திருவள்ளூர் ஆலையில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் சோதனை முறை உற்பத்தி துவங்கியது!

சென்னை அருகே திருவள்ளூரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார் ஆலையில் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் உற்பத்தி சோதனை முறையில் துவங்கி இருக்கிறது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் சோதனை முறை உற்பத்தி துவங்கியது!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ கார் குழுமம் மீண்டும் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்க இருக்கிறது. இந்த முறை தனது சிட்ரோன் பிராண்டில் கார் மாடல்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் நடந்த விழாவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் முதல் கார் மாடலை அறிமுகப்படுத்தியது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் சோதனை முறை உற்பத்தி துவங்கியது!

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் என்ற பெயரில் வர இருக்கும் அந்த எஸ்யூவி கார் மாடல் இந்தியாவின் பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் நிலைநிறுத்தப்பட உள்ளது. சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் டிசைன் அம்சங்கள் தனித்துவமிக்கதாக உள்ளதால், இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் சோதனை முறை உற்பத்தி துவங்கியது!

இந்த நிலையில், இந்தியாவில் சிகே பிர்லா குழுமத்திற்கு சொந்தமான ஆலையில் கார் அசெம்பிள் பணிகளை செய்து கொள்ள முடிவு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, சோதனை முறையில் தற்போது சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியின் உற்பத்திப் பணிகள் சென்னை அருகே திருவள்ளூரில் உள்ள சிகே பிர்லா குழுமத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் துவங்கப்பட்டு இருக்கிறது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் சோதனை முறை உற்பத்தி துவங்கியது!

உற்பத்திப் பிரிவில் வந்த முதல் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியுடன் ஆலை பணியாளர்கள் கொண்டாடும் படமும், செய்தியும் பிசினஸ் ஸ்டான்டர்டு தளம்மூலமாக வெளியாகி இருக்கிறது. இதைத்தொடர்ந்து, விரைவில் அதிக அளவில் கார்களை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் நடக்கும். அனைத்து முக்கிய பாகங்களும் இறக்குமதி செய்யப்பட்டு இந்த ஆலையில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் சோதனை முறை உற்பத்தி துவங்கியது!

கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவிகள் இறக்குமதி செய்யப்பட்டு நாடு முழுவதும் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்தியாவுக்கு தக்கவாறு காரில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களும் செய்யப்பட்டன. இந்த பணிகள் நிறைவு பெற்றுள்ளதால், சோதனை முறையில் இந்த எஸ்யூவியை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யும் பணிகள் துவங்கி இருக்கின்றன.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் சோதனை முறை உற்பத்தி துவங்கியது!

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி பிரெஞ்சு கார் மாடல்களுக்கு உரிய தனித்துவமான டிசைன் அம்சங்களுடன் பிரம்மாண்டமாக இருக்கிறது. இந்த எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், பனோரமிக் சன்ரூஃப், 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூெமன்ட் க்ளஸ்ட்டர் ஆகிய பல முக்கிய அம்சங்கள் உள்ளன.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் சோதனை முறை உற்பத்தி துவங்கியது!

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 180 எச்பி பவரை வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் வர இருக்கிறது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் சோதனை முறை உற்பத்தி துவங்கியது!

அடுத்த ஆண்டு ஜனவரி- மார்ச் இடையிலான காலாண்டு காலத்தில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.30 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முதல்கட்டமாக நாடு முழுவதும் 10 முதல் 15 டீலர்களுடன் கார்களை விற்பனை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

Most Read Articles
மேலும்... #சிட்ரோன் #citroen
English summary
French carmaker, PSA Group has started Citroen C5 Aircross SUV trial production in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X