Just In
- 5 hrs ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 6 hrs ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 7 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 8 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ட்ரைபருக்கு மவுசு குறையுது... வீழ்ச்சி பாதையில் ரெனால்ட்... கை கொடுத்து தூக்கி விட வருகிறது கிகர்...
கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் எவ்வளவு கார்களை விற்பனை செய்துள்ளது என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎஸ்-6 சகாப்தத்தில் ரெனால்ட் இந்தியா நிறுவனம் மொத்தம் 3 கார்களை மட்டுமே விற்பனையில் வைத்துள்ளது. 3 மாடல்கள் மட்டுமே கைவசம் உள்ள நிலையிலும், மாதந்தோறும் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் டாப்-10 பட்டியலில் ரெனால்ட் இடம்பெற்று விடுவது சிறப்பான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

நடப்பாண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில், ஹோண்டா, டொயோட்டா, எம்ஜி, ஃபோர்டு மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஆகிய நிறுவனங்களுக்கு முன்னதாக ரெனால்ட் நிறுவனம் 6வது இடத்தை பிடித்துள்ளது. ரெனால்ட் நிறுவனத்திற்கு அதன் பிரபலமான கார்களான க்விட் மற்றும் ட்ரைபர் ஆகியவை நல்ல விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்துள்ளன.

நடப்பாண்டு நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ரெனால்ட் நிறுவனத்தின் கார் என்ற பெருமையை க்விட் பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 4,956 க்விட் கார்களை ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 4,182 க்விட் கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தன. இது 19 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ரெனால்ட் கார்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது ட்ரைபர். கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ரெனால்ட் நிறுவனம் 6,071 ட்ரைபர் கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பரில் இந்த எண்ணிக்கை வெறும் 4,809 ஆக சரிந்துள்ளது. இது 21 சதவீத வீழ்ச்சியாகும்.

மூன்றாவது மற்றும் கடைசி இடத்தில் டஸ்டர் உள்ளது. ரெனால்ட் ட்ரைபரை போலவே, ரெனால்ட் டஸ்டரும் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நடப்பாண்டு நவம்பர் மாதம் ரெனால்ட் நிறுவனம் வெறும் 416 டஸ்டர் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு நவம்பரில் 505 டஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 18 சதவீத வீழ்ச்சியாகும்.

ஒட்டுமொத்தமாக ரெனால்ட் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 10,181 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 10,882 கார்களை ரெனால்ட் விற்பனை செய்திருந்தது. கடந்தாண்டு நவம்பருடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு நவம்பரில் ரெனால்ட் நிறுவன கார்களின் விற்பனை 6 சதவீதம் குறைந்துள்ளது.

ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் வலுவாக காலூன்ற முடிவு செய்துள்ளது. அதற்கு ஏற்பதான் ட்ரைபர் காரை மிக சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வந்தது. ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாக இருந்து வந்த ட்ரைபர் காரின் விற்பனை சமீப காலமாக தடுமாறி வருகிறது. எனினும் ரெனால்ட் நிறுவனம் அடுத்ததாக விற்பனைக்கு கொண்டு வரவுள்ள கிகர் விற்பனையில் சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் சவால் நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ரெனால்ட் கிகர் நிலைநிறுத்தப்படவுள்ளது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் சமீபத்தில் விற்பனைக்கு வந்த நிஸான் மேக்னைட் உள்ளிட்ட கார்களுக்கு இது போட்டியாக இருக்கும்.