புதிய ரெனால்ட் கிகர் காரின் முன்பகுதி இவ்வாறு தான் இருக்கும்... வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...

ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள கிகர் மாடல் மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய ரெனால்ட் கிகர் காரின் முன்பகுதி இவ்வாறு தான் இருக்கும்... வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...

வரும் பண்டிக்கை காலத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் ரெனால்ட் கிகர் மாடல் இதற்கு முன்பும் பல முறை இந்திய சாலையில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் எல்லாம் கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் தான் காட்சியளித்தது.

புதிய ரெனால்ட் கிகர் காரின் முன்பகுதி இவ்வாறு தான் இருக்கும்... வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...

ஆனால் தற்போதைய சோதனை ஓட்டத்தில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி மாடலின் முன்புற பகுதி மறைப்பு எதுவுமின்றி தெளிவாக தென்படுகிறது. இதுகுறித்து ஸ்ப்ரிண்ட்வீல்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களின் மூலம் கார் பிளவுப்பட்ட வடிவில் பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகள் மற்றும் மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்களை கொண்டிருப்பதை அறிய முடிகிறது.

புதிய ரெனால்ட் கிகர் காரின் முன்பகுதி இவ்வாறு தான் இருக்கும்... வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...

இதனால் இந்த சோதனை கார் கிகர் மாடலின் டாப் வேரியண்ட்டாக இருக்க வாய்ப்புள்ளது. இதன் ஹெட்லைட் க்ளஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் க்விட் மாடலை விடவும் ப்ரீமியம் தரத்தில் காட்சியளிக்கிறது. ஹெட்லேம்ப்களுக்கான ஹௌசிங் இதன் சர்வதேச மாடலில் உள்ளதை போன்று மூன்று பீம்களுடன் உள்ளது.

புதிய ரெனால்ட் கிகர் காரின் முன்பகுதி இவ்வாறு தான் இருக்கும்... வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...

மற்ற ஹைலைட் அம்சங்களாக V-வடிவிலான முன்புற க்ரில் ஆனது இரட்டை கிடைமட்ட சில்வர் ஸ்லாட்களுடன் ரெனால்ட் ப்ராண்ட்டின் பேட்ஜ்ஜை கொண்டுள்ளது. மொத்த தோற்ற அளவில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் இதே சிஎம்எஃப்-ஏ+ ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்ட ட்ரைபர் மாடலை காட்டிலும் சற்று அகலமானதாக உள்ளது.

புதிய ரெனால்ட் கிகர் காரின் முன்பகுதி இவ்வாறு தான் இருக்கும்... வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...

உட்புறத்தில் இந்த கார் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சில கண்ட்ரோல்களுடன் பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், பெரியதாக 8 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயிண்ட் சிஸ்டம், ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் உள்ளிட்டவற்றை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ரெனால்ட் கிகர் காரின் முன்பகுதி இவ்வாறு தான் இருக்கும்... வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...

அதேபோல் இயக்க ஆற்றலுக்கு ரெனால்ட் நிறுவனம் புதிய கிகர் காரில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டர்போசார்ஜ்டு என்ஜின்களை தேர்வாக வழங்கும் என தெரிகிறது. இதில் மேனுவல் அல்லது சிவிடி ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 95 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்படலாம்.

புதிய ரெனால்ட் கிகர் காரின் முன்பகுதி இவ்வாறு தான் இருக்கும்... வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...

அதேநேரம் பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரெனால்ட் நிறுவனம் புதிய கிகர் மாடலின் எக்ஸ்ஷோரூம் விலையை காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் உள்ள மற்ற கார்களுக்கு போட்டியாக நிர்ணயிக்கும்.

புதிய ரெனால்ட் கிகர் காரின் முன்பகுதி இவ்வாறு தான் இருக்கும்... வெளிக்காட்டிய புதிய ஸ்பை படங்கள்...

இந்த வகையில் ரூ.5.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சம் வரையில் விலையினை இந்த கார் பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் தற்சமயம் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ஹூண்டாய் வென்யூ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்டவை பிரபலமான மாடல்களாக உள்ளன.

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Upcoming Renault Kiger (HBC) Front Design Revealed In New Spy Shot
Story first published: Wednesday, July 1, 2020, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X