டஸ்டர் எஸ்யூவி காரில் புதிதாக டர்போ-பெட்ரோல் என்ஜின்- விற்பனையை அதிகரிக்க ரெனால்ட்டின் புதிய வியூகம்

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ரெனால்ட், டஸ்டர் எஸ்யூவி மாடலின் புதிய ஆற்றல்மிக்க வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. டஸ்டர் டர்போ என அழைக்கப்படும் இந்த புதிய வேரியண்ட்டை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

டஸ்டர் எஸ்யூவி காரில் புதிதாக டர்போ-பெட்ரோல் என்ஜின்- விற்பனையை அதிகரிக்க ரெனால்ட்டின் புதிய வியூகம்

டஸ்டரின் இந்த புதிய வேரியண்ட் பெயருக்கு ஏற்றாற்போல் புதிய டர்போ-பெட்ரோல் என்ஜினை மட்டுமில்லாமல் சில காஸ்மெட்டிக் அப்டேட்களையும் பெற்றுள்ளது. மிக விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள இந்த டர்போ வேரியண்ட் ஆனது முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

டஸ்டர் எஸ்யூவி காரில் புதிதாக டர்போ-பெட்ரோல் என்ஜின்- விற்பனையை அதிகரிக்க ரெனால்ட்டின் புதிய வியூகம்

அதனை தொடர்ந்து மிக விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனாவினால் தற்போது தான் டஸ்டரின் இந்த ஆற்றல்மிக்க வேரியண்ட் அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய டர்போ வேரியண்ட்டில் ‘எச்ஆர்13' 1.3 லிட்டர், 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

டஸ்டர் எஸ்யூவி காரில் புதிதாக டர்போ-பெட்ரோல் என்ஜின்- விற்பனையை அதிகரிக்க ரெனால்ட்டின் புதிய வியூகம்

இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 156 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த என்ஜின் ஏன் ஆற்றல்மிக்கது என கூறுகிறோம் என்றால், இந்த என்ஜின் அமைப்பில் நிஸான் ஜிடி-ஆர் சூப்பர்காரின் அதே சிலிண்டர் கோட்டிங் தொழிற்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.

டஸ்டர் எஸ்யூவி காரில் புதிதாக டர்போ-பெட்ரோல் என்ஜின்- விற்பனையை அதிகரிக்க ரெனால்ட்டின் புதிய வியூகம்

இதுமட்டுமின்றி சிறப்பான செயல்திறனிற்காக வேறுப்பட்ட ட்யூல் வால்வு டைமிங் அம்சத்தையும் இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டுள்ளது. ரெனால்ட்-நிஸான்-மிட்சுபிஷி மற்றும் டைம்லர் நிறுவனங்களின் கூட்டணியில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘எச்ஆர்13' 1.3 லிட்டர் என்ஜின் ஆனது முதன்முதலாக 2017 டிசம்பர் அறிமுகப்படுத்தப்பட்டது.

டஸ்டர் எஸ்யூவி காரில் புதிதாக டர்போ-பெட்ரோல் என்ஜின்- விற்பனையை அதிகரிக்க ரெனால்ட்டின் புதிய வியூகம்

மெர்சிடிஸ்-பென்ஸ், ரெனால்ட், நிஸான் மற்றும் டேசியா உள்ளிட்ட நிறுவனங்களது தயாரிப்பு கார்களில் பொருத்தப்பட்டு வரும் இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள 2020 நிஸான் கிக்ஸ் மாடலிலும் வழங்கப்பட்டு வருகிறது.

டஸ்டர் எஸ்யூவி காரில் புதிதாக டர்போ-பெட்ரோல் என்ஜின்- விற்பனையை அதிகரிக்க ரெனால்ட்டின் புதிய வியூகம்

ரெனால்ட் நிறுவனம் இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை நிலையாகவும், சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கூடுதல் தேர்வாகவும் வழங்கவுள்ளது. ஆனால் இந்த என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் டஸ்டர் மாடலின் டாப் ட்ரிம்களுக்கு மட்டுமே கொடுக்கப்படவுள்ளன.

டஸ்டர் எஸ்யூவி காரில் புதிதாக டர்போ-பெட்ரோல் என்ஜின்- விற்பனையை அதிகரிக்க ரெனால்ட்டின் புதிய வியூகம்

இந்த புதிய டர்போ-பெட்ரோல் என்ஜின், பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்படாததால் நிறுத்தப்பட்ட கே9கே டீசல் என்ஜினிற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ளது. தற்சமயம் டஸ்டர் எஸ்யூவி கார் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

டஸ்டர் எஸ்யூவி காரில் புதிதாக டர்போ-பெட்ரோல் என்ஜின்- விற்பனையை அதிகரிக்க ரெனால்ட்டின் புதிய வியூகம்

அதிகப்பட்சமாக 105 பிஎச்பி மற்றும் 142 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஏற்கனவே கூறியதுபோல் புதிய பெட்ரோல் என்ஜின் தேர்வு மட்டுமில்லாமல் சில காஸ்மெட்டிக் மாற்றங்களையும் டஸ்டர் மாடலில் ரெனால்ட் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

டஸ்டர் எஸ்யூவி காரில் புதிதாக டர்போ-பெட்ரோல் என்ஜின்- விற்பனையை அதிகரிக்க ரெனால்ட்டின் புதிய வியூகம்

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்ப்ட்டிருந்த டஸ்டர் காரிலேயே கொண்டுவரப்பட்டிருந்த இந்த மாற்றங்களில் முன்பக்க க்ரில், ஃபாக் விளக்கு ஹௌசிங் உள்ளிட்டவற்றில் சிவப்பு நிறம் புதியதாக வழங்கப்பட்டிருப்பது, டெயில்கேட்டின் மத்தியில் டஸ்டர் முத்திரை போன்றவை அடங்குகின்றன.

டஸ்டர் எஸ்யூவி காரில் புதிதாக டர்போ-பெட்ரோல் என்ஜின்- விற்பனையை அதிகரிக்க ரெனால்ட்டின் புதிய வியூகம்

மற்றொரு கவனித்தக்க மாற்றமாக 17 இன்ச்சில் ட்யூல்-டோன் அலாய் சக்கரங்களை புதிய டஸ்டர் கார் பெற்றிருந்தது. ரெனால்ட் நிறுவனத்தின் தனித்துவமான மாடலாக டஸ்டர் விளங்கினாலும், புதிய அறிமுக கார்களால் கணிசமான விற்பனை எண்ணிக்கையை பெற முடியாமல் தவித்து வருகிறது. ஆனால் இந்த நிலையினை புதிய டர்போ-பெட்ரோல் என்ஜின் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
New Renault Duster Turbo Petrol launch Soon
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X