Just In
- 2 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 2 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 4 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடேங்கப்பா ஒரே அடியா இத்தனை ஆயிரங்கள் உயர போகுதே... இப்போவே வாங்கிடுங்க... இல்லனா ரொம்ப வருத்தப்படுவீங்க!
பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தனது புதுமுக தயாரிப்பின் விலையை ஒரே அடியாக பல மடங்கு உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான், மிக சமீபத்தில் மேக்னைட் எனும் புதுமுக காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்தது. இது ஓர் 4 மீட்டர் எஸ்யூவி ரக காராகும். இக்காருக்கு அறிமுக விலையாக ரூ. 4.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

மேலே குறிப்பிட்டதைப் போல் இது மேக்னைட் காரின் அறிமுகத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட குறுகிய விலை மட்டுமே ஆகும். ஆகையால், வரும் 2021 ஜனவரி 1ம் தேதி இக்காரின் விலை லேசாக உயர்வு செய்யப்பட்டே விற்பனைச் செய்யப்படும் என நிஸான் நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.

ஆனால், எவ்வளவு உயர்வு செய்யப்படும் என்ற தகவலை அது வெளியிடவில்லை. எனவே இணையத்தில் இந்த கார் ரூ. 1 லட்சம் என்ற புதிய விலையுயர்வுடன் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வதந்தியைத் தவிடு பொடியாக்கும் வகையில் நிஸான் நிறுவனம், புதிய மேக்னைட் காருக்கு எவ்வளவு விலையுயர்வை வழங்க இருக்கின்றது என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

இந்நிறுவனம், வருகின்ற ஜனவரி மாதம் முதல் நிஸான் மேக்னைட் காரை ரூ. 55 ஆயிரம் விலையுயர்வுடன் விற்பனைச் செய்ய இருக்கின்றது. அதாவது, வருகின்ற 31 டிசம்பர் 2020 வரை மட்டுமே மேக்னைட் கார் ரூ.4.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இதன் பின்னர் 1 ஜனவரி 2021 இல் இருந்து ரூ. 5.54 லட்சம் என்ற விலைக்கு மாறிவிடும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை நிஸான் விரைவில் வெளியிட இருக்கின்றது. நிறுவனம் சமீபத்தில் மேக்னைட்டுக்கான பராமரிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.

நிஸான் மேக்னைட் கார் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இது நேட்சுரல்லி அஸ்பயர்ட் மற்றும் டர்போசார்ஜட் திறன் கொண்ட எஞ்ஜின் ஆகும். இது 5 ஸ்பீடு மேனுவல் வேகக்கட்டுப்பாடு கருவி மற்றும் சிவிடி ஆகிய கியர்பாக்ஸ் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.