Just In
- 4 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 5 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 6 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 7 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்ல... முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய மேட்-இன்-இந்தியா மின்சார கார்...
மேட்-இன்-இந்தியா மின்சார கார் பிரவைக் எக்ஸ்டிங்க்சன் எம்கே1 மின்சார கார் எந்தவொரு ஒளிவு, மறைவும் இன்றி தனது தரிசனத்தை இந்திய சாலையில் வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மின்சார கார் பிரியர்களால் 'இந்தியாவின் டெஸ்லா' என செல்லமாக அழைக்குமளவிற்கு பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பிரவைக் டைனமிக்ஸ் நிறுவனத்தின் 'எக்ஸ்டிங்க்சன் எம்கே1' எலெக்ட்ரிக் கார் உருவாகியுள்ளது. இந்த மின்சார காரே தற்போது கேமிராவின் கண்களில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்று சாலையில் தனது தரிசனத்தை இக்கார் வழங்குவது இதுவே முதல் முறையாகும்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தியர்களின் கை வண்ணத்தில் வெளிநாட்டு கார்களுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் உருவாகியிருக்கும் இக்கார் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் வாகனங்களில் ஒன்றாக மாறியிருக்கின்றது. பொதுவாக புதிய வாகனங்கள் பரிசோதனையின்போது மறைப்புகளுடன் ஈடுபடுத்தப்படுவதே வழக்கம். ஆனால், இக்கார் எந்தவொரு ஒளிவு-மறைவும் இன்றி காட்சியளித்திருக்கின்றது.

பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் 1
ஆகையால், தற்போதைய தரிசனம் கூடுதல் ஆவலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. கர்நாடகா மாநிலம், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரவைக் டைனமிக்ஸ் நிறுவனம், கவர்ச்சிகரமான எக்ஸ்டிங்க்சன் எம்கே1 மின்சார காரை, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய இரு நகரங்களிலேயே முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் 2
இதனை அடுத்தே இரண்டாம் கட்ட அறிமுகமாக சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் அக்கார் களமிறக்கப்பட இருக்கின்றது. இந்த புதுமுக மின்சார கார் அடுத்த வருடம் விற்பனைக்கு வந்துவிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையொட்டியே தலைநகர் டெல்லியின் சாலைகளில் இக்கார் தீவிர பல பரீட்சையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.

பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் 3
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது இணையத்தில் கசிந்திருக்கின்றது. இதுகுறித்து கார் கிரேசி இந்தியா தளம் வெளியிட்ட புகைப்படங்களே மின் வாகன ஆர்வலர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. மேட்-இன்-இந்தியா மின்சார கார் என்ற பெறுமையுடன் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கும் இக்கார் என்ன விலையில் விற்பனைக்கு வரும் என்பது தெரியவில்லை.

இருப்பினும், அண்மையில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, புதிய பிரவைக் எக்ஸ்டிங்க்சன் எம்கே1 மின்சார கார், லீஸ் மற்றும் சிறப்பு வாடகை சேவை ஆகியவற்றின் மூலம் பொதுப் பயன்பாட்டிற்கு வழங்கப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. ஆகையால், இக்கார் சற்று விலை கூடுதலான காராக விற்பனைக்கு வந்தாலும் பலரால் பயன்படுத்த முடியும் என யூகிக்க முடிகின்றது.

எக்ஸ்டிங்க்சன் எம்கே1 மின்சார காரில் 96 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 504 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இதனை சார்ஜ் செய்யவும் அதிக நேரம் தேவைப்படாது என்கிறது தயாரிப்பு நிறுவனம். பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 30 நிமிடங்களே போதும் என அது கூறுகின்றது.

இது பிரம்மிப்பை ஏற்படுத்தும் சார்ஜ் திறனாகும். இதுமட்டுமின்றி, தற்போது நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களின் கார்களுக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் லக்சூரி வசதிகளுடனும் இக்கார் விற்பனைக்கு வரவிருக்கின்றது.

குறிப்பாக, ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் இடம்பெற்றிருக்கும் இருக்கைகளைப் போல் இக்காரின் பின்புற இருக்கைகளும் 160 டிகிரி வரை சாய்த்துக் கொள்ளும் வசதியுடன் வரவிருக்கின்றது. இதுபோன்ற மேலும் பல சொகுசு வசதிகளுடன் இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மின் மோட்டார் 200 எச்பி பவர் மற்றும் மணிக்கு 196 கிமீ எனும் எனும் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.