அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ரெனோ கேப்ச்சர் வெளியீடு!

புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலின் படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவி வெளியீடு!

கடந்த மார்ச் மாதம் ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியின் புதிய மாடல் குறித்த விபரங்கள் வெளியானது. தற்போது இந்த கார் பற்றிய முழுமையான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது புதுப்பொலிவுடன் வந்தாலும், இந்த கார் ரெனோ - நிஸான் கூட்டணியின் BO+ என்ற கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சில மாற்றங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவி வெளியீடு!

புதிய க்ரோம் க்ரில் அமைப்பு, அலாய் வீல்கள், இரட்டை வண்ணக் கலவையுடன் மாற்றங்களை பெற்றிருக்கிறது. இதனால், வெளிப்புறத் தோற்றம் புதுப்பொலிவுடன் வசீகரிக்கிறது.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவி வெளியீடு!

இந்த காரின் உட்புறத்தில் 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. மேலும், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்வதுடன், ரெனோ கனெக்டெட் கார் தொழில்நுட்பத்துடன் மேம்பட்டுள்ளது.

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவி வெளியீடு!

கருப்பு வண்ண இன்டீரியர், போஸ் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், தரமான உட்புற பாகங்களுடன் வசீகரிக்கிறது. இந்த காரில் 360 டிகிரி கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹை ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவி வெளியீடு!

விரைவில் ரஷ்யாவில் விற்பனைக்கு செல்ல இருக்கும் இந்த புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரை வழங்கும். அதேபோன்று, இதில் வழங்கப்பட இருக்கும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் தேர்வில் வர இருக்கிறது.

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவி வெளியீடு!

கருப்பு வண்ண இன்டீரியர், போஸ் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், தரமான உட்புற பாகங்களுடன் வசீகரிக்கிறது. இந்த காரில் 360 டிகிரி கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹை ஸ்பீடு அலர்ட் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

அதிக சிறப்பம்சங்களுடன் புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவி வெளியீடு!

புதிய ரெனோ கேப்ச்சர் எஸ்யூவியின் விலை சற்றே கூடுதலாக நிர்ணயிக்கப்படும். அடுத்த ஓரிரு மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும். கொடுக்கும் பணத்திற்கு அதிக சிறப்பம்சங்கள் கொண்ட மாடலாக நிலைநிறுத்தப்படும் என்பதால், இந்தியர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Most Read Articles
மேலும்... #ரினால்ட் #renault
English summary
The 2020 Renault Captur has been unveiled in the Russian market. The new model is expected to make its way into the Indian market sometime during this year. The 2020 Captur features few changes to the interior and exterior of the SUV and a new engine as well.
Story first published: Friday, May 22, 2020, 19:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X