்தது.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா லிமிடேட் எடிசன் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் அறிமுகம்

பினின்ஃபரீனா நிறுவனத்தின் ஸ்தாபகர் பேடிஸ்ட்டா பரீனா நினைவாக அந்த விலை உயர்ந்த எலெக்ட்ரிக் காருக்கு பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில், பினின்ஃபரீனா நிறுவனம் துவங்கப்பட்டு 90-ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, பேடிஸ்ட்டா எலெக்ட்ரிக் ஹைப்பர் காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா லிமிடேட் எடிசன் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் அறிமுகம்

பேடிஸ்ட்டா ஆனிவர்சரியோ என்ற பெயரில் இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மொத்தமாகவே 5 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதாவது, பேடிஸ்ட்டா காருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மொத்தம் 150 யூனிட்டுகள் என்ற உற்பத்தி இலக்கில், இந்த 5 கார்களும் அடங்கும்.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா லிமிடேட் எடிசன் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் அறிமுகம்

புதிய பேடிஸ்ட்டா ஆனிவர்சரியோ கார் பியான்கோ செஸ்ட்ரி, கிரிகியோ ஆன்டோனெல்லியானோ மற்றும் சிக்னேச்சர் ஐகானிகா புளூ ஆகிய மூன்று விசேஷ வண்ணப் பூச்சுடன் வர இருக்கிறது. இது சாதாரண பேடிஸ்ட்டா காரிலிருந்து இதனை வேறுபடுத்தும் விஷயமாக இருக்கும்.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா லிமிடேட் எடிசன் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் அறிமுகம்

கருப்பு வண்ண அல்கான்ட்ரா லெதர் இருக்கைகள், ஆனிவர்சரியோ பேட்ஜ்கள், பினின்ஃபரீனா 90 என்ற லோகோ ஆகியவை இந்த விசேஷ பதிப்பு மாடலில் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த கார் கார்பன் ஃபைபர் மோனோகாக் சேஸீயில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா லிமிடேட் எடிசன் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் அறிமுகம்

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா ஆன்வர்சரியோ காரில் 4 மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காரில் 120kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா லிமிடேட் எடிசன் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் அறிமுகம்

இந்த சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 1,900 எச்பி பவரையும், 2,300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டார்க் வெக்டரிங் தொழில்நுட்ப முறையில் மின் மோட்டாரின் சக்தி, சக்கரங்களுக்கு செலுத்தப்படுகிறது.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா லிமிடேட் எடிசன் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் அறிமுகம்

மேலும், இந்த கார் ஃபார்முலா 1 ரேஸ் கார்களைவிட அதி வேகமானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 2 வினாடிகளுக்குள் எட்டிவிடும் வல்லமை கொண்டதாக இருக்கிறது.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா லிமிடேட் எடிசன் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் அறிமுகம்

இந்த காரில் ஸ்பிளிட்டர், பக்கவாட்டு பிளேடு அமைப்புகள் மற்றும் ரியர் டிஃபியூசர் ஆகியவை கார்பன் ஃபைபரில் உருவாக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் ரியர் விங், ஏரோ ஃபின்ஸ் மைப்புகளும், 21 அங்குல ஃபோர்ஜ்டு அலுமினிய அலாய் வீல்களும் உள்ளன.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா லிமிடேட் எடிசன் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் அறிமுகம்

புதிய பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா ஆனிவர்சரியோ காருக்கு 2.6 மில்லியன் டாலர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.21.10 கோடி விலை மதிப்பு கொண்டது.

பினின்ஃபரீனா பேடிஸ்ட்டா லிமிடேட் எடிசன் எலெக்ட்ரிக் ஹைப்பர் கார் அறிமுகம்

இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரீனா நிறுவனம் கார்களை வடிவமைத்து தருவதிலும், கஸ்டமைஸ் செய்வதிலும் நீண்ட பாரம்பரியம் மிக்கது. தற்போது பினின்ஃபரீனா நிறுவனம் இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா கீழ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Automobili Pininfarina has revealed the Battista Anniversario limited edition model to pay homage to nine decades since Pininfarina coach-builder and design house.
Story first published: Tuesday, March 3, 2020, 15:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X