கியா சொனெட்டிற்கு போட்டியாக வரும் புதிய ரெனோ கிகர்.. கான்செப்ட் மாடலே சும்மா நச்சுனு இருக்கு!

விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள ரெனோ கார் நிறுவனத்தின் புதி காம்பேக்ட் எஸ்யூவியின் கான்செப்ட் மாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் டிசைன் முதல் பார்வையிலேயே வசீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. படங்களுடன் கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

அழகு ரசம் சொட்ட சொட்ட காட்சி தந்த ரெனோ கிகர் எஸ்யூவியின் கான்செப்ட்!

இந்தியாவில் சப்-காம்பேக்ட் எஸ்யூவி கார் மார்க்கெட்டில் கடும் சந்தைப் போட்டி ஏற்பட்டுள்ளது. எத்துனை மாடல்கள் வந்தாலும் அதற்கு வரவேற்பு இருப்பதால், அனைத்து கார் நிறுவனங்களும் இந்த சந்தையில் களமிறங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.இந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக ரெனோ கார் நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யவியுடன் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது.

அழகு ரசம் சொட்ட சொட்ட காட்சி தந்த ரெனோ கிகர் எஸ்யூவியின் கான்செப்ட்!

கிகர் என்ற பெயரில் இந்த புதிய சப்-காம்பேக்ட் ரக எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது ரெனோ கார் நிறுவனம். இதனிடையே, இந்திய வாடிக்கையாளர்கள் மற்றும் எஸ்யூவி பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், தனது கிகர் எஸ்யூவியின் கான்செப்ட் மாடலை இன்று வெளியிட்டுள்ளது.

அழகு ரசம் சொட்ட சொட்ட காட்சி தந்த ரெனோ கிகர் எஸ்யூவியின் கான்செப்ட்!

முதல் பார்வையிலேயே எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் வகையில் இதன் டிசைன் அம்ங்கள் அமைந்துள்ளது. இதன் தயாரிப்பு நிலை மாடலானது இந்த கான்செப்ட் மாடலின் 80 சதவீத அம்சங்களை ஒத்திருக்கும் என்று ரெனோ தெரிவித்துள்ளது. எனவே, இந்த புதிய எஸ்யூவி எல்லோரின் கவனத்தையும் சுண்டி இழுத்துள்ளது.

அழகு ரசம் சொட்ட சொட்ட காட்சி தந்த ரெனோ கிகர் எஸ்யூவியின் கான்செப்ட்!

விரைவில் வர இருக்கும் நிஸான் மேக்னைட் காரும், இந்த புதிய ரெனோ கிகர் எஸ்யூவியும் ஒரே கட்டமைப்புக் கொள்கையின் கீழ்தான் உருவாக்கப்பட்டுள்ளது. சிஎம்எஃப் ஏ ப்ளஸ் என்ற கட்டமைப்புக் கொள்கையில்தான் புதிய ரெனோ கிகர் உருவாகி இருக்கிறது.

அழகு ரசம் சொட்ட சொட்ட காட்சி தந்த ரெனோ கிகர் எஸ்யூவியின் கான்செப்ட்!

முகப்பில் ரெனோ கார்களின் தனித்துவமான க்ரில் மற்றும் லோகோ கொடுக்கப்பட்டு இருக்கிறது. க்ரில் அமைப்புக்கு மேலாக மெல்லிய எல்இடி விளக்கு பட்டை கொடுக்கப்பட்டு இருக்கிறது. பம்பர் அமைப்பில் மூன்று அறைகள் கொண்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டர் இடம்பெறுகிறது.

அழகு ரசம் சொட்ட சொட்ட காட்சி தந்த ரெனோ கிகர் எஸ்யூவியின் கான்செப்ட்!

வலிமையான பம்பர் அமைப்பு, பிரம்மாண்டமான வீல் ஆர்ச்சுகல், முப்பரிமாண தோற்றத்திலான C வடிவ டெயில் லைட் க்ளஸ்ட்டர், ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவை இந்த காரின் டிசைனை அசத்தலாக காட்டுகிறது. தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட நவீன கால அம்சங்களுடன் வரும் என்று உறுதியாக நம்பலாம்.

அழகு ரசம் சொட்ட சொட்ட காட்சி தந்த ரெனோ கிகர் எஸ்யூவியின் கான்செப்ட்!

இந்த காரில் இடம்பெற இருக்கும் எஞ்சின் தேர்வுகள் பற்றிய தகவல் இல்லை. எனினும், நிஸான் மேக்னைட் எஸ்யூவியில் கொடுக்கப்பட உள்ள அதே 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் இந்த எஸ்யூவியிலும் எதிர்பார்க்கலாம்.

அழகு ரசம் சொட்ட சொட்ட காட்சி தந்த ரெனோ கிகர் எஸ்யூவியின் கான்செப்ட்!

இதில், சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டர்போ பெட்ரோல் எஞ்சின் 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம்.

அழகு ரசம் சொட்ட சொட்ட காட்சி தந்த ரெனோ கிகர் எஸ்யூவியின் கான்செப்ட்!

அடுத்த ஆண்டு முதல் பாதியில் புதிய ரெனோ கிகர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்பு இருக்கிறது. தனது பங்காளி நிஸான் மேக்னைட் மட்டுமின்றி, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட சப்-காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுடன் போட்டி போடும். ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் வரும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
French car maker, Renault has revealed Kiger sub-compact SUV concept through its social platform in India today.
Story first published: Wednesday, November 18, 2020, 16:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X