மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ!

பிரிமியர் பத்மினி கார் மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கின்ற வகையில் உருமாறியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ!

அண்மைக் காலங்களாக இந்தியாவில் வாகன மாடிஃபிகேஷன் சம்பவம் அதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. அது முன்பெப்போதும் இல்லாத அளவில் தற்போது உயர்ந்துக் காணப்படுகின்றது. அவ்வாறு மாடிஃபை செய்யப்படும் வாகனங்கள் பெரும்பாலும் நம்முடைய மூதாதையர்கள் காலத்து வாகனங்களாகவே இருக்கின்றன. இதனை உறுதிச் செய்கின்ற வகையில் தற்போது ஓர் மாடிஃபிகேஷன் சம்பவம் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றது.

மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ!

அந்தவகையில், வாகன சின்னங்களில் ஒன்றாக மாறியிருக்கும் பிரிமியர் பத்மினி கார்தான் தாற்போது மாடிஃபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இதை ஏன் நாம் இங்கு பார்க்க வேண்டும், இதுல அப்படி என்ன ஸ்பெஷர் இருக்கு என்ற பல்வேறு கேள்விகள் உங்களுக்கு எழும்பலாம்.

மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ!

இருக்கு, இந்த காரே ஓர் ஸ்பெஷல் மாடல்தான். இதன் விற்பனை பல ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்தப்பட்டிருந்தாலும் ஒரு சிலர் மட்டும் தற்போது வரை இக்காரைப் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலானோர் செண்டிமென்ட் உள்ளிட்ட காரணங்களினால் தங்களது கராஜில் அதை பராமரித்து பாதுகாத்து வருகின்றனர்.

மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ!

அந்தவகையில், பிரிமியர் பத்மினி மீது அதிகம் ஆர்வம் கொண்ட ஓர் நபர்தான் அதனை பிரபல சொகுசு கார்களில் ஒன்றான மினி கூப்பர் மாடலுக்கு இணையாக மாடிஃபை செய்திருக்கின்றார். உண்மையை சொல்ல வேண்டுமானால், புது தோற்றத்தில் இருக்கும் இந்த காரை அதன் உரிமையாளரே வந்து சொன்னால் மட்டுமே அது பிரிமியர் பத்மினி என்பது தெரியும்.

மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ!

அதேசமயம், ஒரு சிலர் அதை பிரிமியர் பத்மினி என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள். ஏனென்றால் மாடிஃபிகேஷன் அந்த மாதிரி.

கேரளாவைச் சேர்ந்த சன் என்டர்பிரைசஸ் எனும் மாடிஃபிகேஷன் நிறுவனம் இந்த தரமான சம்பவத்தைச் செய்துள்ளது. இதுகுறித்த வீடியோவை அதன் அதிகாரப்பூர்வ முகப்புத்தக பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ!

இந்த வீடியோவை பார்த்தாலே பல விஷயங்கள் நமக்கு புரிந்துவிடும். அதாவது, எப்படி இருந்த கார், எம்மாதிரியான உருவ மாற்றத்தைப் பெற்றிருக்கின்றது. என்னென்ன சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என அனைத்தும் புரிந்துவிடும். இருப்பினும் சில ஹைலைட்டு தகவலை பார்த்துவிட்டு, அதன்பின்னர், கடைசியாக வீடியோவைப் பார்க்கலாம்.

மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ!

இரு கதவுகள் அமைப்பு

பிரிமியர் பத்மினி மூன்று பெட்டி வடிவமைப்புக் கொண்ட நான்கு கதவு காராகும். இதைதான் மாடிஃபிகேஷன் நிறுவனம் இரு டூர்கள் கொண்ட மாடலாக மாற்றியுள்ளது. அதேசமயம், இதன் இருக்கை அமைப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே, இதில் நான்கு பேர் வரை அமர்ந்து செல்ல முடியும். இதுமட்டுமின்றி, பல்வேறு மாடர்ன் அம்சங்களையும் பத்மினி பெற்றிருக்கின்றது.

மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ!

மாடிஃபிகேஷன் செலவு

இந்த ஒட்டுமொத்த மாடிஃபிகேஷனுக்கும் ரூ. 8 லட்சம் வரை செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இதில் அதிகளவு பிரிமியம் வசதி இடம்பெற்றிருப்பதால் இந்த உச்சபட்ச தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை, சற்று குறைந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் குறைக்க முடியும்.

மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ!

இன்டீரியர்

மாடிஃபிகேஷனுக்காக இரு கதவுகளை மட்டும் அந்நிறுவனம் நீக்கவில்லை. அக்காரின் பின் மற்றும் ரூஃப் உள்ளிட்டவையும் நீக்கப்பட்டு ரெட்ரோ ஸ்டைலுக்கு அப்கிரேட் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மினி கூப்பரின் சில பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே, இதன் தோற்றம் மினி கூப்பரின் முந்தைய மாடலுக்கு மிக நெருக்கமாக உள்ளது. அதேசமயம், இதன் உருவம் சற்று பெரிதாக இருப்பது மட்டுமே அதில் காணப்படும் வித்தியாசமாக உள்ளது.

மினி கூப்பருக்கே டஃப் கொடுக்கும் பத்மினி... இதுவரை நாம் கண்டிராத பேரழகில்... வீடியோ!

கவர்ச்சியான வெளிப்புற தோற்றம்

இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக சந்தைக்குப்பிறகான அம்சங்கள் பல பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில், கருப்பு நிற அவுட் கிரல் அமைப்புக் கொண்ட ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல் விளக்குகள், ட்யூவல் டோன் இருக்கை, அதிக கிரிப் வசதி கொண்ட ஸ்டியரிங் வீல் மற்றும் கியர் லிவர் உள்ளிட்டவை பொருத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், கூடுதல் ஸ்போர்ட்டி தோற்றத்திற்காக மெஷின்ட் அலாய் வீல் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன.

இவையனைத்தும் காருக்கு ஸ்போர்ட்டி லுக்கை மட்டுமின்றி கவர்ச்சிகரமான ரெட்ரோ ஸ்டைலையும் வழங்குகின்றது. அதேசமயம், காரில் இடம்பெற்றிருக்கும் பிரிமியம் அம்சங்கள் இதை நவீன யுக காராக தோற்றமளிக்க தவறவில்லை. எனவே, பார்வையாளர்களை ஒரு நிமிஷம் உற்று பார்க்க வைக்கின்ற வகையில் பிரிமியர் பத்மினி உருமாறியுள்ளது.

Most Read Articles

English summary
Premier Padmini Converted Into A Mini Cooper. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X