இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மேலும் இரு போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்கள்... விலைதான் தலைசுற்ற வைக்கிறது..

ஜெர்மனை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான போர்ஷே 718 ஸ்பைடர் மற்றும் 718 கேமேன் ஜிடி4 கார் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போர்ஷே கார்களின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மேலும் இரு போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்கள்... விலைதான் தலைசுற்ற வைக்கிறது..

இவற்றில் 718 ஸ்பைடர் காரின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.1.59 கோடியாகவும், 2020 கேமேன் ஜிடி4-ன் விலை ரூ.1.69 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாக்ஸ்டர் மற்றும் 718 கேமேன் உள்ளிட்டவை உள்ள போர்ஷேவின் 718 கார்களின் வரிசையில் தற்போது இவை இரண்டும் புதியதாக இணைந்துள்ளன.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மேலும் இரு போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்கள்... விலைதான் தலைசுற்ற வைக்கிறது..

ஸ்பைடர் என்ற பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும் இது தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றக்கூடிய சாஃப்ட்-டாப்-ஐ கொண்ட வாகனம் என்று. கேமேன் ஜிடி4, போர்ஷே நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்யவுள்ள எண்ட்ரீ-லெவல் ஜிடி மாடலாகும்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மேலும் இரு போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்கள்... விலைதான் தலைசுற்ற வைக்கிறது..

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போர்ஷே கார்களிலும் ஒரே விதமான என்ஜின் அமைப்பு தான் வழங்கப்பட்டிருந்தாலும், ஒன்றில் இருந்து மற்றொரு வேறுபடுவதற்காக தோற்றத்தில் மாறுபாடு கொண்டுவரப்பட்டுள்ளது. என்ஜின் மட்டுமில்லாமல் இந்த என்ஜின் இரு கார்களிலும் ஒரே மாதிரியான ஆற்றலை தான் வெளிப்படுத்தும்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மேலும் இரு போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்கள்... விலைதான் தலைசுற்ற வைக்கிறது..

இந்த வகையில் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 4.0 லிட்டர் 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 415 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மேலும் இரு போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்கள்... விலைதான் தலைசுற்ற வைக்கிறது..

இந்த இரு புதிய கார்களும் 0-வில் இருந்து 100kmph என்ற வேகத்தை ஒரே மாதிரியாக 4.4 வினாடிகளில் அடையும் திறனை கொண்டிருக்கின்றன. ஆனால் 718 ஸ்பைடரின் அதிகப்பட்ச வேகம் 301kmph ஆகவும், 718 கேமேன் ஜிடி4-ன் அதிகப்பட்ச வேகம் சற்று அதிகமாக 304kmph ஆகவும் உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மேலும் இரு போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்கள்... விலைதான் தலைசுற்ற வைக்கிறது..

கூடுதலான வேகம் மட்டுமின்றி போர்ஷே 718 கேமேன் ஜிடி4 மாடலானது மற்ற முன்னோடி கார்களுடன் ஒப்பிடுகையில் மேம்படுத்தப்பட்ட காற்று இயக்கவியல் தொகுப்புகளை பெற்றுள்ளது. இந்த புதிய தொகுப்பினால் 2020 கேமேன் அதன் முந்தைய தலைமுறையை விட 50 சதவீதம் கூடுதலாக கீழ்நோக்கியாறு செயல்படும்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மேலும் இரு போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்கள்... விலைதான் தலைசுற்ற வைக்கிறது..

இவற்றுடன் மேலும் 20 சதவீத கூடுதல் கீழ்விசையுடன் செயல்படுவதற்காக் பின்புற இறக்கை கேமேன் ஜிடி4-ல் நிலையாக பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் 2020 போர்ஷே 718 ஸ்பைடர் காரில் ஆக்டிவ் பின் இருக்கையே வழங்கப்பட்டுள்ளன. அதாவது இந்த இறக்கை, ஸ்பைடர் கார் எப்போது 120kmph வேகத்தை கடக்கிறதோ அப்போது தான் பயன்பாட்டிற்கு வரும்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது மேலும் இரு போர்ஷே ஸ்போர்ட்ஸ் கார்கள்... விலைதான் தலைசுற்ற வைக்கிறது..

அதிவேகத்தின்போது காருக்கு தேவைப்படும் கீழ்நோக்கிய விசையை வழங்குவது மட்டுமில்லாமல் ஸ்பைடர் மாடலில் வளைவுகளில் திரும்பும் திறனையும் இந்த ஆக்டிவ் ரியர் விங் மேம்படுத்தும்.

போர்ஷே நிறுவனத்தின் எண்ட்ரீ-லெவல் ஸ்போர்ட்ஸ் கார்களாக விளங்கவுள்ள இவை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளதாக போர்ஷே இந்தியா நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Most Read Articles
மேலும்... #போர்ஷே #porsche
English summary
2020 Porsche 718 Spyder and Cayman GT4 launched in India
Story first published: Wednesday, August 19, 2020, 1:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X