Just In
- 1 hr ago
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- 3 hrs ago
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- 5 hrs ago
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- 5 hrs ago
அடேங்கப்பா.. 2021ஜீப் காம்பஸில் இவ்வளவு வசதிகளா?! அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாக இணையத்தில் கசிந்த விபரம்
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Movies
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாலையில் சறுக்கிச் செல்லும் சாகசத்தில் கின்னஸ் சாதனை படைத்த போர்ஷே டைகன் கார்!
போர்ஷே டைகன் எலெக்ட்ரிக் சூப்பர் கார் டிரிஃப்ட் எனப்படும் சறுக்கிச் செல்லும் சாகசத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எலெக்ட்ரிக் கார்களுக்கான முக்கியத்துவம் உலக அளவில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகிறது. இதனால், எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் களமிறங்கி உள்ளன. மேலும், தங்களது எலெக்ட்ரிக் காரின் திறனை வாடிக்கையாளர்களுக்கும், கார் பிரியர்களுக்கும் உணர்த்தும் வகையில் பல்வேறு யுக்திகளையும் கையாண்டு வருகின்றனர்.

அந்த வகையில், போர்ஷே நிறுவனம் தனது டைகன் எலெக்ட்ரிக் கார் குறித்து உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய முயற்சியை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளது.

அதாவது, டைகன் காரில் அதிக தூரம் சாலையில் சறுக்கிச் செல்லும் சாகசத்தை நிகழ்த்தி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அதாவது, மின்சார கார் மாடல்களில் அதிக தூரம் இந்த சாதனையை படைத்த கார் மாடல் என்ற பெருமையை போர்ஷே டைகன் கார் பெற்றிருக்கிறது.

ஜெர்மனியின் ஹாக்கென்ஹெய்ம்ரிங் என்ற இடத்தில் உள்ள போர்ஷே நிறுவனத்தின் பிரத்யேக சோதனை களத்தில் இந்த முயற்சி நடந்தது. போர்ஷே நிறுவனத்தின் பயிற்றுனராக இருந்து வரும் டென்னிஸ் ரெட்டேரா டைகன் காரில் இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

அந்த களத்தில் மொத்தம் 210 சுற்றுகள் டிரிஃப்ட் எனப்படும் சாகசத்தை செய்து அசத்தினார். வளைவுகளில் முன்சக்கரங்கள் எதிர் திசையில் இருக்குமாறு அவர் டிரிஃப்ட் சாகசத்தை நிகழ்த்தினார்.

மொத்தம் 42.171 கிமீ தூரத்திற்கு 55 நிமிடங்கள் வரை அவர் டைகன் காரில் டிரிஃப்ட் செய்து அசத்தினார். எலெக்ட்ரிக் காரில் நிகழ்த்தப்பட்ட அதிக தூர டிரிஃப்ட் சாதனை என்ற பெருமையை இந்த நிகழ்வு மூலமாக பதிவு செய்யப்பட்டது. மேலும், கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டது.

போர்ஷே டைகன் எலெக்ட்ரிக் சூப்பர் காரின் ரியர் வீல் டிரைவ் மாடல் இந்த சாதனைக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த மாடலானது சீனாவில் விற்பனையில் உள்ளது. மொத்தம் 210 சுற்றுகளை சராசரியாக மணிக்கு 46 கிமீ வேகத்தில் இந்த டிரிஃப்ட் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் ரெட்டேரா.

இதுகுறித்து டென்னிஸ் ரெட்டேரா கூறுகையில்,"டிரிஃப்ட் சாகசத்திற்காக அதிக நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்காக காரில் வழங்கப்பட்டு இருக்கும் தொழில்நுட்பங்களை அணைத்துவிட்டு காரை இயக்கினேன். அப்போது மிக எளிதாக இருந்ததுடன், போதுமான அளவு பவர் தொடர்ந்து கிடைத்ததால், சாதனையை தொடுவது சாத்தியமானது.

அதிக வீல்பேஸ் நீளம் மூலமாக சிறப்பான பேலன்ஸ் கிடைத்தது. சேஸீயும், ஸ்டீயரிங் சிஸ்டமும் அனைத்து நேரங்களிலும் சிறப்பான கட்டுப்பாட்டை காருக்கு வழங்கியது. களத்தின் அனைத்து இடங்களிலும் தரைப்பிடிப்பு ஒரே மாதிரியாக இல்லை. எனினும், ஸ்டீயரிங் சிஸ்டம் மற்றும் சரியான அளவு ஆக்சிலரேட்டரை கொடுப்பதில் கவனம் செலுத்தி இந்த சாகசத்தை நிறைவு செய்தேன்," என்று தெரிவித்துள்ளார்.