Just In
- 5 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 6 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 7 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 8 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
முதல் முறையாக இணையத்தில் கசிந்தது ரெனால்ட் கிகர் காரின் புகைப்படம்... மலிவு விலை மேக்னைட் காரின் போட்டியாளன்!
ரெனால்ட் நிறுவனம் தயாரித்து வரும் கிகர் காரின் புகைப்படங்கள் இணையத்தின் வாயிலாக வெளிவந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

மிக விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ரெனால்ட் நிறுவனத்தின் புதுமுக காரான கிகர் மாடலின் புகைப்படம் இணையத்தின் வாயிலாக கசிந்துள்ளது. இக்காரின் புகைப்படம் இணையத்தில் கசிவது இதுவே முதல் முறையாகும். தற்போது கசிந்திருக்கும் புகைப்படமானது, பேடென்ட் (patent) எனப்படும் முன் மாதிரி மாடலின் புகைப்படம் ஆகும்.

அண்மையில் விற்பனைக்கு அறிமுகமான நிஸான் நிறுவனத்தின் மிலவு விலை காரான மேக்னைட் மாடலுக்கு போட்டியளிக்கும் வகையிலேயே இக்கார் இந்தியாவில் களமிறக்கப்பட உள்ளது. 2021ம் ஆண்டில் இக்காரின் அறிமுகம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இம்மாதிரியான சூழ்நிலையிலேயே இக்காரின் பக்கம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்ற வகையில் பேடென்ட் புகைப்படங்கள் கசிந்துள்ளன. தற்போது கசிந்திருக்கும் இப்படங்கள் ரெனால்ட் கிகர், மிகவும் கவர்ச்சியான உருவத்தில் விற்பனைக்கு வர இருப்பதை உறுதி செய்துள்ளது.

மெல்லிய இழை போன்ற எல்இடி டிஆர்எல் மின் விளக்கு, மூன்று புள்ளிகளைப் போன்ற ஹெட்லேம்ப் உள்ளிட்டவை கிகரின் முன்பகுதியில் இடம்பெற இருப்பதையும் அது உறுதிப்படுத்தியுள்ளது. அந்த அம்சங்கள் காருக்கு கூடுதல் கவர்ச்சியைச் சேர்க்கின்ற வகையில் இடம்பெற்றிருக்கின்றன.

இவற்றுடன், கிகர் காருக்கு மேலும் அழகு சேர்க்கின்ற வகையில் தனித்துவமான தோற்றம் கொண்ட பம்பர் மற்றும் கிரில் உள்ளிட்ட அணிகலன்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதேபோன்று பக்கவாட்டு பகுதியிலும் கணிசமான அழுகப்படுத்தும் வேலை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதனால், கவர்ச்சிக்கு குறைச்சலின்றி கிகர் காட்சியளிக்கின்றது.

இதனையே தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன. இதன் உருவம் தற்போது விற்பனையில் இருக்கும் ரெனால்ட் க்விட் மாடலைப் போன்று தென்படுகின்றது. ஆனால், க்விட் காரைக் காட்டிலும் கூடுதல் கவர்ச்சியான அம்சங்களைப் பெற்ற காராகவே இது விற்பனைக்கு வரவிருக்கின்றது. இதனையே இக்கார் பற்றி வெளிவரும் தகவல்கள் உறுதி செய்துள்ளன.

ரெனால்ட் நிறுவனம், அதன் சிஎம்எஃப்-ஏ ப்ளஸ் பிளாட்பாரத்தில் வைத்தே கிகர் காரை வடிவமைத்து வருகின்றது. இந்த பிளாட்பாரம் குறைந்த விலையில், நவீன ரக கார்களை உருவாக்க உதவும். எனவேதான் இக்கார் மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்கார் நிஸான் மேக்னைட் காருக்கு மட்டுமின்றி கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, மாருதி சுசுகியின் விட்டாரா ப்ரெஸ்ஸா மற்றும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ஆகிய கார்களுக்கு போட்டியாக அமைய இருக்கின்றது. இக்காரின் விலை மற்றும் எஞ்ஜின் விபரங்கள் பற்றிய தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மிக விரைவில் அனைத்து தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.