தயாரிப்புகள் கிட்டத்தட்ட நிறைவு... இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி...

இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த வருடத்தின் துவக்கத்திலோ அறிமுகமாகலாம் என கூறப்படும் டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி மாடல் கிட்டத்தட்ட தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்த நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் குறித்து காடிவாடி செய்தி தளம் வெளியிட்டுள்ள கூடுதல் தகவல்களை இனி பார்ப்போம்.

தயாரிப்புகள் கிட்டத்தட்ட நிறைவு... இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி மாடலை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியதை தொடர்ந்து இந்த கார் இந்த வருடத்தின் இறுதியிலோ அல்லது 2021ஆம் ஆண்டின் துவக்கத்திலோ அறிமுகக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தயாரிப்புகள் கிட்டத்தட்ட நிறைவு... இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி...

இந்த நிலையில் தற்போது இந்த மினி எஸ்யூவி கார் மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையும் கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் இருந்தாலும், சில கூடுதல் தகவல்கள் வெளிவந்துள்ளன.

தயாரிப்புகள் கிட்டத்தட்ட நிறைவு... இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி...

90 சதவீத தயாரிப்பை முடித்துவிட்டதாக வெளிவந்துள்ள தகவல்கள் உண்மை என்பது போல் இந்த சோதனை எச்பிஎக்ஸ் காரானது பின்புறத்தில் ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடல் கொண்டிருந்த ஸ்போர்ட்டியான டின்னி டெயில்லேம்ப்களை சற்று வித்தியாசமான மூன்று-அம்பு எல்இடி பேட்டர்ன் உடன் கொண்டுள்ளது.

தயாரிப்புகள் கிட்டத்தட்ட நிறைவு... இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி...

டாடாவின் இம்பேக்ட் 2.0 டிசைன் மொழியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்ற இந்த மைக்ரோ எஸ்யூவி காரில் பிளவுப்பட்ட ஹெட்லேம்ப் செட்அப் மற்றும் இரு புறங்களிலும் ஃபாக்ஸ் ஸ்கிட் ப்ளேட்களை தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது. குறிப்பாக இந்த ஸ்கிட் ப்ளேட்கள் மூலமாக காரின் மொத்த தோற்றமும் சற்று பெரியதாக உள்ளது.

தயாரிப்புகள் கிட்டத்தட்ட நிறைவு... இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி...

உட்புற கேபின் 7-இன்ச்சில் ஃப்லோட்டிங் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஹார்மனின் ப்ரீமியம் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவற்றை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்புகள் கிட்டத்தட்ட நிறைவு... இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி...

ஸ்டேரிங் சக்கரமானது, புதிய டாடா கார்களான அல்ட்ராஸ் மற்றும் டியாகோ ஃபேஸ்லிஃப்ட்களை ஒத்த டிசைனில் இருக்கலாம். விற்பனைக்கு வரும் எச்பிஎக்ஸ் மாடலில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர் 3-சிலிண்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

தயாரிப்புகள் கிட்டத்தட்ட நிறைவு... இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி...

டாடா டியாகோ, டிகோர் மற்றும் அல்ட்ராஸ் மாடல்களுக்கும் கொடுக்கப்படுகின்ற இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 86 பிஎச்பி பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

தயாரிப்புகள் கிட்டத்தட்ட நிறைவு... இறுதிக்கட்ட சோதனை ஓட்டத்தில் டாடா எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி...

ரூ.4- 5 லட்சம் அளவில் எக்ஸ்ஷோரூம் விலையுடன் மைக்ரோ எஸ்யூவி மாடலை எதிர்பார்த்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காக விற்பனைக்கு வரவுள்ள புதிய டாடா எச்பிஎக்ஸ் மாடலுக்கு சந்தையில் மாருதி சுசுகி இக்னிஸ் மற்றும் மஹிந்திரா கேயூவி100 மாடல்கள் போட்டியாக விளங்கவுள்ளன.

Most Read Articles
English summary
Production-Ready Tata HBX Micro SUV Spied On Test
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X