ரெனோ க்விட், ட்ரைபர், டஸ்ட்டர் கார்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்!

கொரோனா சூழலை மனதில் வைத்து வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்களை ரெனோ கார் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ரெனோ க்விட், ட்ரைபர், டஸ்ட்டர் கார்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்!

கொரோனா பிரச்னையால் தேசிய ஊரடங்கு தொடர்ந்த அமலில் உள்ளது. தொற்று குறைவான பகுதிகளில் கார் விற்பனை மீண்டும் துவங்கப்பட்டுவிட்டாலும், ஷோரூமிற்கு வருவதற்கு வாடிக்கையாளர் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

ரெனோ க்விட், ட்ரைபர், டஸ்ட்டர் கார்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்!

மேலும், வேலை இழப்பு, சம்பள குறைப்பு போன்ற நடவடிக்கைகளும் கார் வாங்க திட்டமிட்டிருந்தோரை திட்டத்தை ஒத்திப்போட வைத்துள்ளது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை எப்படியாவது கவர்ந்து, கார் விற்பனையை அதிகரித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் கார் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

MOST READ: ஆஹா, ஓஹோ, அற்புதம்... உல்லாச கப்பல் போல மாற்றப்பட்ட 56 ஆண்டுகள்பழமையான டாடா பஸ்

ரெனோ க்விட், ட்ரைபர், டஸ்ட்டர் கார்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்!

அந்த வகையில், ரெனோ கார் நிறுவனம் தனது பிரபல கார் மாடல்களுக்கு தள்ளுபடி மற்றும் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. ரெனோ ட்ரைபர், க்விட் மற்றும் டஸ்ட்டர் எஸ்யூவிகளுக்கு ரூ.60,000 வரை டிஸ்கவுண்ட் பெறும் வாய்ப்புள்ளது.

ரெனோ க்விட், ட்ரைபர், டஸ்ட்டர் கார்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்!

ரெனோ க்விட் காருக்கு அதிகபட்சமாக ரூ.35,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில், ரூ.10,000 லாயல்டி போனசாகவும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் வாடிக்கையாளர்கள் பெறும் வாய்ப்புள்ளது. மேலும், கார்ப்பரேட் போனஸாக ரூ.4,000 மற்றும் ஊரக பகுதி வாடிக்கையாளர்கள், விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

MOST READ: தந்தைக்கு பிறந்த நாள்... ஒரே நேரத்தில் இரண்டு சூப்பர் கார்களுடன் சர்ப்ரைஸ் கொடுத்த சாதாரண இளைஞர்... எப்படி தெரியுமா?

ரெனோ க்விட், ட்ரைபர், டஸ்ட்டர் கார்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்!

ரெனோ ட்ரைபர் எம்பிவி காருக்கு ரூ.30,000 வரை தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது. இந்த மாடலுக்கு ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.10,000 வரை லாயல்டி போனசாகவும் வழங்கப்படும். கார்ப்பரேட் போனசாக ரூ.7,000 வரையிலும், ஊரக பகுதி வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரெனோ க்விட், ட்ரைபர், டஸ்ட்டர் கார்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்!

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கு ரூ.60,000 வரை டிஸ்கவுண்ட் பெறும் வாய்ப்புள்ளது. ரூ.15,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.25,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.20,000 வரை லாயல்டி போனசாகவும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். கார்ப்பரேட் நிறுவன பணியாளர்களுக்கு ரூ.20,000 வரை டிஸ்கவுண்ட் பெறும் வாய்ப்பும், ஊரக வாடிக்கையாளர்கள் ரூ.10,000 வரை சிறப்பு தள்ளுபடியாக பெறும் வாய்ப்பும் உள்ளது.

MOST READ: அமெரிக்க ஹெலிகாப்டர்களை வைத்து சீனாவின் கண்ணை குத்த இந்தியா ரெடி!

ரெனோ க்விட், ட்ரைபர், டஸ்ட்டர் கார்களுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்!

இந்த ஆஃபர் வரும் ஜூன் 30ந் தேதி வரை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். இந்த ஆஃபர் குறித்த கூடுதல் விபரங்களை அருகாமையிலுள்ள ரெனோ கார் ஷோரூமை அணுகி தெரிந்துகொள்ளலாம்.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault India has announced special offers, discounts and benefits on their three popular models in the Indian market: Kwid, Triber and Duster. All three models will receive a number of benefits and offers worth up to Rs 60,000, depending on the model and variant.
Story first published: Saturday, June 6, 2020, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X