பிஎஸ்6 எஞ்சின் மற்றும் புதிய பொலிவில் விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர்!

ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியின் 1.5 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடல் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்ற விபரம் வெளியாகி இருக்கிறது.

புதிய பொலிவுடன் விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர்!

காம்பேக்ட் வகை எஸ்யூவி மார்க்கெட் மிக கடுமையான போட்டியில் உள்ளது. இதில், போட்டியாளர்களை விஞ்சும் மதிப்புடன் தங்களது மாடல்களை நிலைநிறுத்தும் முனைப்பில் கார் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், ரெனோ கார் நிறுவனம் டஸ்ட்டர் மட்டுமின்றி, கேப்ச்சர் என்ற அதனைவிட பிரிமீயம் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலையும் நிலைநிறுத்தி உள்ளது.

புதிய பொலிவுடன் விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர்!

இந்த நிலையில், ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியின் பிஎஸ்6 மாடல் அறிமுகம் குறித்த விபரத்தை காடிவாடி தளம் வெளியிட்டுள்ளது. அதில், ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியின் 1.5 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலானது இந்த மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ: கொரோனா வைரஸ் பரவாது... மும்பையை கலக்கும் ஆட்டோக்களில் அப்படி ஒரு ஸ்பெஷாலிட்டி... என்னனு தெரியுமா?

புதிய பொலிவுடன் விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர்!

ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியும் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியிலும் ஒரே அடிப்படையிலான மாடல்கள்தான். அண்மையில் நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் பிஎஸ்6 மாடலானது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய பொலிவுடன் விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர்!

எனவே, ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை கிடைத்த தகவல்களின்படி, 1.5 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் மாடலில் கேப்ச்சர் வருவது உறுதியாகி இருக்கிறது. ஆனால், அறிமுக சமயத்தில்தான் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு கேப்ச்சர் எஸ்யூவியில் வழங்கப்படுமா என்பது தெரியவரும்.

MOST READ: பென்ஸ் காரை ரோட்டில் நிறுத்தி விட்டு மாட்டு வண்டியில் ஆபீஸ் போன தொழிலதிபர்! எல்லாரும் ஆடிப்போய்டாங்க

புதிய பொலிவுடன் விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர்!

ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியில் வழங்கப்பட இருக்கும் 1.5 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 254 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய பொலிவுடன் விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர்!

இந்த இரண்டு எஞ்சின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு இடம்பெறும். அத்துடன், 1.3 லிட்டர் பெட்ரோல் மாடலில் 8 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் தேர்வும் இடம்பெற வாய்ப்புள்ளது.

MOST READ: போலீஸால் இனி கல்லா கட்ட முடியாது... அப்படி ஒரு சூப்பரான மூவ்... என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

புதிய பொலிவுடன் விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர்!

புதிய பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின்கள் தேர்வு தவிர்த்து, வடிவமைப்பில் சில மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், டெயில் லைட்டுகள், மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்ட்டெட் கார் தொழில்நுட்பம் ஆகியவை இடம்பெறும் என தெரிகிறது.

புதிய பொலிவுடன் விரைவில் வருகிறது ரெனோ கேப்ச்சர்!

இதனிடையே, வெளிநாடுகளில் வெளியிடப்பட்டுள்ள புதிய ரெனோ கேப்ச்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடலானது இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். ரெனோ கேப்ச்சர் எஸ்யூவிக்கு நேரடியான போட்டியாளர்களாக நிஸான் கிக்ஸ், கியா செல்டோஸ் உள்ளிட்ட மாடல்கள் உள்ளன. பிஎஸ்4 மாடலைவிட சற்றே கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
The Renault Captur BS6 is expected to launch in India sometime during this month. The upcoming Captur SUV is expected to be a petrol-only variant with manual and automatic transmission options.
Story first published: Wednesday, June 10, 2020, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X