ஆசிய லீமான்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்க கை கோர்த்த இந்தியாவின் நட்சத்திர வீரர்கள்!

ஆசிய லீமான்ஸ் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் முதல் கார் பந்தய அணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நட்சத்திர கார் பந்தய வீரர்களுடன் இந்த புதிய பந்தய குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஆசிய லீமான்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்க கை கோர்த்த இந்தியாவின் நட்சத்திர வீரர்கள்!

வாகனங்களின் பொறியியல் மற்றும் கட்டமைப்பு திறன் மற்றும் வீரர்களின் உடல் மற்றும் மனோதிடத்திற்கு சவால் விடும் வகையில், 24 ஹவர்ஸ் லீ மான்ஸ் கார் பந்தயம் நடத்தப்படுகிறது. மிக நீண்ட பாரம்பரியம் மிக்க இந்த பந்தயத்தில், எவ்வளவு நேரம் வாகனம் மற்றும் அதனை இயக்கும் வீரர்கள் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை பரிசோதிக்கும் விதமாக இந்த லீ மான்ஸ் கார் பந்தயம் உலக அளவில் கார் பந்தய ரசிகர்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறையினர் மத்தியில் அதீத கவனத்தை ஈர்த்து வருகிறது.

 ஆசிய லீமான்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்க கை கோர்த்த இந்தியாவின் நட்சத்திர வீரர்கள்!

இந்த நிலையில், ஒவ்வொரு கண்டத்திலும், அந்த பிராந்தியத்திற்கான லீ மான்ஸ் கார் பந்தயம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ஆசிய லீ மான்ஸ் கார் பந்தயம் வரும் பிப்ரவரி மாதம் 5-6 மற்றும் 19-20 ஆகிய தேதிகளில் அபுதாபியில் உள்ள யாஸ் மரினா பந்தய களத்தில் நடக்க இருக்கிறது.

 ஆசிய லீமான்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்க கை கோர்த்த இந்தியாவின் நட்சத்திர வீரர்கள்!

இந்த பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக முதல்முறையாக இந்தியா சார்பில் புதிய பந்தய குழு உருவாக்கப்பட்டுள்ளது. 'ரேஸிங் டீம் இந்தியா' என்ற பெயரில் இந்த புதிய கார் பந்தய அணிக்கு பெயரிடப்பட்டுள்ளது.

 ஆசிய லீமான்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்க கை கோர்த்த இந்தியாவின் நட்சத்திர வீரர்கள்!

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஃபார்முலா-1 கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், பெங்களூரை சேர்ந்த அர்ஜுன் மெய்னி, அமெரிக்க வாழ் இந்தியரான நவீன் ராவ் ஆகியோர் இந்தியா சார்பில் ஆசிய லீ மான்ஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

 ஆசிய லீமான்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்க கை கோர்த்த இந்தியாவின் நட்சத்திர வீரர்கள்!

ரேஸிங் டீம் இந்தியா அணியினர் ஆசிய லீ மான்ஸ் பந்தயத்தில் LMP2 என்ற பிரிவில் கலந்து கொள்ள இருக்கின்றனர். ஒரேகா 07 பந்தய கார் மாடலை பயன்படுத்த உள்ளனர்.

 ஆசிய லீமான்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்க கை கோர்த்த இந்தியாவின் நட்சத்திர வீரர்கள்!

ஆசிய லீ மான்ஸ் போட்டியானது மொத்தம் 4 போட்டிகளை கொண்டதாக நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு போட்டியும் 4 மணிநேரம் பந்தய நேரத்தை கொண்டதாக வகுக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ரேஸிங் டீம் இந்தியா அணி வென்றால், அடுத்த ஆண்டு பிரான்ஸ் நாட்டில் நடைபெற இருக்கும் 24 ஹவர்ஸ் லீ மான்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்பதற்கான தகுதியை நேரடியாக பெற முடியும்.

எனவே, ஆசிய லீ மான்ஸ் போட்டியில் வெற்றி பெறுவதற்கு அதீத முயற்சிகளை ரேஸிங் டீம் இந்தியா குழு எடுக்க உள்ளது. ரேஸிங் டீம் இந்தியா அணி தலைவராக கவுதம் சிங்கானியா செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Racing Team India is set to create history by becoming the first team to feature an all-Indian drivers line-up globally, in the world of endurance racing at the 2021 Asian Le Mans Series to be held in Abu Dhabi in February next year.
Story first published: Wednesday, December 23, 2020, 9:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X