தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இருந்து விலகியது ரெனோ கிகர் எஸ்யூவி!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புதிய ரெனோ கிகர் காம்பேக்ட் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இருந்து விலகியது ரெனோ கிகர் எஸ்யூவி!

கொரோனா பிரச்னையால் பெரும் பாதிப்புகளை வாகனத் துறை சந்தித்து வருகிறது. பல நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் சப்ளை பெறுவதில் எழுந்த சிக்கல்கள் தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில், ரெனோ கார் நிறுவனத்தின் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடலுக்கு கொரோனாவால் அறிமுகமே பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இருந்து விலகியது ரெனோ கிகர் எஸ்யூவி!

கிகர் என்ற புத்தம் புதிய சப்-காம்பேக்ட் எஸ்யூவியை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக களமிறக்க ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால், தற்போது இந்த புதிய காருக்கான உதிரிபாகங்களை பெறுவதில் நடைமுறை சிக்கல்கள் நீடித்து வருகிறது.

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இருந்து விலகியது ரெனோ கிகர் எஸ்யூவி!

இதனால், புதிய கிகர் எஸ்யூவியின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ரெனோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராம் மமிலப்பல்லே தெரிவித்துள்ளார்.எனினும், வரும் நவம்பர்- டிசம்பர் இடையில் இதன் கான்செப்ட் மாடல் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார்.

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இருந்து விலகியது ரெனோ கிகர் எஸ்யூவி!

கிகர் எஸ்யூவி தயாராக இருந்தபோதிலும், உதிரிபாகங்களை பெறுவதில் தொடர்ந்து சிக்கல் இருப்பதால், அடுத்த ஆண்டு முதல் காலாண்டு காலத்தில் புதிய கிகர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று வெங்கட்ராம் உறுதி செய்துள்ளதாக மோட்டார்பீம் தள செய்தி தெரிவிக்கிறது.

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இருந்து விலகியது ரெனோ கிகர் எஸ்யூவி!

இதனிடையே, கிகர் அறிமுகம் தள்ளிப்போவதால் ஏற்படும் விற்பனை இழப்பை சரிகட்ட இயலுமா என்ற கேள்விக்கு, க்விட் மற்றும் ட்ரைபர் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், சமாளிக்க முடியும் என்று வெங்கட்ராம் தெரிவித்துள்ளார்.

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இருந்து விலகியது ரெனோ கிகர் எஸ்யூவி!

புதிய ரெனோ கிகர் எஸ்யூவி ரெனோ - நிஸான் கூட்டணியின் CMF-A+ கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வரும் என தெரிகிறது. 5 ஸ்பீடு மேனுவல், ஏஎம்டி மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இருந்து விலகியது ரெனோ கிகர் எஸ்யூவி!

ஸ்பை படங்களில் மூன்று அறை அமைப்புடைய புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், கருப்பு வண்ண டேஷ்போர்டு, 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறுவது தெரிய வந்துள்ளது.

Image Courtesy: Kleber Silva/Behance

Most Read Articles

மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Renault has postponed the much awaited Kiger SUV launch in India by early next year.
Story first published: Tuesday, September 29, 2020, 19:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X