கிகர் எஸ்யூவி மூலமாக மில்லியன் சாதனை... பெரும் கணக்கு போட்டு காய் நகர்த்தும் ரெனோ!

புதிய கிகர் எஸ்யூவி மூலமாக இந்தியாவில் மில்லியன் சாதனையை விரைவாக எட்டுவதற்கு ரெனோ கார் நிறுவனம் திட்டம் போட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகக் காணலாம்.

கிகர் எஸ்யூவி மூலமாக மில்லியன் சாதனை... பெரும் கணக்கு போட்டு காய் நகர்த்தும் ரெனோ!

அதிக சந்தைப் போட்டி நிறைந்த இந்தியாவின் சப்-காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் கிகர் என்ற புதிய மாடலுடன் களமிறங்க உள்ளது ரெனோ கார் நிறுவனம். கிகர் எஸ்யூவியின் கான்செப்ட் மாடல் நேற்று இந்தியர்களின் பார்வைக்கு சமூக வலைதளம் மூலமாக கொண்டு வரப்பட்டது.

கிகர் எஸ்யூவி மூலமாக மில்லியன் சாதனை... பெரும் கணக்கு போட்டு காய் நகர்த்தும் ரெனோ!

புதிய ரெனோ கிகர் எஸ்யூவியின் டிசைன் இந்திய கார் பிரியர்களை எளிதில் கவரும் அமைந்துள்ளது. மேலும், அதிக சந்தைப் போட்டி இருந்தாலும், மிக சவாலான விலையில் புதிய கிகர் எஸ்யூவியை களமிறக்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க ரெனோ திட்டம் போட்டுள்ளது.

கிகர் எஸ்யூவி மூலமாக மில்லியன் சாதனை... பெரும் கணக்கு போட்டு காய் நகர்த்தும் ரெனோ!

இந்த நிலையில், கிகர் எஸ்யூவி வெளியீட்டு நிகழ்வின்போது பேசியுள்ள ரெனோ நிறுவனத்தின் பசிபிக் பிராந்திய தலைவர் ஃபேப்ரிஸ் கேம்போலிவ் கூறுகையில்," இந்தியாவில் 6.50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ரெனோ கார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

கிகர் எஸ்யூவி மூலமாக மில்லியன் சாதனை... பெரும் கணக்கு போட்டு காய் நகர்த்தும் ரெனோ!

தற்போதைய நிலையில் இருந்து கிகர் எஸ்யூவி வேறுபட்ட அனுபவத்தை கொடுக்கும். மேலும், கிகர் மூலமாக விரைவாக இந்தியாவில் ஒரு மில்லியன் விற்பனை இலக்கை எட்டுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கிகர் எஸ்யூவி மூலமாக மில்லியன் சாதனை... பெரும் கணக்கு போட்டு காய் நகர்த்தும் ரெனோ!

புதிய கிகர் எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் மாடலாக வர இருக்கிறது. இந்த எஸ்யூவி ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிகர் எஸ்யூவி மூலமாக மில்லியன் சாதனை... பெரும் கணக்கு போட்டு காய் நகர்த்தும் ரெனோ!

மேலும், புதிய கிகர் எஸ்யூவியில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த எஸ்யூவி மிகவும் சிறப்பான டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது.

கிகர் எஸ்யூவி மூலமாக மில்லியன் சாதனை... பெரும் கணக்கு போட்டு காய் நகர்த்தும் ரெனோ!

இந்த காரில் எல்இடி பகல்நேர விளக்குககள், 19 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் என பல நவீன அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிகர் எஸ்யூவி மூலமாக மில்லியன் சாதனை... பெரும் கணக்கு போட்டு காய் நகர்த்தும் ரெனோ!

புதிய ரெனோ கிகர் எஸ்யூவி முதலாவதாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்னையில் உள்ள ஆலையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. க்விட், ட்ரைபர் கார்களை தொடர்ந்து இந்தியாவுக்காக ரெனோ கார் நிறுவனம் உருவாக்கி இருக்கும் மூன்றாவது கார் மாடல் கிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault Eyes 1 Million Sales Milestone In India with Kiger SUV.
Story first published: Thursday, November 19, 2020, 10:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X